என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூரில் ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
    X

    மேட்டூரில் ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

    • மேட்டூர் அருகே பி.என்.பட்டி தேர்வுநிலை பேரூராட்சி 7-வது வார்டு கருப்புரெட்டியூர் வண்டிக்காரன்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பாதை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • பொதுமக்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றம்.

    சேலம்:

    மேட்டூர் அருகே பி.என்.பட்டி தேர்வுநிலை பேரூராட்சி 7-வது வார்டு கருப்புரெட்டியூர் வண்டிக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுவாதி. இவரும், அப்பகுதி பொதுமக்களும் தங்களுக்கு பாதை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி மாவட்ட கலெக்டர் கார்மேகம் மேற்பார்வையில் சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர், மேட்டூர் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், பி.என்.பட்டி பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர், 7-வது வார்டு உறுப்பினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொண்ட அலுவலர்கள் கடந்த 11-ந் தேதி சம்பந்தப்பட்ட வண்டிக்காரன்காடு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட விவசாய நில உரிமையாளர்களுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று பொதுமக்களின் வசதிக்காக ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் கார்மே கம் தெரி வித்துள்ளார்.

    முன்னதாக, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மண் சாலை அமைத்து கொடுக்கும் பணியை தொடங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×