search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுகர்வோர்"

    • நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (21-ந் தேதி) பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது.
    • மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி, அனைத்து துறையின் முதல்நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன், காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (21-ந் தேதி) பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிகிறார். பொது விநியோகத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
    • திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.

    அவிநாசி:

    அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின்கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    இதில், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.

    இதில், மின்நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி தெரிவித்துள்ளாா். 

    • ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மின்வாரிய செயற்பொறியாளர் கலை வேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மின் பகிர்மான வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி ஜூன் மாதத்துக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கி ழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை செயற்பொ றியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை யில் நடைபெறுகிறது.

    எனவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரச ன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், தஞ்சை வடக்கு, திருக்கா னூர்பட்டி, வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மருங்குளம், மெலட்டூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி பகுதி அலுவலகங்களை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
    • மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை கோர்ட் சாலையில் உள்ள செயற்பொ றியாளர் அலுவலகத்தில் நாளை ( செவ்வாய்க்கிழமை) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை தாங்குகிறார்.

    எனவே தஞ்சை நகர கோட்டத்திற்குட்பட்ட தெற்கு வீதி, வடக்கு வீதி, மேலவீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ்கார்னர், அருளானந்தநகர், பர்மாகா லனி, நிர்மலாநகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய ஹவுசிங்யூனிட், காந்திஜி ரோடு, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகுமான்நகர், ரெட்டிப்பா ளையம் சாலை, சிங்கபெரு மாள்கோவில், ஜெபமா லைபுரம், வித்யாநகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ்ப்பல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கட நகர், இனாத்து க்கான்பட்டி, நட்சத்திராநகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் பழவியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • இக்கூட்டத்தில் பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் பங்கேற்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பழவியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் பங்கேற்றனர். கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறியிருப்பதாவது: மாம்பழம், அன்னாசி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் சப்போட்டா போன்ற பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிப் பொருட்களை தெளித்தோ பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், அதனை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலி, மயக்கம், வாந்தி, வயிற்றுபோக்கு, தலைசுற்றல் போன்றவை ஏற்படுவதுடன் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணியாகவும் இருக்கிறது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் ஆய்வின்போது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்து அழிக்கப்படுவதுடன் உடனடி அபாரதம் விதிக்கப்படும். மேற்குறிப்பிட்ட குற்றத்திற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யவும். 3 மாத காலம் வரை கடையை சீல் வைத்து வர்த்தகத்தை நிறுத்திவைக்கப்படும்.

    நுகர்வோருக்கு வழங்கப்படும் பழங்கள் பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும். மேலும் தரமற்ற கலப்பட உணவுகள் குறித்து பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு ஏதுவாகவும் புதிய இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலம் தெரிவிக்கலாம் எனவும், புகார்தாரரின் விவரங்கள் மற்றும் ரகசியம் பாதுகாக்கப்படுவதுடன் புகார் அளித்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்யப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு பேசினார். 

    • குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியை சேர்ந்த டாக்டர் தம்பதியினர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.

    இதற்காக தங்களது சொத்து பத்திரத்தை அடமானமாக பதிவு செய்து கொடுத்துள்ளனர். இந்த கடன் முழுவதையும் செலுத்தி விட்டு பின்பு வேறு ஒரு தனியார் நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளனர். ஆனால் முதலில் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனம் அடமானமாக கொடுத்த அசல் பத்திரத்தை திருப்பி கொடுக்கவில்லை.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர்கள் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.1 லட்சம் வழக்கு செலவு தொகை ரூபாய் 7,500 மற்றும் திருப்பி கொடுக்காத அசல் பத்திரத்தின் நகல் பத்திரத்தை உரிய வழி முறைகளை பின்பற்றி ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    • கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
    • கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிக்குமார் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் வருகிறது.

