search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mission"

    • கடலூரில் உள்ள சாலையோரம் தள்ளுவண்டி கடை களை வைத்து துணி வியாபாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.
    • மஞ்சக் குப்பம் நேதாஜி சாலை களில் மாலை வேளை யில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    கடலூர்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் நகரில் உள்ள ஜவுளிக்கடை களில் துணிகளை வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் பலர் தீபாவளியையொட்டி கடலூரில் உள்ள சாலை யோரம் தள்ளுவண்டி கடை களை வைத்து துணி வியா பாரம் செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் கடலூர் லாரன்ஸ் சாலை, இம்பீரியல் சாலை, மஞ்சக் குப்பம் நேதாஜி சாலை களில் மாலை வேளை யில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் வியா பாரிகள் பட்டாசு கடைகள் வைக்கும் பணியிலும் மும் முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக் பாக்கெட், திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடை பெறுவதை தடுக்கும் பொருட்டு, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் உத்தரவின் பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் கடலூர் நகரில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநகரில் கடலூர் மஞ்சக் குப்பம், திருப்பாதிரிப்புலியூர் சிக்னல், நாகம்மன் கோவில் உள்ளிட்ட 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் போலீசார் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி வெற்றவர்கள் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு எழுத வேண்டும்.
    • ஒவ்வொருவருக்கும், குடும்ப சுமையும், சமுதாய சுமையும் கூடிக்கொண்டே போகிறது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று கடந்த 10 ஆண்டுகளாக வேலையில்லாமல் தவித்துவரும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பணி வழங்கிட வேண்டும். 2013-ம் ஆண்டு தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள் அரசு பணி வழங்ககோரி இதுவரை பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். தற்பொழுது 2013-ம் ஆண்டு முதல் இதுரை தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி வெற்றவர்கள் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்ற 149-வது அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    கடந்த ஆட்சியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்றோர் நலச்சங்கம் நடத்திய போராட்டத்தில் திமுக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் வாக்களித்து வாக்குகளை பெற்று வெற்றியடைந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிராகரிப்பது எந்தவிதத்தில் நியாயம்.

    தமிழகம் முழுவதும் ஆசிரியர் பணியிடங்களுக்கு பல்லாயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று பணிக்காக காத்திருப்பவர்களுக்கு உடனடியாக தமிழக அரசு பணியினை வழங்க வேண்டும். ஒவ்வொருவருக்கும், குடும்ப சுமையும், சமுதாய சுமையும் கூடிக்கொண்டே போகிறது. தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் தகுதியுள்ள, தகுதிப்பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • கைவினைஞர்களின் படைப்புகளுக்கு முக்கியத்து வம் கொடுத்து காக்க வேண்டும் என்றார்.

    சிங்கம்புணரி

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன் னிட்டு சிங்கம்புணிரியில் பிரமாண்ட களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. சிம்மாசனத்தில் அமர்ந்த விநாயகர், கஜமுக விநாயகர், வெற்றி விநாயகர் என பல்வேறு விநாயகர் உருவ சிலைகள் செய்யப் பட்டு வருகிறது.

    அரசு விழாக்களில் பாரம்பரிய தொழில் செய்ப வர்களின் படைப்புகளை விற்பனைக்கு காட்சிப்படுத்த அரசு ஆவண செய்ய வேண்டும் என்பது இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    பாரம்பரியமாக சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முத்துராமலிங்கம் கூறுகையில், எங்களுடைய தொழில் மாறிவரும் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. ஆனால் தற்போது பிளாஸ்டர் ஆப் பாரீஸால் செய்யப்படும் விநாகர் பொம்மைகள், சிலைகள் பிரபலமாகி வருகின்றன.

    இவை பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு நீர் நிலைகளை மாசுப்படுத்தக் கூடியவை.ஆகவே தமிழக அரசு அரசு விழாக்களில் கைவினைஞர்களின் படைப்புகளுக்கு முக்கியத்து வம் கொடுத்து காக்க வேண்டும் என்றார்.

    • பணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
    • ரூ.27 லட்சத்து 90 ஆயிரத்து 250 ரொக்கம் காணிக்கை வசூலானது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநா தசாமி கோவிலில் உள்ள 12 உண்டியலில் பொதுமக்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த பணியில் கும்பகோ ணம் கே.எஸ்.கே கல்லூரி மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த பணிகளை கோவிலின் உதவி ஆணையர் முத்துராமன், துணை ஆணையர்உமா தேவி, கண்காணிப்பாளர் பழனிவேல், ஆய்வாளர் வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இதில் பொதுமக்கள் செலுத்திய காணிக்கை ரூ.27 லட்சத்து 90 ஆயிரத்து 250 ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 2 கிலோ 932 கிராம் வெள்ளியும், 204 வெளிநாட்டு கரன்சி களம் பெறப்பட்டு, அவை அனைத்தும் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்ப ட்டன.

    • நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.
    • பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.

    பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பரிசல் மூலம் தேடுதல்

    உடனடியாக இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசா ருக்கு தகவல் அளித்தனர்.

    இதனிடையே சம்பவம் நடந்த இடம் ஈரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் பள்ளிபாளையம் போலீசார் ஈரோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் துணையுடன் காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    7-க்கும் மேற்பட்ட பரிசல்களுடன் நேற்று இரவு 7 மணி வரை பெண்ணை தேடும் பணி நடந்தது.

    இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை முதல் 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    காவிரி ஆற்றில் குதித்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கடலூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததார்.
    • பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கா ததால் சிறுமியின் தாயார் புதுப்பே ட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கடலூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததார். இவர் கடந்த 24-ந்தேதி வேலைக்கு சென்றவர் நள்ளிரவு வரை வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கா ததால் சிறுமியின் தாயார் புதுப்பே ட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.   புகாரில், அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருணா ச்சலம் (24) என்பவர் கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெ க்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வருகிறார்.

    • ராமநாதபுரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களுக்கு தேசியக் கொடி அனுப்பும் பணி நடந்து வருகிறது.
    • தேசியக்கொடி ரூ.21 என விலை நிா்ணயிக்கப்பட்டு வீடு, வீடாக நேற்று விநியோகிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுதப்பெரு விழாவை யொட்டி அனைத்து வீடுகள், அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந் தேதி வரையில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

    அதனடிப்படையில் மாவட்ட அளவில் 1 லட்சத்து 50 ஆயிரம் தேசியக்கொடிகள் பொதுமக்கள், அரசு அலுவலா்கள் ஆகியோருக்கு விநியோகிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக்குழு மூலம் ஏற்கெனவே 50 ஆயிரம் தேசியக் கொடிகள் நகராட்சி, பேரூராட்சிகளில் விநியோகி க்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து 1 லட்சம் தேசியக் கொடிகள் 10-க்கும் மேற்பட்ட பண்டல்களாக கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டன. அவை பிரிக்கப்பட்டு, அதிலிருந்த தேசியக் கொடிகளில் நகராட்சிகளில் ராமநாதபுரம், பரமக்குடிக்கு தலா 3 ஆயிரம், கீழக்கரை 1500, ராமேசுவரம் 1000 என அனுப்பி வைக்கப்பட்டது.

    ஒன்றிய அளவில் ராமநாதபுரம் 7,900, திருப்புல்லாணி 8,900, மண்டபம் 11,300, ஆா்எஸ்.மங்கலம் 4,900, திருவாடானை 7,700, போகலூா் 3,000, பரமக்குடி 5,700, நயினாா்கோவில் 3,500, முதுகுளத்தூா் 6,400, கமுதி 7,700, கடலாடி 11,500 என தேசியக் கொடிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மீதமுள்ள கொடிகள் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் நகராட்சி வாா்டுகளில் தேசியக்கொடி ரூ.21 என விலை நிா்ணயிக்கப்பட்டு வீடு வீடாக நேற்று விநியோகிக்கப்பட்டது. மேலும் கொடியைப் பெற்றுக் கொண்டவா்கள் முகவரி விவரம் பதிவு செய்யப்பட்டதுடன், சுதந்திரதினத்துக்குப் பிறகு தேசியக் கொடியை மீண்டும் அலுவலர்களிடம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட மகளிர் திட்டம் மூலம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களுக்கு குறைந்தது 1000 முதல் அதிகபட்சம் 11,300 வரை தேசியக் கொடிகள் விற்பனைக்கு அனுப்பியுள்ளனர்.

    மேற்கண்ட பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர், சுகாதாரப்பணியாளர்கள், அலுவலர்கள் வீடுவீடாக சென்று ஒரு தேசியக்கொடி ரூ.21 வீதம் விற்கின்றனர். அப்போது அவர்களின் பெயரை எழுதிக் கொள்கின்றனர். 3 நாட்களுக்கு பிறகு தேசியக்கொடியை மீண்டும் திரும்ப வழங்க வேண்டும், என வலியுறுத்தி வருகின்றனர்.

    இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அனைத்து வீடுகளிலும் 3 நாட்கள் தேசியக்கொடி பறக்க விட வேண்டும். அதன் பிறகும் கொடியை பாதுகாப்பது அவசியமாகும். சிலர் வேறு தேவைகளுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் தேசியக்கொடிக்கு அவமதிப்பு ஏற்படுவதை தவிர்க்க விற்பனை செய்த கொடிகளை மீண்டும் திரும்ப வாங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    இதற்கு அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.

    • குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் பல வார்டுகளில் தூய்மை பணி செயல்படுத்தி, நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் என்று கூறியதுடன் மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் பல வார்டுகளில் தூய்மை பணி செயல்படுத்தி, நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    நேற்று போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள கோம்புப்பள்ளம் தூய்மை பணி, ஜே.கே.கே. சாலை, சுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு செயல்படுத்தப்பட்டது. அப்போது கமிஷனர் விஜயகுமார் பேசுகையில், பொதுமக்கள், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட தொழில் நிறுவனத்தார் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும், தெருக்களில், கோம்புப் பள்ளத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது. தூய்மையான நகராட்சியாக இருக்க ஒத்துழைப்பு தாருங்கள் என்றார்.

    குப்பைகள் கொட்டக்கூ டாது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என பல இடங்களில் போர்டுகள் வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் என்று கூறியதுடன் மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    மேலும் 50 மரக்கன்று கள் நடப்பட்டன இதில்

    பொறியாளர் ராஜேந்தி ரன், சுகாதார அலுவ லர் ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் செல்வ ராஜ், சந்தானகிருஷ்ணன், கவுன்சிலர் நந்தினிதேவி, கதிரவன் சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்து, அங்கு பயிரிடும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில், புதிய லூனார் ரோவரை சீனா அனுப்பி உள்ளது. #China #Mission #Moon
    பீஜிங்:

    நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது சீனாவின் சாங் இ (Chang’e Program) திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e 4 Mission) எனும் திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது.
     
    இதுவரை பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக  கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் இந்த செயற்கைக்கோள் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    சீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் இந்த ரோபோ, நிலவை நோக்கி செலுத்தப்பட்டது.

    இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

    ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவு செய்யப்பட்ட பிறகு செயற்கைக்கோள் நிலவின் வேறொரு மூலையிலுள்ள கரடுமுரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனின் குறுங்கோள்களில் ஒன்று நிலவில் தெற்கு அரைக்கோளத்திலுள்ள அய்ட்கன் பேசினில் மோதியதால் அங்கு பெரும் பள்ளம் உண்டானது. எனவே, நிலவு குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கிய காலத்திலிருந்தே வோன் கர்மான் என்னும் இந்த இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    தற்போது சீனாவினால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள் இதுவரை ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவப் பகுதியின் புவியியல் அமைப்பு குறித்த தகவல்களை சேமிப்பதோடு அங்கிருந்து பாறை துண்டுகள், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும்.

    Tidal locking அல்லது ஓதப் பூட்டல் என்ற விளைவின் காரணமாக நம்மால் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏனெனில், நிலவை சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் அதே காலத்தை தன்னைத்தானே சுற்றி வருவதற்கும் நிலவு எடுத்துக் கொள்கிறது.

    பொதுவாக நிலவின் 'இருண்ட பக்கம்' என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும், பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால்தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர்.

    பூமியின் தொலைதூரத்தில் ரேடியோ அலைகளை அடிப்படையாக கொண்ட தொலைநோக்கிகளை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும் இந்த செயற்கைக்கோள் மேற்கொள்ளும்.

    அதுமட்டுமின்றி, நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள்  மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

    நிலவை அடையும் பட்டுப்பூச்சி முட்டைகள் முதலில் பட்டுப்பூச்சிகளை உற்பத்தி செய்யும், பின்னர் அந்த பட்டுப்பூச்சிகள் நிலவில் கரியமில வாயுவை உற்பத்தி செய்யும். இதற்கிடையில், உருளைக்கிழங்கு மற்றும் அராபிடாப்சிஸ் செடிகள் வளர்ந்து ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நிலவில் ஒரு சிறிய சூழ்மண்டலத்தை (simple ecosystem) உருவாக்கும் என்கிறார் ஆய்வாளர் யுவான்சுன்.

    "லூனார் மினி பயோஸ்பியர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணத்தை 28 சீன பல்கலைக்கழகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  #China #Mission #Moon
    ×