என் மலர்

  நீங்கள் தேடியது "aituc"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பவானி நகராட்சி முன்பு ஏ.ஐ.டி.யு.சி உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  பவானி:

  பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் கே.பி.நடராஜ், நகராட்சி சங்க துணை தலைவர் ஆர்.செல்லப்பன் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் குப்புராஜ், ரங்கநாதன், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  உள்ளாட்சி தொழிலாளர்கள் குறைதீர் ஆணையம் அமைத்திட வேண்டும் எனவும், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களின் அவுட்சோர்சிங், தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இதில் நகராட்சி சங்க தலைவர் மாதேஸ்வரன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் பாலமுருகன், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் பிரச்சார பேரியக்கம் நடைபெற்றது.
  இண்டூர்:

  மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் பிரச்சார பேரியக்கம் நடைபெற்றது. இதில் இந்தியாவை பாதுகாப்போம், இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் வேலூரில் தொடங்கியது.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை முடித்து வந்த பிரச்சார குழுவை வரவேற்கும் வகையில் தருமபுரி மாவட்ட எல்லையான சப்பானிப்பட்டியில் மாவட்ட செயலாளர் தேவராசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

  பிரச்சார குழுவில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர்ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நஞ்சப்பன், சேதுராமன், விவசாய சங்க மாநில செயலாளர் துரைமாணிக்கம், தேவதாஸ், தங்கவேல், திருநாவுக்கரசு, மாணவர் பெருமன்ற மாநில தலைவர் மவுன குணசேகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

  பிரச்சார குழுவினர் காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, நாகதாசம் பட்டி, பி.அக்ராகரம், பென்னாகரம், இண்டூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தனர். பின்னர் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

  அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்  பிரச்சார குழுவிற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமையிலும், தருமபுரியில் மாவட்ட செயலாளர் குமார் தலைமையிலும் பிரச்சார குழுவை வாழ்த்தி வரவேற்பு கொடுத்தனர். நேற்று காலை 11 மணிக்கு நல்லம்பள்ளியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சேலம் மாவட்டத்திற்கு பிரச்சாரக் குழு புறப்பட்டு சென்றது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.டி.யூ.சி.யும் இணைந்து அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி பிரச்சாரம் நடத்தினர்.
  கிருஷ்ணகிரி:

  அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.டி.யூ.சி.யும் இணைந்து அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி பிரச்சார இயக்கத்தை வேலூரில் தொடங்கியது. நேற்று காலை பர்கூரிலும், பிற்பகல் கிருஷ்ணகிரி பழையபேட்டையிலும் இந்த பிரச்சாரம் நடந்தது. 

  கிருஷ்ணகிரியில் நடந்த பிரச்சாரத்திற்கு முன்னாள் எம்எல்ஏ., ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மாதையன் கோரிக்கை குறித்து பேசினார். 

  இந்த பிரச்சாரத்தின் போது, நூறு ஆண்டுகளாக போராடி தொழிலாளர்கள் பெற்ற உரிமைகள் எல்லாம் பறிக்கப்படுகிறது. ஒவ்வொரு சட்டமாய் பறித்து, எந்த சட்டமும் தொழிலாளிக்கு பொருந்தாது என அண்மையில்ல் அரசு அறிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலவேலை முறை என்ற பெயரில் இனி தொழிலாளியை வேலைக்கு நியமிக்கும் போதே ஒரு ஆண்டுக்கு, இரண்டு ஆண்டுக்கு என காலத்தை நிர்ணயித்து நியமிக்கலாம். 

  அந்த காலம் முடிந்ததும் தானாகவே வேலை முடிந்துவிடும் என்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். மேலும் பாரதீய ஜனதாவின் தவறான கொள்கையால் தினமும் ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாத மோடி பதவி விலக வேண்டும். 

  சாராயம் காய்ச்சிய விஜய்மல்லாய்யாவிற்கு ரூ. 9 ஆயிரம் கோடி வங்கி கடன், வைரம் விற்ற நீரவ் மோடிக்கு ரூ. 11 அயிரத்து 400 கோடி வங்கி கடன், பத்து ரூபாய்க்கு பேனா விற்றவனுக்கு கூட ரூ. 4 ஆயிரம் கோடி வங்கி கடன். இந்த கடனை செலுத்தாமல் மத்திய அரசின் துணையுடன் அந்நிய நாடுகளில் ராஜ வாழ்க்கை. 10 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 

  நாடாளுமன்ற வாசலில் உண்ணாவிரம் இருந்தும் நேரில் பார்க்க ஒரு நிமிட நேரம் கூட ஒதுக்க முடியாத மோடி என்று கோஷங்கள் எழுப்பினர். இதில், மாநில துணை செயலாளர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் நஞ்சப்பன், விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் துரைமாணிக்கம், மாநில துணைத் தலைவர் தேவதாஸ், தேசிய குழு உறுப்பினர் சேதுராமன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, சிவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
  ×