    எனவே திருப்பூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்க வேண்டும். சிலிண்டர் ஏற்றி வரும் வாகனங்களில் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் சிலிண்டர் எடுத்துச் செல்லக்கூடாது. 5 வருடங்களுக்கு ஒருமுறை சிலிண்டர் வால்வு, கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • நுகர்வோர் பொருட்களின் தரம் அறிந்து வாங்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை வழங்கினார்.
    • தவறுகள் இருந்தால் அதே இடத்தில் சம்பந்தப் பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் தின விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜ சேகரன் தலைமை தாங்கி கூறியதாவது:-

    குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனை வருமே நுகர்வோர்தான். இத்தகைய நுகர்வோர் எந்த வகையிலும் அவர்கள் வாங்கும் பொருள்களினால் எவ்வகையிலும் பாதிப்புகள் ஏற்பட்டு விடக்கூடாது. அத னடிப்படையில் ஒவ்வொரு வரும் தங்களுக்கு தேவை யான பொருட்களை வாங் கும்போது பொருட்களின் தரம் குறித்த விவரம், அனுமதிக்கப்பட்ட காலம் ஆகியவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும்.

    தவறுகள் இருந்தால் அதே இடத்தில் சம்பந்தப் பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும்.தவறுகளை சுட்டிக்காட்டா மல் இருந்தால் மேலும் மேலும் தவறுகள் செய்வார் கள். பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகளை கேட்டறிந்து உரிய நியாயம் கிடைக்கும் வகையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

    அதுமட்டுமின்றி உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மூலம் நுகர்வோர் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிறிய கடையானாலும் சரி பெரிய நிறுவனமானாலும் சரி, நுகர்வோருக்கு தவறுகள் ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் உடனடியாக புகார் தெரிவிக்கும் பட்சத் தல் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்பான பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றினை மாவட்ட வரு வாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகரன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடைகள் ரூ.2 கோடியே 51 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
    • ஏலத்தை ரத்து செய்யக்கூடாது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்பினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் நல்லூர் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம் அளித்த மனுவில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூ மார்க்கெட் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகள் ரூ.2 கோடியே 51 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு அதிக தொகை வருவாயாக கிடைக்கும். எக்காரணத்தை கொண்டும் ஏலத்தை ரத்து செய்யக்கூடாது. அவ்வாறு ரத்து செய்தால் பொதுநலன் கருதி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.

    இதுபோல் மாநகராட்சி பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் தெரிவித்தார்.

    • பொருள்களின் விலை, காலாவதி நாள் பற்றி கூறி பொருள்களை வாங்கும்படி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • தேவையை தேடி வாங்குங்கள் . தேடி வரும் பொருளை வாங்கி குப்பை ஆக்காதீர்கள்

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மத்தியில் செயல்பட்டு வரும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் அமுதரசு தலைமையேற்று நுகர்வோர் யார், நுகர்வோரின் பொறுப்பு, கடமை பற்றி கூறி விழிப்புடன் இருக்க மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

    பட்டதாரி சமூக அறிவியல் ஆசிரியர் மகேஷ் நுகர்வோர் அமைப்பு முதன் முதல் தோன்றியது, நுகர்வோர் அமைப்புச் சட்டம், நுகர்வோரின் பாதுகாப்பு, பொருள்களின் விலை, காலாவதி நாள் பற்றி கூறி கவனமுடனும், கலப்படமற்ற பொருள்களை வாங்கும்படி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மன்ற பொறுப்பாசிரியர் இராஜாராம் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பற்றி கூறினார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - நுகர்வோருக்கு பில்லே ஆயுதம் என கூறி எந்த பொருள் வாங்கினாலும் ரசீது வாங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது .

    மேலும், விளம்பரங்கள் வியாபார யுக்தி, தள்ளுபடியும் இலவசங்களும் நம்மை கவரும் சக்தி. எனவே தேவையை தேடி வாங்குங்கள் . தேடி வரும் பொருளை வாங்கி குப்பை ஆக்காதீர்கள் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 9, 11 ஆம் வகுப்பு குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர் சக்திபாலா நன்றி கூறினார்.

    • மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவு
    • சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி நடவடிக்கை

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் வடகரையை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் சென்னை ஆவடியிலுள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் 14 பேர் அடங்கிய ஒரு குழுவாக அந்தமான் செல்ல பணம் செலுத்தியிருந்தார்.

    சுற்றுலா நிறுவனமும் இந்த 14 பேருக்கு விமான டிக்கெட் பதிவு செய்து அனுப்பியிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பயணம் செல்ல இயலவில்லை. இதனால் தாங்கள் செலுத்தியிருந்த பணத்தை திரும்பதர வேண்டுமென சுற்றுலா மற்றும் விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டனர்.

    அதற்கு விமான நிறுவனம் டிக்கெட்டுக்கான கட்டணத்தை சுற்றுலா நிறுவனத்திடம் திருப்பி கொடுத்து விட்டதாக மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பியுள்ளனர். உடனடியாக மீண்டும் சுற்றுலா நிறுவனத்திடம் தாங்கள் பயணம் செய்யாத விமான கட்டணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். சுற்றுலா நிறுவனம் ஒரு காசோலையை வழங்கியுள்ளது. ஆனால் பணமில்லாமல் இந்த காசோலை திரும்பி விட்டது.

    இதனால் பாதிப்படைந்த அவர்கள் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு பயணம் செய்யாத விமான கட்டணமான ரூ.1 லட்சத்து 65 ஆயிரம், நஷ்ட ஈடு ரூ.35 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்தை 1 மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • நுகர்வோர் பாதுகாப்பில் முன்னோடியாக திகழ தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • குறைதீர் ஆணைய நீதிபதி தெரிவித்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையினருக்கும், நில அளவை பதிவேடுகள் துறையினருக்கும் நுகர்வோர் சட்ட கல்வி பயிற்சி பட்டறை அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் கூறியதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் இயன்ற வரை அனைவருக்கும் நுகர்வோர் சட்டக் கல்வி பயிற்சி நடத்துவது என்ற அடிப்படையில் இதற்கான திட்டம் தொடங்கப்பட்டு அரசு அலுவலர்களுக்கும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வழங்கல் அலுவலகம் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த பயிற்சியில் கலந்து கொண்டுள்ள வருவாய்த் துறையினரும், நில அளவைகள் நில அளவை பதிவேடு துறையினரும் பொதுமக்கள் சேவை கட்டணம் செலுத்தி கேட்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இதன் மூலம் நுகர்வோர் பிரச்சனைகள் வழக்குகளாக மாறக்கூடிய நிலை தவிர்க்கப்படும். கடந்த 6 மாதங்களில் அரியலூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வருவாய்த்துறை மற்றும் நில அளவை பதிவேடுகள் துறையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு சில வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    தற்போது அரியலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் நில அளவை பதிவேடுகள் துறையினருக்கு எதிராக 15 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. கடந்த 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் அச்சட்டம் நீக்கப்பட்டு 1919 ஆம் ஆண்டு புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

    புதிய சட்டத்தின்படி நுகர்வோர் ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த தவறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க நுகர்வோர் ஆணையங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் பெரம்பலூரில் இருந்து அரியலூருக்கு மாற்றப்பட்டன.

    இவ்வாறு நிலுவையில் இருந்த வழக்குகள் 4 வழக்குகளை தவிர அனைத்தும் கடந்த ஆறு மாத காலத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நுகர்வோர் புகார் தாக்கல் செய்தால் குறைந்தபட்சம் 90 நாட்கள் அல்லது அதிகபட்சம் 150 நாட்களில் தீர்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நுகர்வோரை பாதுகாக்க அரசு ஊழியர்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டோர் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடம் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட கல்வியை மேம்படுத்த தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டம் நுகர்வோர் பாதுகாப்பில் முன்னோடி மாவட்டமாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×