சேலம் மாவட்டத்தில் 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை

சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி பணி நாள்.
சேலம் மாவட்டத்தில்  3-ந்தேதி உள்ளூர் விடுமுறை
Published on

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அதன்படி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது. இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் வராது என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி பணி நாளாக செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com