search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெங்கமேட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்   மன்ற  வட்டார கிளை கூட்டம்
    X

    வெங்கமேட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற வட்டார கிளை கூட்டம்

    • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பரமத்தி வேலூர் வட்டார கிளை கூட்டம் மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு தொடர வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர், வெங்கமேட்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பரமத்தி வேலூர் வட்டார கிளை கூட்டம் மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி தலைமை வகித்தார். கபிலர்மலை ஒன்றிய தலைவர் மணிவண்ணன் வரவேற்றார்.

    பரமத்தி ஒன்றிய தலைவர் ரங்கசாமி, பரமத்தி ஒன்றிய பொருளாளர் பத்மாவதி, கபிலர்மலை ஒன்றிய பொருளாளர் முத்துசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டச் செயலாளர் சங்கர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். மாநில பொருளாளர் முருக செல்வராசன் இயக்க உரை ஆற்றினார்.

    கூட்டத்தில் ஓய்வூதிய திட்டத்தினை முழுமையாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு தொடர வேண்டும். மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை மற்றும் சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும்.

    நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வரும் 14-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெறும் கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தில் 100- க்கும் மேற்பட்ட ஆசிரிய- ஆசிரியைகள் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பரமத்தி ஒன்றிய செயலாளர் நன்றி கூறினார்.

    Next Story
    ×