search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "local"

    • அரசு அலுவல–கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • 3-ந்தேதி(சனிக்கிழமை) அன்று பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவல–கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881 -ன் கீழ் வராது என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 3-ந்தேதி(சனிக்கிழமை) அன்று பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, வருகிற 3-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 2-ந் தேதி மற்றும் 3-ந் தேதி ஆகிய 2 நாட்களில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.

    நாமக்கல்:

    கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, வருகிற 3-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பிசிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    கடையேழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையையும் போற்றும் வகையில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17, 18 ஆகிய இரு நாட்களில் அரசு சாா்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படும்.

    அதன்படி நிகழாண்டில் வருகிற 2-ந் தேதி மற்றும் 3-ந் தேதி ஆகிய 2 நாட்களில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.

    இவ்விழாவின்போது, தமிழக அரசின் பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி, பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலா்க் கண்காட்சிகள், மூலிகைச் செடிகள் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன.

    இவ்விழாவிற்காக மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளா்கள் குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளதால், வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    மேலும், இந்த உள்ளூா் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் அடுத்த மாதம் 27-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    உள்ளூா் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சாா்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். மேலும், இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.

    எனவே, கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவிற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை தலைவா்கள் மற்றும் பணிபுரியும் அனைத்து பணியாளா்களும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
    • உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி பணி நாள்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    அதன்படி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது. இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் வராது என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி பணி நாளாக செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பரமத்தி வேலூர் வட்டார கிளை கூட்டம் மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு தொடர வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர், வெங்கமேட்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பரமத்தி வேலூர் வட்டார கிளை கூட்டம் மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி தலைமை வகித்தார். கபிலர்மலை ஒன்றிய தலைவர் மணிவண்ணன் வரவேற்றார்.

    பரமத்தி ஒன்றிய தலைவர் ரங்கசாமி, பரமத்தி ஒன்றிய பொருளாளர் பத்மாவதி, கபிலர்மலை ஒன்றிய பொருளாளர் முத்துசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டச் செயலாளர் சங்கர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். மாநில பொருளாளர் முருக செல்வராசன் இயக்க உரை ஆற்றினார்.

    கூட்டத்தில் ஓய்வூதிய திட்டத்தினை முழுமையாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு தொடர வேண்டும். மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை மற்றும் சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும்.

    நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வரும் 14-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெறும் கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தில் 100- க்கும் மேற்பட்ட ஆசிரிய- ஆசிரியைகள் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பரமத்தி ஒன்றிய செயலாளர் நன்றி கூறினார்.

    • பவானி நகராட்சி முன்பு ஏ.ஐ.டி.யு.சி உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பவானி:

    பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் கே.பி.நடராஜ், நகராட்சி சங்க துணை தலைவர் ஆர்.செல்லப்பன் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் குப்புராஜ், ரங்கநாதன், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உள்ளாட்சி தொழிலாளர்கள் குறைதீர் ஆணையம் அமைத்திட வேண்டும் எனவும், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களின் அவுட்சோர்சிங், தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் நகராட்சி சங்க தலைவர் மாதேஸ்வரன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் பாலமுருகன், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
    புதுக்கோட்டை:

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்தது. இதையொட்டி தடை செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தகுந்த மாற்று பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்டன.

    தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் (நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி) ஒப்படைக்க வேண்டும்.
    எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும். அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் வழங்க வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
    ×