search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரவு"

    • கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
    • பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், குறிப்பிட்ட பிரி வினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

    இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

    காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அச்சம் தெரிவித்தனர். அட்வகேட் ஜெனரல், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில் நீதி மன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.

    அதேபோல, தலைமை குற்றவியல் வக்கீலும் கோவில் திறக்கப்பட்டால் பாதுகாப்புக்கு காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர். எவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் பூஜைகள் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.

    கோவிலில் பூஜைகள் செய்ய பூசாரி ஒருவரை நியமிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிவிட வேண்டும். எவரையும் கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

    சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கலாம்எ. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அப்போது கோவிலை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்து விசாரணையை ஜூன் 10-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • அனைவரிடமும் காணொலி காட்சி மூலம் நட்டா உரையாற்றினார்.
    • தேர்தல் அட்டவணை வெளியானதும் ஒவ்வொரு எம்.பி.யும் வாக்காளர்களை தேடி செல்ல வேண்டும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக தொடங்கி இருக்கும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தூக்கம் பார்க்காமல் இரவு-பகலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் சுமார் 5 மணி நேர ஆலோசனையில் பிரதமர் மோடி, உள் துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு உள்பட முக்கிய முடிவுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன.

    இதைத் தொடர்ந்து நேற்று நட்டா அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர் ஆலோசனை மேற்கொண்டார். பாரதிய ஜனதா கட்சியில் பாராளுமன்ற இரு அவைகளிலும் மொத்தம் 378 எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.

    அவர்கள் அனைவரிடமும் காணொலி காட்சி மூலம் நட்டா உரையாற்றினார். பாராளுமன்ற தேர்தல் பணிகளை தினமும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அது மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியின் 378 எம்.பி.க்களும் அமைப்பு ரீதியி லான தேர்தல் பணிகளில் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 378 எம்.பி.க்களின் சமூக வலைதளங்களை கையாள்பவர்களையும் நட்டா இந்த கூட்டத்தில் அழைத்து பேசினார்.

    நமோ ஆப் மூலம் முக்கிய தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும் அவற்றை மக்களிடம் தவறாமல் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நட்டா அறிவுரை வழங்கினார்.

    தேர்தல் அட்டவணை வெளியானதும் ஒவ்வொரு எம்.பி.யும் வாக்காளர்களை தேடி செல்ல வேண்டும் என்றும் நட்டா கேட்டுக் கொண்டார். அவர் நேற்று 3 கட்டங்களாக பா.ஜ.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    முதல் கட்டத்தில் 126 எம்.பி.க்களுடனும் 2-வது கட்டத்தில் 132 எம்.பி.க்களுடனும் ஆலோசித்தார். மீண்டும் அடுத்த வாரமும் இத்தகைய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கி உள்ளதால் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மின் தொடர்பான புகார்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்து உள்ளது. மேலும் மின்ன கத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்துக்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சினையை 5 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சினைகள், டிரான்ஸ்பார்மர் பிரச்சினைகளை 10 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும் என மின்சார வாரிய அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.
    • தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டை சேர்ந்தவர் பீமாராவ். இவர் கடந்த 2021-ம் ஆண்டு லாஸ்பேட்டை கொட்டுப் பாளையத்தில் உள்ள தனியார் மதுக்கடையில் 6 பீர் பாட்டில் வாங்கினார்.

    அதில் 2 பாட்டில் காலாவதியாக இருந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.

    சோதனை முடிவில் புதுவை மாவட்ட நுகர்வோர் தீர்வு ஆணையத்தில் மனு தாக்கல் செய்து, தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு அமர்வு தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர், மதுபான கடை ரூ.75 ஆயிரத்து 240 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • வழக்கில் அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தே திக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    மதுரை:

    திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து, அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.

    இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்வதற்காக இன்று நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமான மாவட்ட கோர்ட்டு உத்தரவுகளை அமலாக்கதுறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டு, வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தே திக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    • கடும் பனியால் மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காலை 9 மணிக்கு முன்பு எந்த பள்ளியும் திறக்கப்பட கூடாது.

    புதுடெல்லி:

    வடஇந்திய பகுதிகளில் கடுமையான குளிர்கால சூழல் காணப்படுகிறது. இதனால், டெல்லி, பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் கடும் குளிரான சூழலில் அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.

