மாவறத்துவிளை பகுதியில் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் அமைக்கும் பணி

பேரூராட்சி தலைவர் பொன்.ரவி தொடங்கி வைத்தார்திற்பரப்பு பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட மாவறத்துவிளை பகுதியில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது.
மாவறத்துவிளை பகுதியில் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் அமைக்கும் பணி
Published on

கன்னியாகுமரி:

திற்பரப்பு பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட மாவறத்துவிளை பகுதியில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. மழை காலங்களில தண்ணீர் சாலையில் தேங்கி நிற்கும். இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தார்கள். அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பேரூராட்சி தலைவர் பொன்.ரவியிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் அமைக்கும் பணியை தலைவர் பொன். ரவி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துணை தலைவர் ஸ்டாலின்தாஸ், வார்டு உறுப்பினர் சதீஷ், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ், திற்பரப்பு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எட்வின், முன்னாள் கவுன்சிலர் ராஜமணி, வட்டார கம்யூனிஸ்டு செயலாளர் விஸ்வாம்பரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com