search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "work"

  • பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
  • மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  பேஸ்புக், வாட்சப், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலிதளங்களை நிர்வகிக்கும் மெட்டா சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்]  உரிமையாளரும் ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.

   

  இந்நிலையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்தின்போது, கோட் சூட் அணிந்தவாறு ஒரு கையில் அமெரிக்க கோடியை ஏந்தியவாறும், மறு கையில் பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் யாட்ச்சில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோவை இன்ஸ்ட்டாகிராமில் பகிரவே அது  இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

  இந்த வீடியோ வைரலாக நிலையில் மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் யாட்ச்களில் பொழுதைப்போக்கி கொண்டாட்டங்களில் ஈடுபடட்டும்.அதைவிட நான் வேலை செய்யவே விரும்புகிறேன். I prefer to work என்று தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கைபடி  பணக்காரர் பட்டியலில் மார்க் ஜூகர்பெர்கைவிட எலான் மஸ்க் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.   

  • தினசரி பள்ளி பேருந்தில் மதுபான உரிமையாளரால் அழைத்து செல்லப்படுகின்றனர்.
  • தினமும் 12- 14 மணிநேரம் வேலை செய்தனர்.

  மத்தியப் பிரதேசம் மாநிலம் ரைசென் மாவட்டத்தில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து 39 சிறுவர்கள் மற்றும் 19 சிறுமிகள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  சோம் டிஸ்டில்லரீஸ் & ப்ரூவரீஸ் என்பது பீர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஆர்டிடி (குடிக்கத் தயார்) பானங்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்களின் ஐஎஸ்ஓ-சான்றளிக்கப்பட்ட குழுவாகும்.

  பச்பன் பச்சாவ் அந்தோலன் (பிபிஏ) என்றும் அழைக்கப்படும் தன்னார்வ நடவடிக்கை சங்கத்துடன் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) இணைந்து சோம் என்கிற மதுபான ஆலையில் சோதனை மேற்கொண்டது.

  என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோ தலைமையிலான குழு, மதுபான ஆலையில் இருந்து 58 குழந்தைகள், 19 பெண்கள் மற்றும் 39 ஆண் குழந்தைகளை மீட்டதாக பிபிஏ தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து மேலும் கூறுகையில், "கடுமையான ரசாயனங்கள் மற்றும் மதுவின் தயாரிப்பால் குழந்தைகளின் கைகளில் தீக்காயங்கள் உள்ளன. அவர்கள் தினசரி பள்ளி பேருந்தில் மதுபான உரிமையாளரால் அழைத்து செல்லப்படுகின்றனர். தினமும் 12- 14 மணிநேரம் வேலை செய்தனர்.

  இதுகுறித்து 'எக்ஸ்' பதிவில், முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில்," தொழிற்சாலையில் நடந்த சோதனை தீவிரமான விஷயம். தொழிலாளர், கலால் மற்றும் காவல் துறைகளில் இருந்து விரிவான தகவல்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

  • உலகை ஆட்டிப்படைகத் தொடங்கியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த தனது அச்சத்தை எலான் மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார்.
  • கணினி மற்றும் ரோபோக்கள் உங்களை விட எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ய முடிந்தால், உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதா?

  டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், X (ட்விட்டர்) இன் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் ஒருவருமாகிய எலான் மஸ்க், தற்போது உலகை ஆட்டிப்படைகத் தொடங்கியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

   

  நேற்று (மே 23) பாரிஸில் நடந்த விவா டெக் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியில் வெப்கேம் மூலம் பேசிய மஸ்க், செயற்கை நுண்ணறிவின் காரணமாக வருங்காலங்களில் நம்மில் யாருக்கும் வேலை இருக்காது என்றும் ஏஐ தொழில்நுட்பமே தனது மிகப்பெரிய பயம் என்று தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், பொழுதுபோக்குக்காக வேண்டுமானால் ஏதெனும் ஒரு வேலையை நாம் செய்யலாம். மற்றபடி உங்களுக்குத் தேவையான பொருட்களையும் சேவைகளையும் ஏஐ தொழில்நுட்பமே ரோபோக்கள் தயாரித்து வழங்கிவிடும். பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பற்றாக்குறை இருக்காது. கடந்த சில ஆண்டுகளாக ஏஐ தொழில்நுட்பத்தின் திறன்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.

