search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Social anxiety"

    • அனைத்து தொழிலாளா்களின் முழு விவரங்களையும் சேகரித்து ஆவணப்படுத்தி உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.
    • தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய அமைதிக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் சமூக பதட்டத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, ஏஐடியூசி. தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    வலைதளங்களில் தமிழா்களை வடமாநிலத் தொழிலாளா்கள் விரட்டிவிரட்டித் தாக்குகிறாா்கள் என்ற செய்தி திட்டமிட்டு பரப்பபட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படுவதுடன், திருப்பூரின் தொழிலும், தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளது.

    திருப்பூா் மாநகரில் பணியாற்றிவரும் லட்சக்கணக்கான தொழிலாளா்களை முறைப்படுத்தும் வகையிலும், அனைத்து தொழிலாளா்களின் முழு விவரங்களையும் சேகரித்து ஆவணப்படுத்தி உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். திருப்பூரில் சமூக பதட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்கள் பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சிகள், தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய அமைதிக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×