என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய சேர்மன் ஜனகர் தலைமையில் நடைபெற்ற காட்சி.
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றம்
- கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார்.
- ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி, பரமேஸ்வரி, ரகுராமன், மாரிமுத்து, தாமஸ், பூல், ஜெயா, பியூலா ரத்தினம், நசரேன் மற்றும் அதிமுக உறுப்பினர் தானி ராஜ்குமார் உட்பட 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 45 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவஹர், ராஜா, கிறிஸ்டோபர் தாசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், மாலதி, மாலாதேவி, ஒன்றிய பொறியாளர் வெள்ளைப் பாண்டியன், சிவசங்கரன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சிதம்பரராஜ், ஜெயச்சந்திரா ராணி, முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.