என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எழும்பூர் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.7 கோடி கடன்: 2 பெண்கள் கைது
- பெரம்பூர் மடுமா நகரை சேர்ந்த சரஸ்வதி, வியாசர்பாடியை சேர்ந்த ஜமீலா பேகம் ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
- இரண்டு பெண்களும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை எழும்பூரில் உள்ள வங்கி ஒன்றின் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் தங்களது வங்கியில் கடன் வாங்கிவிட்டு 2 பெண்கள் ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. போலி ஆவணங்கள் சமர்ப்பித்து ரூ. 7 கோடி வரை கடன் பெற்று வங்கிக்கு திரும்ப செலுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் , மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக பெரம்பூர் மடுமா நகரை சேர்ந்த சரஸ்வதி, வியாசர்பாடியை சேர்ந்த ஜமீலா பேகம் ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கூட்டு சேர்ந்து வீட்டு கடன் பெறுவதற்கு போலியான ஆவணங்கள் தயார் செய்து அதனை வங்கியில் சமர்ப்பித்து இருப்பது தெரிய வந்ததை எடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






