search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் தனியார் விடுதிகளுக்கு போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு
    X

    கூட்டத்தில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பேசிய காட்சி.  

    திருப்பூர் தனியார் விடுதிகளுக்கு போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு

    • தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சந்தேகப்படும்படியான நபர்களை கண்காணிப்பதற்கு வசதியாக திருப்பூர் மாநகர எல்லைக்குள் உள்ள தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கமிஷனர் பிரபாகரன் பேசியதாவது:-

    லாட்ஜிகளில் உள்ளே வருபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்களின் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். தினமும் தங்கி செல்பவர்களின் விவரங்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அளிக்க வேண்டும்.அறையில் தங்கக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களின் விபரங்களை வாங்கி சேமித்து பராமரிக்க வேண்டும்.வாடிக்கையாளர்கள் அளிக்கும் தொலைபேசி எண் சரியானதுதானா எனஉறுதி செய்ய வேண்டும்.

    லாட்ஜ் வரவேற்பு அறையில்வாடிக்கையாளர்கள் முகம் தெளிவாக பதிவாகும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும்.

    அதேபோல் வாகன நிறுத்தும் இடங்களில் உள்ளகேமரா வாகன எண் தெளிவாக பதிவு செய்யும் வகையில் பொருத்தவேண்டும். 24x7 என்ற வகையில் கண்காணித்து பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும்.லாட்ஜிற்கு வரும் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் உடைமைகளைசோதனை செய்ய Baggage Scanner பொருத்த வேண்டும்.தனியார் தங்கும் விடுதிகளில் தங்கும் நபர்களின் முழுவிவரங்களையும் பதிவு செய்வது அவசியம். அவர்களின்அடையாள அட்டைகளைபெற வேண்டும். அதேபோல்லாட்ஜில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்கள், வேலையாட்கள்விவரங்களை அடையாள அட்டையுடன் வாங்கி வைத்து பராமரிக்க வேண்டும்.

    தங்கும் விடுதிகளில் தவிர்க்க வேண்டியவை

    லாட்ஜில் (சீட்டாட்டம், விபச்சாரம் மற்றும் மது அருந்த அனுமதிஅளித்தல்) ஆகிய சட்ட விரோதமான செயல்கள் எதையும் அனுமதிக்ககூடாது.லாட்ஜில் தங்கக்கூடிய நபரின் அடையாள அட்டை மட்டுமே வாங்கவேண்டும். வேறு ஒரு நபரின் அடையாள அட்டை வாங்கி வைக்ககூடாது.உரிய அடையாள அட்டை அளிக்காத நபர்களை தங்க அனுமதிக்க கூடாது.வாடிக்கையாளர்கள் லாட்ஜில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்எதையும் வைத்திருக்க அனுமதிக்க கூடாது. இது போன்ற விதிமுறைகளை கடைபிடிக்காத லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார்.கூட்டத்தில் துணைகமிஷனர்கள், உதவிகமிஷனர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×