என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
தேனி அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி
- தந்தை பெயரில் உள்ள நிலங்களை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
- தோட்டத்தில் இருந்த 30 குவிண்டால் மக்காச்சோளத்தையும் எடுத்துச் சென்று விட்டனர்.
தேனி:
தேனி கோபாலபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தனலெட்சுமி. இவரின் தந்தை பெயரில் உள்ள நிலங்களை போலி ஆவணங்கள் தயாரித்து சிவக்குமார், நித்தீஸ்குமார், குருமூர்த்தி, ராஜமாணிக்கம், ரெங்கநாயகி, ஜெயந்தி உள்பட 11 பேர் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் அந்த நிலத்தில் மக்காச்சோளம் அறுவடை செய்து கொண்டு இருந்தபோது அவர்கள் அத்து மீறி நுழைந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.தோட்டத்தில் இருந்த 30 குவிண்டால் மக்காச்சோளத்தையும் எடுத்துச் சென்று விட்டனர்.
இது குறித்து பழனிசெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தனலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story