   

  கணினி மற்றும் ரோபோக்கள் உங்களை விட எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ய முடிந்தால், உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதா? என்று கேள்வியெழுப்பிய அவர், சமூக ஊடகங்கள், மனித மூளையில் சுரக்கும் டோபோமைனை AI மூலம் அதிகப்படுத்தும் யுக்தியை கையாளத் தொடங்கியுள்ளன என்றும் இதிலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாக்க அவர்கள் அதிக நேரம் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். கடந்த காலங்களிலும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து எலான் மஸ்க் அச்சம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

   

  • முதலீடு இல்லாமல் அல்லது குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்கி போதிய அளவு வருமானத்தை ஈட்ட முயற்சிக்கின்றனர்.
  • ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை வீட்டில் தயாரித்து விற்பதும் ஆக்கப்பூர்வமான வணிக நடவடிக்கைகள் ஒன்றாகும்.

  வீட்டில் இருந்தவாறு குறைந்தபட்ச வருமானத்திலிருந்து அதிகபட்ச வருமானம் வரை தரும் பெண்களுக்கு ஏற்ற பிசினஸ்.

  இன்று அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அதிகப்படியான பணம் தேவைப்படுகிறது. இதனாலையே பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்து முடித்துவிட்டு வருமானம் ஈட்டுவதற்கான வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

  மேலும் வீட்டிலேயே கடுமையான உழைப்பை செலுத்திய பெண்களால் பிறகு வேலைக்காக வெளியே செல்வது இயலாத காரியம் என்பதால் வீட்டில் இருந்தவரை வருமானம் ஈட்டும் தொழில்களை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் குறைந்த நேரத்தில், முதலீடு இல்லாமல் அல்லது குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்கி போதிய அளவு வருமானத்தை ஈட்ட முயற்சிக்கின்றனர்.

  • இந்த நிலையில் வீட்டில் இருந்தவாறு அதிக வருமானத்தை பெற பெண்களுக்கு ஏற்ற தொழில்கள், வீட்டிலேயே பேக்கரி தொடங்கி சாக்லேட், கேக் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம், குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இனிப்பு வகைகள், முறுக்கு தயாரித்து வியாபாரம் செய்யும் பெண்கள் சீசனுக்கு மட்டும் இல்லாமல், முழு நேரத் தொழிலாக ஹோம் பேக்கரி தொடங்கி பயன்பெற முடியும்.


  • கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, மண்பாண்டம், அலங்கார பொருட்கள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை தயாரிக்க குறைந்தபட்ச முதலீடு இருந்தால் போதும், தேவையான உபகரணங்களை வாங்கிக் கொண்டு பணிகளை மேற்கொண்டால் போதிய வருமானம் கிடைக்கும்.

  • சிறிய நகை உற்பத்தி, செயின், கம்மல் போன்ற பல்வேறு வகைகளில் நகை வடிவங்களை சிறிய அளவில் வீட்டிலிருந்தவாரு தயாரித்தால் அக்கம் பக்கத்தினரிடம் விற்பனை செய்தே வருமானம் ஈட்ட முடியும்.


  • வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் டைப்பிங் வர்த்தக நடவடிக்கையாக பயன்படுத்த முடியும். கணினியில் டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் கொண்ட பெண்களுக்கு மேலும் வருவாய் கிடைக்கும்.

  • தமிழ்நாட்டில் தற்போது அதிகப்படியான பெண்கள் வீட்டில் தையல் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தையல் தொழில் செய்யும் பெண்களுடைய எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.


  • மெழுகுவர்த்தி மற்றும் அலங்கார விளக்குகள் ஆகியவற்றை வீட்டிலேயே மிக எளிமையாக தயாரிக்கலாம். இவையும் பயன்தரும் வணிக நடவடிக்கைகள் ஆகும். மேலும் ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை வீட்டில் தயாரித்து விற்பதும் ஆக்கப்பூர்வமான வணிக நடவடிக்கைகள் ஒன்றாகும்.

  • தற்போது ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால் வீட்டில் ஆர்கானிக் சோப்பு மற்றும் ஆர்கனைச் சார்ந்த பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதும் ஏற்ற வணிக நடவடிக்கையாகும்.


  • மேலும் தற்போதைய நவீன சமூகத்தில் அழகு கலை பெண்கள் மத்தியில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் வீட்டிலேயே அழகு கலை சார்ந்த செயல்பாட்டை செய்யும் பெண்கள் அதிக அளவில் வருமானம் ஈட்டி வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர் வீடு தேடி சென்று சில மணி நேரங்கள் செலவிட்டு அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். இவ்வாறான வணிக நடவடிக்கைகள் தற்போது பெண்களுக்கு ஏற்ற முக்கியமான பிசினஸ்க்காக உருவெடுத்து இருக்கின்றனர்.

  • மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது.
  • தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.

  திருவள்ளூர்:

  திருவள்ளூர் அருகே– கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சத்தரை ஊராட்சி. இப்பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

  இந்த பாலத்தை பயன்படுத்தி கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், தண்டலம், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்துக்கு முக்கிய தரைப்பாலமாகவும் உள்ளது.

  மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது. பின்னர் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது.

  ஒவ்வொரு முறை தரைப்பாலம் சேதம் அடையும் போதும் அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தரைப்பாலம் தற்காலிகமாக மட்டுமே சீரமைக்கப்பட்டது.

  இதற்கிடையே கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் போதும் கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் 4-வது முறையாக சேதமடைந்தது. இதனால் இவ்வழியே அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றி உள்ள கிராமஙகளைச் சேர்ந்தவர்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

  ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய மேம்பாலம் கட்ட ரூ. 20 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு அனுப்பப்பட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதில் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இதனால் கூவம் ஆற்றின் குறுக்கே எந்த திட்டத்தில் பாலப்பணிகள் தொடங்கு வது என்ற குழப்பத்தில் சீரமைக்கப்படாமல் இருந்தது.

  இந்த நிலையில் பொது மக்களின் வேண்டுகோளின்படி அவசர தேவை பயன்பாட்டுக்காக கூவம் ஆற்றில் தற்போது 4 -வது முறையாக சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.

  அந்த இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  • சங்கராந்தி பண்டிகையின் போது பல்வேறு ஊர்களில் நடைபெறும் ஆட்டுப்பந்தயத்திலும் பங்கேற்க செய்கிறார்.
  • ஆட்டுக்கிடாய்கள் மூலம் புள்ளையா கணிசமாக பணம் சம்பாதித்து வருகிறார்.

  திருப்பதி:

  ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பாபுல பாடு அடுத்த வீரவல்லியை சேர்ந்தவர் புள்ளையா. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஆட்டுக்கிடா குட்டிகளை விலைக்கு வாங்கி வந்தார். அவற்றுக்கு ராம், லட்சுமண் என பெயரிட்டார்.

  சிறிய பாரத்தை இழுக்க ஆட்டுக்கிடாய்களுக்கு பயிற்சி அளித்தார். பின்னர் ஆட்டுக்கிடாய்களுக்கு ஏற்றவாறு பிரத்தியோகமாக வண்டி ஒன்றை தயார் செய்தார்.

  அதன் மூலம் வயலில் இருந்து விளைவிக்கப்படும் காய்கறி, நெல் மற்றும் புல்லைக் கொண்டு வர பயன்படுத்தினார்.

  மேலும் ஆட்டுக்கிடாய்களை வைத்து ஏர் ஓட்டி வருகிறார். உள்ளூர் கிராம மக்களுக்கு நகர்புறங்களில் இருந்து சிமெண்ட் மூட்டைகள், சிமெண்ட் பைப்புகள் வண்டியை ஏற்று வந்து பணம் சம்பாதித்து வருகிறார். சங்கராந்தி பண்டிகையின் போது பல்வேறு ஊர்களில் நடைபெறும் ஆட்டுப்பந்தயத்திலும் பங்கேற்க செய்கிறார்.

  ஆட்டுக்கிடாய்கள் மூலம் புள்ளையா கணிசமாக பணம் சம்பாதித்து வருகிறார். மாட்டு வண்டிக்கு ஒன்றும் குறைவில்லாமல் விவசாய வேலைகளில் அயராது உழைத்து வருமானம் ஈட்டி தரும் எந்த ஆட்டுக்கிடாய்களை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

  • அமைச்சர் பொன்முடி உறுதி
  • தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர் கிராமங்களை பார்வை யிட்டார்.

  புதுச்சேரி:

  புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே நடுக்குப்பம் மீனவ கிராம மக்கள் தூண்டில் வளைவு அமைக்க கோரி இன்று காலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர் கிராமங்களை பார்வை யிட்டார்.

  பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

  நடுக்குப்பம் மீனவ பகுதி மக்களின் கோரிக்கையான தூண்டில் வளைவு ஏற்க னவே முதல்-

  அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மீனவ பகுதிகளில் விரைவில் தூண்டில் வளைவு அமைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

  • கரூர், திருச்சி, புதுக்கோட்டை மக்களின் கனவு திட்டமான காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு திட்ட முதற்கட்ட பணிகள் தீவிரமாக தொடங்கி உள்ளது
  • இதுவரை 237.97 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது

  திருச்சி,

  தமிழகத்தின் கனவு திட்டங்களில் ஒன்றாக காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளது. காவிரியில் இருந்து வைகை மற்றும் குண்டாறு வரை கால்வாய் அமைத்து, காவிரியில் கிடைக்கும் உபரி நீரை மாநிலத்தின் தண்ணீர் பற்றாக்குறை உள்ள தென் பகுதிகளுக்கு திருப்பி விடுவதே திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

  காவிரியின் உபரி நீரை தெற்கு வெள்ளாறு, வைகை மற்றும் இறுதியாக குண்டாறு வரை கொண்டு செல்வதற்காக, 262 கி.மீ. நீளமுள்ள புதிய இணைப்புக் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இது காவிரியில் மாயனூர் தடுப்பணையில் இருந்து தொடங்குகிறது.

  இதன் மூலம் சுமார் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக, மாயனூர் தடுப்பணையில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை சுமார் 118.45 கி.மீ., தொலைவுக்கு ரூ.6,941 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  இந்த கால்வாய் கரூர் மாவட்டத்தில் 47.23 கி.மீ. தூரத்திலும், திருச்சி மாவட்டத்தில் 18.89 கி.மீ தொலைவிலும் மற்றும் புதுக்கோட்டை 52.32 கி.மீ. தூரத்துக்கும் பயணிக்கிறது. தற்போது முதல் கட்ட பணிகளில் ஒன்றாக மாயனூர் தடுப்பணையில் இருந்து 4.10 கி.மீ. தூரத்துக்கும், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 5.35 கி.மீ., நீளத்துக்கும் 2 வழித்தடங்களில் கால்வாய் அமைக்க ரூ.331 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது.

  இதில் இதுவரை 78 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி 3 மாவட்டங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு கரூர் மாவட்டத்தில் 427.81 ஹெக்டேர் , திருச்சி மாவட்டத்தில் 200.41 ஹெக்டேர் பட்டா நிலமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 585.05 ஹெக்டேர் பட்டா மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களும் தேவைப்படுகிறது.

  புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கால்வாய் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். ரம்யா தேவி உடன் இருந்தார்.

  பின்னர் நிறுவன ஆதாரத்துறை செயற்பொறியாளர் எஸ். சிவகுமார் கூறும்போது, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கால்வாய் அமைக்கும் பணி ஆகிய இரண்டும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை, 237.97 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மீதமுள்ள பகுதிக்கு ஏற்ப, செயல்முறை நடந்து வருகிறது.

  நிலம் கையகப்படுத்துதல் எந்த தடங்கலும் இன்றி முன்னேறும் வகையில், குறிப்பாக நிதி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது. இந்த நிதியாண்டிற்குள் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இரு வழித்தடங்களில் கால்வாய் அமைக்கும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

  இந்த கால்வாயின் முதல் கட்டத்தின் மூலம் கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 42,170 ஏக்கர் பாசன வசதியும், 342 பாசன குளங்கள் பாசன வசதியும் பெறும். 2-ம் கட்டமாக தெற்கு வெள்ளாற்றையும் வைகையையும் இணைக்கும், சுமார் 110 கி.மீ தூரமும், 3-வது இறுதிக் கட்டம் வைகையை குண்டாற்றுடன் (34.04 கி.மீ) இணைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

  • வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டது மகிழ்ச்சி என மக்கள் கூறியுள்ளனர்.
  • நடந்து செல்பவர்களுக்கு வசதியாக நடைபாதை அமைத்துக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றனர்.

  குனியமுத்தூர்,

  கோவை சுந்தராபுரம்-மதுக்கரை சாலையில் மதுக்கரை மார்க்கெட், வேலந்தாவளம், மற்றும் கேரளா போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டிருக்கும்.

