search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைக்கும்"

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு பகுதியான லூர்துமாதா தெருவில் உள்ள சானல் ரோட்டில் பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிதாக தடுப்புச்சுவர் கட்டி சிமெண்ட் காங்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியின் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட உள்ள தடுப்பு சுவருடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆனி ரோஸ்தாமஸ், ஆட்லின் சேகர், அரசு ஒப்பந்ததாரர் சுதாபாஸ்கர், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், புனிதன், புஷ்பராஜ், சகாயம், நிசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பேரூராட்சி தலைவர் பொன்.ரவி தொடங்கி வைத்தார்
    • திற்பரப்பு பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட மாவறத்துவிளை பகுதியில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது.

    கன்னியாகுமரி:

    திற்பரப்பு பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட மாவறத்துவிளை பகுதியில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. மழை காலங்களில தண்ணீர் சாலையில் தேங்கி நிற்கும். இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தார்கள். அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பேரூராட்சி தலைவர் பொன்.ரவியிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் அமைக்கும் பணியை தலைவர் பொன். ரவி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை தலைவர் ஸ்டாலின்தாஸ், வார்டு உறுப்பினர் சதீஷ், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ், திற்பரப்பு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எட்வின், முன்னாள் கவுன்சிலர் ராஜமணி, வட்டார கம்யூனிஸ்டு செயலாளர் விஸ்வாம்பரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரையுமன்துறை அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர் அப்பகுதி பொதுமக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணியினை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின், தூத்தூர் ஊராட்சி முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சூசை பிரடி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண், தூத்தூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் சாரா, பங்குதந்தை சூசை ஆன்றனி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    காடையாம்பட்டி அருகே வீடுகளுக்குச் செல்லும் வழியை மறித்து உயரமாக அமைக்கப்படும் கழிவுநீரோடை

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் நாச்சனம்பட்டி ஆதிதிராவிடர் காலனி உள்ளது . இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கியது. இதை தொடர்ந்து சாக்கடை வசதி வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் காடையாம்பட்டி பேரூராட்சி சார்பில் கழிவு நீர் சாக்கடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. நாச்சனம்பட்டி காலனி பகுதியில் உள்ள ஒரு பகுதியில் தெருக்களில் உள்ள வீடுகளுக்கு செல்லும் பாதியை வழிமறித்து ஒரு மீட்டர் உயரம் வரை சாக்கடை கால்வாய் அமைக்கப்படுகிறது.

    இதனால் கழிவுநீர் வீட்டுக்குள் செல்லும் சூழ்நிலை உள்ளது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீடு மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரம் மேல் பகுதியில் அமைக்கப்படும் கழிவுநீர் கால்வாயை அகற்றி விட்டு குழி தோண்டி கால்வாய் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுபற்றி மூதாட்டி மாரியம்மாள் கூறும் போது எனக்கு மகன் ,மகள் என யாரும் இல்லை. நான் தனியாக வசித்து வருகிறேன். தற்போது அமைக்கப்பட்டு வரும் கழிவு நீர் கால்வாய் எனது வீட்டில் இருந்து 4 அடி உயரமாக உள்ளது. இதனால் நான் வீட்டிற்குள் சென்று வர முடியவில்லை. நான் வீதியில் இருந்து தவழ்ந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நான் குடிநீர் எடுத்து வர முடியவில்லை. எனவே இதை முறையாக அமைக்கவேண்டும் என்றார்.

    ×