search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாட்சி"

    • சாட்சியை மிரட்டிய தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • தல்லாக்குளம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கல்மேடு, சவுந்தரபாண்டி நகரை சேர்ந்த ரவி என்பவரது மகன் முகேஷ் பாபு (வயது 24). சவர தொழிலாளி. இவர் நேற்று இரவு நாகனாகுளம் வாசுநகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை 3 பேர் கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த முகேஷ் பாபு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுரேஷ்குமார் ஆலோசனை பேரில், தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    முகேஷ்பாபு கடந்த 2019-ம் ஆண்டு விஸ்வநாத புரம் கபிலர் தெருவை சேர்ந்த சரத் பாண்டியன் (27) என்பவரை அரிவா ளால் வெட்டி உள்ளார். இதுதொடர்பாக கே.புதூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கடச்சனேந்தல் ஏ.ஆர். நகரை சேர்ந்த கவுரிசங்கர் மகன் ராம் பிரசாத் (23) என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் முகேஷ் பாபு, 'நீ சாட்சி சொல்லக்கூடாது' என்று ராம்பிரசாத்தை மிரட்டிய தாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் சவர தொழிலாளி முகேஷ் பாபுவை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் பிடித்து விசா ரணை நடத்தினர். இதில் அவர்கள் விஸ்வநாதபுரம், கபிலர் தெருவை சேர்ந்த சரத்பாண்டியன் (27), கடச்சனேந்தல் ஏ.ஆர். நகர் கவுரிசங்கர் மகன் ராம் பிரசாத் (23), பனங்காடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் கிஷோர் (23) என்பது தெரிய வந்தது. அவர்களை தல்லாக்குளம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்கடத்தல், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம், சாட்சி பாதுகாப்பு என மூன்றும், மனிதரின் அடிப்படை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பேசப்பட வேண்டிய முக்கிய காரணியாக உள்ளது.
    • உலகெங்கும் நடக்கும் ஆட்கடத்தல் மூலம் மனித உரிமை மீறல், பொருளாதார சுரண்டல் என பெரும் வியாபாரம் நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு அலையன்ஸ் தொண்டு நிறுவனம், சேவ் அறக்கட்டளை சார்பில் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு கூட்ட அரங்கில் ஆள்கடத்தல், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் மற்றும் சாட்சி பாதுகாப்பு திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி கருத்துரை வழங்கினார்.

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி பேசும்போது, 'ஆட்கடத்தல், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம், சாட்சி பாதுகாப்பு என மூன்றும், மனிதரின் அடிப்படை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பேசப்பட வேண்டிய முக்கிய காரணியாக உள்ளது. அரசு வக்கீல்கள், கூடுதல் அரசு வக்கீல்கள் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் குழுவின் பட்டியல் வக்கீல்கள் அனைவரும் இந்த நிகழ்வை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    தமிழ்நாடு அலையன்ஸ் தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் பாலமுருகன், உலகெங்கும் நடக்கும் ஆட்கடத்தல் மூலம் மனித உரிமை மீறல், பொருளாதார சுரண்டல் என பெரும் வியாபாரம் நடப்பது குறித்து பேசினார். தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய சட்ட உதவி மைய வக்கீல் டேவிட் சுந்தர் சிங், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் மற்றும் சாட்சி பாதுகாப்பு திட்டம் குறித்து பேசினார். அரசு வக்கீல்கள் மற்றும் பட்டியல் வக்கீல்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ×