என் மலர்

  நீங்கள் தேடியது "fake documents"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தந்தை பெயரில் உள்ள நிலங்களை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
  • தோட்டத்தில் இருந்த 30 குவிண்டால் மக்காச்சோளத்தையும் எடுத்துச் சென்று விட்டனர்.

  தேனி:

  தேனி கோபாலபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தனலெட்சுமி. இவரின் தந்தை பெயரில் உள்ள நிலங்களை போலி ஆவணங்கள் தயாரித்து சிவக்குமார், நித்தீஸ்குமார், குருமூர்த்தி, ராஜமாணிக்கம், ரெங்கநாயகி, ஜெயந்தி உள்பட 11 பேர் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

  மேலும் அந்த நிலத்தில் மக்காச்சோளம் அறுவடை செய்து கொண்டு இருந்தபோது அவர்கள் அத்து மீறி நுழைந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.தோட்டத்தில் இருந்த 30 குவிண்டால் மக்காச்சோளத்தையும் எடுத்துச் சென்று விட்டனர்.

  இது குறித்து பழனிசெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தனலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சொத்துகள் கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.
  • அரியலுாரைச் சேர்ந்த மரிய சூசை வியாகுலம் என்பவர் உதவியுடன், போலி ஆவணம் தயாரித்தார்.

  திருப்பூர் :

  திருப்பூர் மூலனுாரைச் சேர்ந்தவர் செல்லதுரை (31) ஈரோடு தனியார் நிதி நிறுவனத்தில் அவர் பெற்ற கடனுக்காக அவர் ஈடு வைத்த சொத்துகள் கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.

  இதனையடுத்து செல்லதுரை அரியலுாரைச் சேர்ந்த மரிய சூசை வியாகுலம் என்பவர் உதவியுடன், போலி ஆவணம் ஒன்றை தயாரித்தார். அதில், இசைவு தீர்ப்பாணையத்தில் அந்த சொத்து விவகாரத்தில் சமரசம் செய்து, கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவை நகலை பிரகாஷ், (45) என்பவர் மூலம் தாராபுரம் சப் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார். விசாரணையில் இது போலி எனத் தெரிய வந்தது. போலி ஆவணங்கள் மூலம் கோர்ட்டை மோசடி செய்ததாக, சப் கோர்ட் கிளார்க் சுதா, தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக பிரகாஷ் மற்றும் மரிய சூசை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  மேலும் தலைமறைவாக உள்ள செல்லதுரையை போலீசார் தேடுகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொன்னேரி அருகே போலி ஆவணம் மூலம் தம்பியின் நிலத்தை விற்ற மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
  பொன்னேரி:

  பொனேரியை அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் செம்புலிவரத்தில் தங்கி தாம்பரம் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி காண்டீபன் கொளத்தூரில் தொழில் செய்து வருகிறார்.

  இந்தநிலையில் பெரும்பேடு கிராமத்தில் உள்ள காண்டீபனுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் கார்த்திகேயன் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதாக தெரிகிறது.

  இதுபற்றி அறிந்த காண்டீபன் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இது பற்றி நடவடிக்கை எடுக்க பொன்னேரி போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டது.

  இதையடுத்து பொன்னேரி போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போடி அருகே போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரித்த 9 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
  மேலசொக்கநாதபுரம்:

  போடி அருகே உள்ள தேவாரம் டி.கே.வி. பள்ளி தெருவை சேர்ந்தவர்கள் ஜெயராமன்(65), தங்கராஜ் (53), பாபு (39). இவர்களுக்கு தேவாரம் வட்ட ஓடை புலத்தில் புஞ்சை நிலம் இருந்துள்ளது.

  அந்த நிலத்தை தேவாரம் பகுதியை சேர்ந்த ராஜா (37), இவரது தந்தை ஈஸ்வரன் (60), இதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் (62), ராஜகோபால் (70), கனகராஜ் (54), ராகவன் (60), பாஸ்கரன் (60), தங்கம் (60), மாணிக்கம் (60) ஆகியோர் சேர்ந்து பத்திர எழுத்தர் முருகன் (50) என்பவர் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து கடந்த 2011-ம் ஆண்டு ராஜாவின் பெயரில் பத்திரம் பதிவு செய்து சொத்துக்களை அபகரித்துள்ளனர்.

  இதுகுறித்து ஜெயராமன் தரப்பினர் தேவாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் தேவாரம் போலீசார் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில் இந்த வழக்கில் தொடர்புடைய மாணிக்கம் இறந்து விட்டார். மீதியுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

  இதனையடுத்து நீதிபதி மணிவாசகன் தனது தீர்ப்பில், போலியான ஆட்கள், ஆவணங்கள் மூலம் சொத்தை அபகரிக்க முயன்ற ராஜாவுக்கு நான்கு பிரிவுகளின் கீழ் தலா இரண்டு ஆண்டுகள் வீதம் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ஈஸ்வரன், கனகராஜ் ஆகியோருக்கு மூன்று பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வீதம் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், ஜெயராமன், ராஜகோபால், ராகவன், பாஸ்கரன், முருகன், தங்கம் ஆகியோருக்கு மூன்று பிரிவுகளின் கீழ் தலா 4 ஆண்டுகள் மற்றும் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பத்திரப்பதிவு அலுவலகங்களில் போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை பதிவு செய்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  தமிழ்நாட்டில் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

  இந்த அலுவலகங்களில் போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை பதிவு செய்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  சென்னையில்தான் இந்த மோசடி அதிகளவு நடந்திருப்பது பத்திரப்பதிவு துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து மதுரை சப்- ரிஜிஸ்டர் ஆபீஸ் மற்றும் திருநெல்வேலி மண்டலத்திலும் இந்த மோசடி அதிகளவு நடந்துள்ளது.

  இந்த ஆய்வின் புள்ளி விவரங்களின்படி போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழகம் முழுவதும் 2700 புகார்கள் பதிவாகி இருந்தன.

  இந்த மோசடிகள் அனைத்தும் 2011-ம் ஆண்டு முதல் 2017 வரை நடந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

  இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 1000 புகார்கள் வந்துள்ளன. சென்னை மண்டலத்தில் 64 சப்-ரிஜிஸ்டர் அலுவலகங்கள் நகரப் பகுதியிலும் மற்றவை காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் இயங்கி வருகின்றன. இந்த பதிவு அலுவலகங்களில்தான் அதிகளவு மோசடிகள் நடந்துள்ளன.

  சென்னையை தொடர்ந்து மதுரை மண்டலத்தில் 390 புகார்களும், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 125 புகார்களும், கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டலத்தில் 250 முறைகேடான சொத்து பதிவு செய்யப்பட்ட புகார்கள் பதிவாகி உள்ளன.

  சேலம் மண்டலத்தில் 240-ம், திருச்சியில்-225, வேலூரில் 170, கோவையில் 135, கடலூரில் 120 புகார்களும் பதிவாகி இருந்தன.

  சொத்துக்களை விற்க ‘பவர்’ கொடுத்து பின்னர் அதனை நீக்கியது போன்று இந்த மோசடி பதிவு நடைபெற்று இருப்பதாக மாவட்ட பதிவாளர்களுக்கு புகார்கள் வந்ததையடுத்து பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

  பெறப்பட்ட 2700 புகா ரில் 1100 புகார்கள் மீது விசாரணை நடத்தி ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டவுடன் அதனை தடை செய்து உண்மையான சொத்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலிய அரசிடம் போலி சான்றிதழ்கள் சமர்பித்தது தொடர்பாக தமிழம், கேரளாவை சேர்ந்த 22 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது.
  கோவை:

  தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த மாணவர்கள் சிலர் ஆஸ்திரேலியாவில் படித்து வருகின்றனர். ஒரு சிலர் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 22 பேர் ஆஸ்திரேலிய அரசிடம் சமர்பித்திருந்த சான்றிதழ்கள் போலியானவை என கூறப்படுகிறது.

  இதை கண்டறிந்த ஆஸ்திரேலிய அதிகாரிகள் 22 பேரின் விசாவை ரத்து செய்து அதற்கான நோட்டீசை மாணவர்களிடம் வழங்கி உள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால் 22 பேரும் உடனடியாக ஊர் திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் 3 தனியார் ஏஜென்சிகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் ஆவார்கள்.

  மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தினர் போலியாக தேசிய அங்கீகார வாரியத்தின் சான்றிதழ்களை வழங்கி தங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

  தற்போது ஆஸ்திரேலியாவில் தவித்து வரும் மாணவர்கள் விவசாய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களை அங்குள்ள இந்திய தூதரகம் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இதற்கிடையே மாணவர்களுக்கு போலி சான்றிதழ்கள் வழங்கிய ஏஜென்சிகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அசல் சான்றிதழ்களை மாணவர்கள் கொடுத்திருந்த நிலையில் அவர்களுக்கு போலி சான்றிதழ்கள் வழங்கியது ஏன்? எவ்வாறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன? அதில் நடந்த முறைகேடுகள் என்னென்ன? இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்-யார்? என விசாரணை நடைபெற்று வருகிறது.

  இதுகுறித்து போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் வங்கியில் போலி ஆவணம் கொடுத்து ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  மதுரை:

  மதுரை பாண்டியன் கிராம வங்கி மண்டல மேலாளர் சோமசுந்தரம் மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

  மதுரைரையச் சேர்ந்த ஜெயராஜ் அவரது மனைவி மங்களம் ஆகியோர் அரசரடியில் உள்ள எங்களது வங்கி கிளையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தனித்தனியாக கணக்கு வைத்திருந்தனர். இதில் ஜெயராஜ் ரூ.1 கோடியே 48 ஆயிரமும், மங்களம் ரூ.1 கோடியே 47 ஆயிரமும் டெபாசிட் செய்து இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் இறந்து விட்டனர். அவர்களது பணம் வங்கியிலேயே இருந்தது.

  இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜெயராஜ்-மங்களத்தின் மகள் சுகாசினி தனது பெற்றோரின் பணத்தை எடுப்பதற்காக போலியாக வாரிசு, இறப்பு சான்றிதழ்களை தயாரித்து அரசரடி வங்கி கிளையில் கொடுத்துள்ளார். இதற்கு அவரது கணவர் டேவிட் பிரதாப் சிங், அப்போது பணியில் இருந்த வங்கி உதவி மேலாளர் பாலசந்தர் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

  சமீபத்தில் வங்கி கணக்குகளை தணிக்கை செய்தபோது இந்த மோசடி தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  இந்த புகாரின் அடிப்படையில் சுகாசினி, அவரது கணவர், வங்கி மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாமக்கல் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை மோசடி செய்த விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  நாமக்கல்:

  நாமக்கல் அருகே உள்ள மணிக்கட்டிபுதூரை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு சொந்தமான 1,204 சதுர அடி நிலத்தை கடந்த 2009-ம் ஆண்டு நடராஜனின் சித்தப்பா பொன்னுசாமி (வயது 70), கூட்டு பட்டாவை வைத்து, போலியாக பட்டா மற்றும் இதர ஆவணங்களை தயார் செய்து, நாமக்கல் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் தூசூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் பெயருக்கு பத்திரபதிவு செய்து கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

  அதே ஆண்டு தூசூர் பாலசுப்பிரமணியம், அய்யாவு என்பவருக்கு பத்திரத்தை மாற்றி பதிவு செய்து உள்ளதாக தெரிகிறது. அதன்பிறகு நடராஜன், அவருடைய நிலத்தை வங்கியில் அடகு வைக்க முயற்சித்து, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரிசீலனை செய்தபோது, அந்த நிலம் பாலசுப்பிரமணியம் மற்றும் அய்யாவு என்பவர்கள் பெயரில் கிரயம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

  இது குறித்து நடராஜன் மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தார். அதன்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரபதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பத்திரப்பதிவை ரத்து செய்ய அவகாசம் கொடுத்து, இருவருக்கும் நோட்டீசு அனுப்பினர். ஆனால் அவர்கள் ரத்து செய்யவில்லை என கூறப்படுகிறது.

  இதையடுத்து இந்த மோசடி சம்பவம் குறித்து இணை சார்பதிவாளர் பத்மினி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவசாயி பொன்னுசாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். 
  ×