    இதுபற்றி டெல்லி கல்வி துறை வெளியிட்ட செய்தியில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் மாணவர்கள் அனைவரும் இன்று (15.01.2024) முதல் அவர்களுடைய பள்ளிகளுக்கு வரவேண்டும். இதில், நர்சரி, தொடக்க பள்ளிகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    எனினும், கடுமையான பனிபடர்ந்த சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காலை 9 மணிக்கு முன்பு எந்த பள்ளியும் திறக்கப்பட கூடாது. மாலை 5 மணிக்கு பின்னர் எந்த வகுப்பும் கூடாது. அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அந்த உத்தரவு தெரிவிக்கின்றது.

    குளிரான சூழல் அதிகரித்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் கவுதம புத்த நகரின் கல்வி துறை, நர்சரி முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை (16-ந்தேதி) வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    • எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
    • 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுவதால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

    அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற இருக்கும் முகவர்களின் கூட்டம் தொகுதி வாரியாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.

    இதேபோல் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் கட்சியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இப்போது மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

    இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில் வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) மாவட்ட கழகங்கள் நடத்தும் மாவட்ட அளவிலான "சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு" நடைபெறுகிறது.

    இப்பயிற்சி வகுப்பில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணவி, மகளிர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்களை நியமிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
    • புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

    சென்னை:

    ரெயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 202 உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கோரி தட்சிண ரெயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், கோரிக்கையை நிராகரித்து, கடந்த டிசம்பர் 19-ந்தேதி உத்தரவிட்டது.

    இந்த 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்களை நியமிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

    இந்நிலையில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என கடந்த டிசம்பர் 20-ந்தேதி உத்தரவிட்டது.

    இதற்கிடையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, அவர்களை பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தட்சிண ரெயில்வே ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் கும ரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 202 ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஒப்பந்த ஊழியர்களை நியமித்தால், அது இந்த வழக்கை பயனற்றதாக்கி விடும் என்பதால், புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே நிர்வாகம் தரப்பில், மனுதாரர் சங்க உறுப்பினர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதில் நியமிக்கப்பட உள்ளவர்களின் தேர்வு நடவடிக்கைகள் 2023-ம் ஆண்டு மார்ச் மாதமே தொடங்கிவிட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற மனுதாரர்கள் கோரிக்கையை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்துள்ளதால், அவர்களை நீக்கி விட்டு, புதிய ஒப்பந்த ஊழியர்கள் 60 நாட்களுக்கு என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    ரெயில்வே நிர்வாகம் தரப்பில் முன் வைக்கப்பட்ட இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவை ரெயில்வே நிர்வாகம் மீறியுள்ளதாக கூறினர்.

    பின்னர், புதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மருத்துவமனைகளில் உதவியாளர்கள் பற்றாக்குறை இருந்தால், அந்த இடங்களில், மனுதாரர் சங்க உறுப்பினர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி மறுநியமனம் வழங்கினால், அதன் மூலம் அவர்களுக்கு எந்த உரிமையும் கோர முடியாது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 3-வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

    • கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
    • தொகுதிகளில் வேலைகளையும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலமான கூட்டணியை அமைக்கும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் வகையில் கட்சிகள் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

    எனவே கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். தொகுதி பங்கீடு பற்றியும் அப்போது பார்த்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    கூட்டணி அமைந்தாலும் சரி. அமையாவிட்டாலும் சரி தேர்தலை சந்திக்கும் வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    தொகுதி நிலவரம், செல்வாக்கு, தி.மு.க.வுடன் நேரடி போட்டி ஏற்பட்டா லும் வெற்றி பெறும் ஆற்றல் ஆகியவற்றை ஆராய்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.

    இதுவரை 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டாராம். அதில் டாக்டர் ஜெயவர்தன் (தென்சென்னை), எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை), ராயபுரம் மனோ (வடசென்னை), மா.பா.பாண்டியராஜன் (விருது நகர்), செம்மலை (சேலம்), சந்திரசேகர் (கோவை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு), ராஜ்சத்யன் (மதுரை), கண்ணன் (திண்டுக்கல்), கே.பி.எம்.சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), ராதா கிருஷ்ணன் (கள்ளக்குறிச்சி), சண்முகநாதன் அல்லது சரவண பெருமாள் (தூத்துக்குடி) உள்பட 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்து விட்டாராம்.

    தான் வேட்பாளராக முடிவு செய்திருப்பவர்களை அந்த அந்த தொகுதிகளில் தேர்தல் வேலையை தொடங்கும்படி ரகசியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

    இதையடுத்து தொகுதி களில் வேலைகளையும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    • 15 நாட்களுக்குள் வங்கி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்.
    • இந்த கடித நகல் மாணிக்கம்தாகூர் எம்.பி.க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    கடந்த 18-ந்தேதி மாணிக்கம்தாகூர் எம்.பி. நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எழுதிய கடிதத்தில் விருதுநகரில் கடந்த 19-–ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சிக் கான அழைப்பிதழில் மாவட்ட எம்.பி.க்கள் பெயர் இடம் பெறவில்லை.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் மத்திய நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் நடை முறைக்குழு சார்பில் துணை செயலாளர் பாலகுரு அனுப்பியுள்ள கடி தத்தில், மத்திய நிதி அமைச்சகத்திற்கு இது குறித்து நிகழ்ச்சி நடத்திய வங்கி, 15 தினங்களுக்குள் விளக்கம் பெற்று அனுப்பு மாறும், இதுகுறித்த அறிக்கை நாடாளுமன்ற சபா நாயக ருக்கும் நிதி மந்திரிக்கும் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இதுகுறித்த தகவல் நாடா ளுமன்ற உறுப்பி னருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட் டுள்ளார்.

    இந்த கடித நகல் மாணிக்கம்தாகூர் எம்.பி.க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடவ டிக்கை எடுத்ததற்காக நாடாளுமன்ற சபாநாய கருக்கு நன்றி தெரிவித்து உள்ளதுடன் இது ஒரு சரியான பாடமாக அமையும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

    • புதுக்கோட்டை பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
    • மழைக்காலங்க ளில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூ டிய மாவட்ட அவசரக் கட்டுபாட்டு அறை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள பேரிடர்மேலாண்மை அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர்மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர்மாவட்ட கலெக்டர் கூறும்போது:-இந்த ஆய்வின்போது, மழை அளவின் பதிவேடு களையும், மழையினால் ஏற்படும் உயிரிழப்புகள், பாதிப்புகள், கட்டட இடிமானங்கள் உள்ளிட்ட வைகளின் விவரங்களையும் கேட்டறியப்பட்டது.மேலும் இதுபோன்ற பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தீவிர மழைக்காலங்களில் பொது மக்களை பேரிடர்க ளிலிருந்து காப்பாற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இந்நிலையில் பேரிடர்மே லாண்மை அலுவலகத்தின் அலைபேசிக்கு உதவி கோரி வரும் அழைப்புகளை உரிய முறையில் பரிசீலனை செய்து, விரைவாக நட வடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது.இடிந்துவிழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக எவ்வித இடையூறும் ஏற்ப டாத வகையில் அப்புறப்ப டுத்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், புயல், வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக 10 - பல்நோக்கு பேரிடர் மையக் கட்டிடங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயார்நிலையில் உள்ளன.மேலும், மழைக்காலங்க ளில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூ டிய மாவட்ட அவசரக் கட்டுபாட்டு அறை எண் - 1077, 04322-222207 ஆகிய கட்டணமில்லா தொலை பேசி எண்களைதொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க லாம். இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது, தனிவட்டாட்சி சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர்உடனிருந்தனர்.

    • பட்டா வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது.
    • இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    மதுரை

    மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளை யில் தாக்கல் செய்த மனு வில் கூறியிருப்பதாவது:-

    மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம் போக்கு இடத்தில் பல வரு டங்களாக வசித்து வருவதா கவும், தற்போது அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுப்பணி துறை யினர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு தடை விதித்து நத்தம் எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந் தது. அப்போது அரசு தரப் பில் மனுதாரர், புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்த ரவில், நீர் நிலையை ஆக்கி ரமித்து செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறு வது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடி யாது என கூறிய நீதிபதிகள் பட்டா வழங்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும் அரசு ஆவணங்க ளின்படி, புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும் பலர் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே பொதுப்பணித்து றையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை யும் சட்ட விதிகளுக்கு உட் பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    ×