search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி"

    • கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் வலியுறுத்தினார்.
    • ரூ.444.71 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    சாத்தூர் - நென்மேனி - நாகாலாபுரம் சாலையில் நெடுஞ்சாலை துறை மூலமாக பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரூ.30 கோடி மதிப்பீட்டில், 8 கி.மீ. தொலைவில் பக்தர்கள் சிரமமின்றி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.இதற்கான பணிகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பின்னர் சாத்தூர் நகராட்சியில் எம்.ஏ.சி பூங்காவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.444.71 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

    சாத்தூர் நகராட்சிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமாகவும் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து சிவகாசி அனுப்பங்குளத்தில் மின்வாரிய பணிகளையும், சிவகாசி ஆணையூர் பகுதிகளில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் வட்டம், மல்லியில் அறிவியல் பூங்கா அமைய உள்ள இடத்தினை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, கோட்ட பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) பாக்கியலட்சுமி, உதவிக் கோட்ட பொறியா ளர்கள்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) ஆனந்த குமார், அபிநயா, நிர்வாக பொறியாளர்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • கைவினைஞர்களின் படைப்புகளுக்கு முக்கியத்து வம் கொடுத்து காக்க வேண்டும் என்றார்.

    சிங்கம்புணரி

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன் னிட்டு சிங்கம்புணிரியில் பிரமாண்ட களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. சிம்மாசனத்தில் அமர்ந்த விநாயகர், கஜமுக விநாயகர், வெற்றி விநாயகர் என பல்வேறு விநாயகர் உருவ சிலைகள் செய்யப் பட்டு வருகிறது.

    அரசு விழாக்களில் பாரம்பரிய தொழில் செய்ப வர்களின் படைப்புகளை விற்பனைக்கு காட்சிப்படுத்த அரசு ஆவண செய்ய வேண்டும் என்பது இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    பாரம்பரியமாக சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முத்துராமலிங்கம் கூறுகையில், எங்களுடைய தொழில் மாறிவரும் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. ஆனால் தற்போது பிளாஸ்டர் ஆப் பாரீஸால் செய்யப்படும் விநாகர் பொம்மைகள், சிலைகள் பிரபலமாகி வருகின்றன.

    இவை பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு நீர் நிலைகளை மாசுப்படுத்தக் கூடியவை.ஆகவே தமிழக அரசு அரசு விழாக்களில் கைவினைஞர்களின் படைப்புகளுக்கு முக்கியத்து வம் கொடுத்து காக்க வேண்டும் என்றார்.

    • வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 4.42 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நன்னை, வடக்கலூர், கிழுமத்தூர், மிளகாநத்தம், கீழப்புலியூர், மழவராயநல்லூர் ஆகிய கிராமங்களில் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுதல், சிமெண்ட் சாலை அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல் போன்ற ரூ. 4.42 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர்சிவசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியண், மேலாண் இயக்குநர் (த.அ.போ.(கும்ப)லிட்,கும்பகோணம் மோகன், பொது மேலாளர் (த.அ.போ.(கும்ப)லிட்)திருச்சி மண்டலம் சக்திவேல், வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் சதீஷ்குமார், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார்

    உள்ளிட்ட அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நன்னை சின்னு, கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், ஒகளூர் அன்பழகன், வசிஷ்டபரம் பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் பலர் 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள தென்னை மரத்திலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு தென்னை மரத்திலும் ஏராளமான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.
    • மலைத்தேனீக்கள் அந்த வழியாக செல்பவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள தென்னை மரத்திலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு தென்னை மரத்திலும் ஏராளமான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

    மலைத்தேனீக்கள் அந்த வழியாக செல்பவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினரிடம் புகார் மனு கொடுத்து மலைத்தேனீக்களை அகற்றி தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று அங்கு கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினார்கள். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.

    இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 29-ந் தேதி காலை 10 மணியளவில் தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

    தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் உமா அறிவுறுத்தலின்படி, கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திருச்செங்கோடு துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
    • 5500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் உமா அறிவுறுத்தலின்படி, கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திருச்செங்கோடு துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

    மண்டல இணை இயக்குனர் நடராஜன் தலைமையில் துணை இயக்குனர் அருண் பாலாஜி மற்றும் பசுமை தமிழகம் இயக்கத்தின் மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ் கண்ணன் முன்னிலையில் 5500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

    நாமக்கல் மாவட்ட வனத்துறையால் வழங்கப்பட்ட வாகை,சீமை அகத்தி, கொடுக்கா புளி உள்ளிட்ட மரக்கன்றுகளை திருச்செங்கோடு செங்குந்தர் கலை, அறிவியல் கல்லூரியைச் சார்ந்த என்.எஸ். எஸ் மற்றும் என்.சி.சி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

    இந்நிகழ்வில் கால்நடை மருத்துவர்கள் சசிகுமார், சதீஷ்குமார் ஆகியோரும், கல்லூரியின் என்.சி.சி அலுவலர் ராமசாமி, என்.எஸ். எஸ் திட்ட அலுவலர் மைதிலி மற்றும் கால்நடை மருத்துவத் துறையினரும் கலந்து கொண்டனர்.

    • கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு தொடர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது.
    • 1,090 கர்ப்பிணிகளில் 600 கர்ப்பிணிகள் அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட கல்லுக்குளம், கரந்தை, மானம்புச்சாவடி மற்றும் சீனிவாசபுரம் ஆகிய 4 இடங்களில் உள்ள நகர்புற சுகாதார நிலையங்களில் தற்போது கர்ப்பகால பரிசோதனைகள் செய்து வரும் 1,090 கர்ப்பிணிகளில் 600 கர்ப்பிணிகள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை, தைராய்டு மற்றும் முந்தைய பிரசவ அறுவை சிகிச்சை போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதம் முதல் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக இயங்கி வரும் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தின் வழியாக கண்காணி க்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் நகர்புற ஆரம்ப சுகாதார செவிலியர்களுக்கு சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு தொடர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிவப்பு நிறத்தை பச்சை நிறமாக மாற்றிய விவரங்கள் மீண்டும் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பி கண்காணிக்கப்படுகிறது.

    இந்தநிலையில் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது இந்த தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகளை பாராட்டினார்.

    ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) திலகம், துணை இயக்குநர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர். மாநகர்நல அலுவலர் சுபாஷ் காந்தி, தாய்சேய் நல கண்காணிப்பு மைய செயல்பாடுகளை விளக்கி கூறினார்.

    முன்னதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி, கல்லுக்கு ளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

    • பணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
    • ரூ.27 லட்சத்து 90 ஆயிரத்து 250 ரொக்கம் காணிக்கை வசூலானது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநா தசாமி கோவிலில் உள்ள 12 உண்டியலில் பொதுமக்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த பணியில் கும்பகோ ணம் கே.எஸ்.கே கல்லூரி மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த பணிகளை கோவிலின் உதவி ஆணையர் முத்துராமன், துணை ஆணையர்உமா தேவி, கண்காணிப்பாளர் பழனிவேல், ஆய்வாளர் வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இதில் பொதுமக்கள் செலுத்திய காணிக்கை ரூ.27 லட்சத்து 90 ஆயிரத்து 250 ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 2 கிலோ 932 கிராம் வெள்ளியும், 204 வெளிநாட்டு கரன்சி களம் பெறப்பட்டு, அவை அனைத்தும் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்ப ட்டன.

    • பெரம்பலூரில் தூய்மை பணி இயக்கம் நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் "என் குப்பை என் பொறுப்பு" என்ற தலைப்பிலான தூய்மை பணி இயக்கத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்,நகர் மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தூய்மை பணிகள் நடைபெற்று வரும் மதரஸா ரோடு, வடக்குமாதவி ரோடு, சாமியப்பா நகர், எளம்பலூர் ரோடு, மதனகோபாலபுரம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூய்மைப் பணியினை தினந்தோறும் மேற்கொள்ள வேண்டும். நமது சுற்றுப்புறத் தூய்மையை பேணிக்காப்பது நமது கடமை என்கிற உணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து அவற்றை சேகரித்து தினசரி வீடு தோறும் வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் தன்னார்வமாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரை பகுதிகளில் சுமார் 75 மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட கலெக்டர் தொடக்கி வைத்தார். நிகழ்வுகளில் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர், நகர்மன்ற துணைத்தலைவர் ஹரிபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடி பேரூராட்சி வார்டுகளில் ரூ.1.7 கோடியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது
    • பச்ச நாயகம் குளக்கரை அருகே நடந்த பூமி பூஜையில் பேரூராட்சி தலைவர் முருகேசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பல்வேறு வார்டுகளில் பிளாக் சாலை அமைப்பது உள்ளிட்ட ரூ.1.7 கோடி திட்டபணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.கறம்பக்குடி பேரூராட்சி 9வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பச்சநாயகம் குளக்கரை அருகே நடைபெற்ற பூமி பூஜையில் கறம்பக்குடி தேர்வுநிலை பேரூராட்சி திமுக தலைவர் உ.முருகேசன் கலந்து கொண்டார். விழாவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் 9வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் ராஜா மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களான வளர்மதி கருப்பையா, செண்பகவள்ளி, முருகேஸ்வரி ராஜசேகர், பேரூராட்சி அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் பேரூராட்சி பொறியாளர் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • பேரூராட்சி தலைவர் பொன்.ரவி தொடங்கி வைத்தார்
    • திற்பரப்பு பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட மாவறத்துவிளை பகுதியில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது.

    கன்னியாகுமரி:

    திற்பரப்பு பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட மாவறத்துவிளை பகுதியில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. மழை காலங்களில தண்ணீர் சாலையில் தேங்கி நிற்கும். இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தார்கள். அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பேரூராட்சி தலைவர் பொன்.ரவியிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் அமைக்கும் பணியை தலைவர் பொன். ரவி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை தலைவர் ஸ்டாலின்தாஸ், வார்டு உறுப்பினர் சதீஷ், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ், திற்பரப்பு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எட்வின், முன்னாள் கவுன்சிலர் ராஜமணி, வட்டார கம்யூனிஸ்டு செயலாளர் விஸ்வாம்பரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரையுமன்துறை அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர் அப்பகுதி பொதுமக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணியினை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின், தூத்தூர் ஊராட்சி முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சூசை பிரடி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண், தூத்தூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் சாரா, பங்குதந்தை சூசை ஆன்றனி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×