என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தஞ்சையில் நாளை, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் தஞ்சையில் நாளை, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/31/1890514-11.webp)
தஞ்சையில் நாளை, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
தஞ்சாவூா்:
தஞ்சை மின்வாரிய செயற்பொறியாளர் கலை வேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மின் பகிர்மான வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி ஜூன் மாதத்துக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கி ழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை செயற்பொ றியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை யில் நடைபெறுகிறது.
எனவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரச ன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், தஞ்சை வடக்கு, திருக்கா னூர்பட்டி, வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மருங்குளம், மெலட்டூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி பகுதி அலுவலகங்களை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.