search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.ஐ.டி.யு.சி"

    • ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் வண்ணாரப்பேட்டை ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    மத்திய அரசின் தொழி லாளர் கொள்கைகளை எதிர்த்தும், நான்கு சட்ட தொகுப்பை கைவிடக் கோரியும் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நெல்லை வண்ணாரப்பேட்டை ரவுண்டானாவில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    சாலை மறியல்

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சடையப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் 240 நாட்கள் பணி புரிந்தால் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும், எந்த பணி புரிந்தாலும் ரூ. 21 ஆயிரத்திற்கு குறையாமல் மாத சம்பளம் வழங்கிட வேண்டும், நல வாரியங்களில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு ரூ. 6 ஆயிரம் குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் நிர்வாகிகள் ரங்கன், பாலகிருஷ்ணன், உலகநாதன், கிருஷ்ணன், பாலு, செந்தில் முருகன், சுடலை கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வள்ளியூர்

    இதேபோல் வள்ளியூர் பழைய பஸ் நிலையதில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மணியன் தலைமையில் சேதுராமலிங்கம், முருகன், பாலன், கலை முருகன், சுதாகர், பன்னீர்செல்வம் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.

    • பவானி நகராட்சி முன்பு ஏ.ஐ.டி.யு.சி உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பவானி:

    பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் கே.பி.நடராஜ், நகராட்சி சங்க துணை தலைவர் ஆர்.செல்லப்பன் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் குப்புராஜ், ரங்கநாதன், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உள்ளாட்சி தொழிலாளர்கள் குறைதீர் ஆணையம் அமைத்திட வேண்டும் எனவும், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களின் அவுட்சோர்சிங், தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் நகராட்சி சங்க தலைவர் மாதேஸ்வரன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் பாலமுருகன், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×