search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "union"

    • கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார்.
    • ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி, பரமேஸ்வரி, ரகுராமன், மாரிமுத்து, தாமஸ், பூல், ஜெயா, பியூலா ரத்தினம், நசரேன் மற்றும் அதிமுக உறுப்பினர் தானி ராஜ்குமார் உட்பட 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 45 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவஹர், ராஜா, கிறிஸ்டோபர் தாசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், மாலதி, மாலாதேவி, ஒன்றிய பொறியாளர் வெள்ளைப் பாண்டியன், சிவசங்கரன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சிதம்பரராஜ், ஜெயச்சந்திரா ராணி, முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பவானி நகராட்சி முன்பு ஏ.ஐ.டி.யு.சி உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பவானி:

    பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் கே.பி.நடராஜ், நகராட்சி சங்க துணை தலைவர் ஆர்.செல்லப்பன் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் குப்புராஜ், ரங்கநாதன், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உள்ளாட்சி தொழிலாளர்கள் குறைதீர் ஆணையம் அமைத்திட வேண்டும் எனவும், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களின் அவுட்சோர்சிங், தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் நகராட்சி சங்க தலைவர் மாதேஸ்வரன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் பாலமுருகன், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்புல்லாணியில் யூனியன் கூட்டம் நடத்தாததால் கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    • 60 நாட்களை கடந்தும் யூனியன் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி உள்பட 11 ஒன்றியங்கள் உள்ளன. யூனியன் கூட்டம் 60 நாட்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்பது அரசின் விதி.

    திருப்புல்லாணி ஒன்றியத்தில் 60 நாட்களை கடந்தும் யூனியன் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. இதனால் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அறிய முடியாத சூழ்நிலையில் கவுன்சிலர்கள் உள்ளனர்.

    இதுகுறித்து பெரி யபட்டினம் எஸ்.டி.பி.ஐ. கட்சி கவுன்சிலர் பைரோஸ் கான் கூறுகையில், திருப்புல்லாணி ஒன்றியத்தில் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பெரியபட்டினம் ஊராட்சியில் யூனியன் நிதியிலிருந்து இதுவரை எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை.

    ஒன்றிய கவுன்சிலர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு கூட்டத்திலும் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்கள் அனைத்தும் எழுத்து வடிவமாகவே உள்ளது. எந்த பணியும் நடைபெறாத நிலையில் பெரியபட்டினம் ஊராட்சி உள்ளது என்றார்.

    • கூட்டுறவு கடன் சங்கங்களில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
    • பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரைமண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வட்டியில்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்த ப்பட்டோர், சிறுபான்மை யினர்களுக்கு மிக குறைந்த வட்டியிலும், மாதத் தவணையை தவறாமல் செலுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லா கடனும், மகளிர் சுயஉதவிக் குழுக்கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் அச்சங்கத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்து வகைக் கடன்கள் குறித்த விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்ட விவசாயிகள் பயிர்க்கடன் பெற கணினி சிட்டா நகல், பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று, மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் கார்டு நகல், ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதரக்கடன்கள் பெற்று பயனடையலாம்.

    உறுப்பினரல்லாத விவசாயிகள், அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று உரிய பங்குத் தொகை நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து கடன்களைப் பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பயிர்க்கடன் வழங்கலில் சேவை குறைபாடுகள் இருந்தால் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநரை (7338721101), பொதுமேலாளரை (8300003601), உதவிபொது மேலாளரை(விவசாயம்) (8300003603) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் மற்றும் அதன் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள்/கணவனால் கைவிடப்பட்டவர்கள், தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோர் கடன் பெறுவதற்கு புதிய உறுப்பினர்களாகச் சேர்ந்து கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

    புதிய உறுப்பினர் சேர்க்கை குறைபாடு களுக்கு மண்டல இணைப்பதிவாளரை (7338721100), மதுரை சரக துணைப்பதிவாளரை (7338721103), உசிலம்பட்டி சரக துணைப்பதிவாளரை (7338721104) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஜெய்சங்கருக்கு வெளியுறவு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் பல்வேறு எம்.பி.க்கள் அமைச்சரவையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்நிலையில், மத்திய அமைச்சர்களுக்கான துறைகளின் விவரம் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:

    ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை 
    பியூஷ் கோயல் - ரயில்வே துறை
    சதானந்த கவுடா - ரசாயனம், உரத்துறை
    நிதின் கட்கரி - சாலை போக்குவரத்து துறை
    ஸ்மிருதி இரானி - மகளிர் நலத்துறை



    ரவிசங்கர் பிரசாத் - சட்டத்துறை, தகவல், மின்னணு தொழிற்துறை
    பிரகாஷ் ஜவ்டேகர்- சுற்றுச்சூழல், வனம், தகவல் ஒலிபரப்பு
    டாக்டர் ஹர்ஷ்வர்தன் - சுகாதாரத்துறை
    நரேந்திர சிங் தோமர் - விவசாய துறை அமைச்சர்
    முக்தார் அபாஸ் நக்வி - சிறுபான்மையினர் நலத்துறை

    இத்துடன், மத்திய இணை மந்திரிகளுக்கான துறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    குளித்தலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலைமறியலில் 78 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குளித்தலை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக குளித்தலை காந்திசிலை முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் ஊர்வலமாக வந்த போராட்டக்குழுவினர் குளித்தலை தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துச்செல்வன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் இலக்குவன் மறியலை தொடங்கி வைத்தார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 78 பேரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வைகநல்லூர் அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    குளித்தலையில் எல்.ஐ.சி ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி குளித்தலை எல்.ஐ.சி. அலுவலக வளாகத்தில் இச்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் குளித்தலை வட்ட கிளைத்தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகநாதன், முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவையில் இருந்து கேரளாவுக்கு 2-வது நாளாக இயக்கப்படவில்லை.
    கோவை:

    தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

    இந்த போராட்டத்துக்கு மாநில அரசு ஊழியர்கள், பஸ் தொழிலாளர்கள், பொதுத்துறை ஊழியர்கள் என பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.

    போராட்டம் காரணமாக நேற்று கோவை மாவட்டத்தில் வங்கி சேவை முடங்கியது. கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர், பி.எஸ்.என்.எல், எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எனினும் கோவை மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல ஓடியதால் பஸ் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை. அதே நேரம் கேரளாவில் வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமாக இருந்ததால் அங்கிருந்து கோவைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    இதனால் பாதுகாப்பு கருதி கோவையில் இருந்து கேரளாவுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. 2-வது நாள் போராட்டம் காரணமாக இன்றும் கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் உக்கடம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

    தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை ரெயில் நிலையத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்திலும், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பும், தபால் துறை ஊழியர்கள் வெரைட்டி ஹால் ரோட்டில் தலைமை தபால் நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
    ×