  இதனால் இந்த சாலை எப்போதும் மிகுந்த பரபரப்பான பகுதியாகவே காணப்படும். பல சமயங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

  இதற்கு முக்கிய காரணமாக அந்த பகுதியில் சாலைையயொட்டி இருந்த ஆக்கிரமிப்புகளே காரணம் என்றும், அதனை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

  பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலைத் துறையினர் சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிக்கான ஏற்பாடுகளை தொடங்கினர்.

  அதன்படி சாலை நன்கு விரிவாக்கப்பட்டு போக்குவரத்திற்கு சிரமம் இன்றி அமைக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் அதிவேகமாக அந்த சாலையில் செல்ல தொடங்கின.

  இதனால் சாலையின் ஒரு பகுதியை விட்டு மற்றொரு பகுதிக்கு கடப்பது மக்களுக்கு சிரமமாகியது. சில நேரங்களில் மக்கள் விபத்தில் சிக்கும் நிலைமையும் உருவானது. ஏனென்றால் வாகனத்தில் வருவோம் மெல்ல வராமல் அதிவேகத்தில் வருகின்றனர். வாகனம் வெகுதூரம் வருகிறதே என்று சாலையை கடந்தால், வேகமாக வந்து நம்மீது மோதுவது போல் நின்று விடுகிறது. எனவே இதற்கு சாலையின் நடுவே தடுப்புகள் வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

  இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் இதற்கு தீர்வு காணும் வகையில், சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கும் பணியை தொடங்கினர். முதல் கட்டமாக சுந்தராபுரத்தில் இருந்து காமராஜர் நகர் வரை இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த சாலையின் மற்ற பகுதிகளிலும் தடுப்புகள் வைக்கும் பணி நடக்க உள்ளது.

  இதுகுறித்து மக்கள் கூறும் போது, வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டது மகிழ்ச்சி. இதனால் வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்லும்.

  தடுப்பு வைக்கப்பட்டதால் சாலையின் அகலம் குறைந்துள்ளது. எனவே நடந்து செல்பவர்களுக்கு வசதியாக நடைபாதை அமைத்துக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றனர்.

  • ரமேஷ் அதே ஊரில் தனியாக டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.
  • விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

  விழுப்புரம்:

  விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் மகன் ரமேஷ் (42). இவர் அதே ஊரில் தனியாக டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.இவர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக திருக்கனூர் சென்று விட்டு காப்பியம் புலியூர் செல்வதற்காக பனையபுரம் கூட்டுச்சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிசென்ற லாரி இவர் மீது மோதியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

  இந்த தகவல் அறிந்து விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரமேஷின் தாய் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • அந்தப்பணத்தில் சாராயம் குடித்துவிட்டு, சாராயக்கடை ஓரம் படுத்து தூங்குவது வாடிக்கையாக வைத்திருந்தார்.
  • குப்பைகளிலிருந்து பாட்டில்களை எடுத்துவிட்டு, சாலையை கடக்க முயன்றார்.

  புதுச்சேரி:

  காரைக்கால் அருகே திரு.பட்டினம் மகத்தோப்பு சாராயக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மதுரையை சேர்ந்த குமார் (வயது50) என்பவர், பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை குப்பைகளிலிருந்து எடுத்து விற்று, அந்தப்பணத்தில் சாராயம் குடித்துவிட்டு, சாராயக்கடை ஓரம் படுத்து தூங்குவது வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 23-ந் தேதி, குமார், திரு.பட்டினம் கீழவாஞ்சூர் சாலையில் குப்பைகளிலிருந்து பாட்டில்களை எடுத்துவிட்டு, சாலையை கடக்க முயன்றார்.

  அப்போது, காரைக்கால், நாகை சாலையில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அதிவேகமாகக சென்ற மோட்டார் சைக்கிள், குமார் மீது மோதியது. இதில், குமார் பலத்த காயமுற்றார். தொடர்ந்து, காரைக்கால் தனியார் துறைமுகம் ஆம்புலன்ஸ் மூலம் குமார் காரைக்கால் அரசு ஆஸ்பதிரிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு குமார் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, சாராயக்கடையில் வேலை செய்யும் தங்கபாண்டியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், திரு.பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  வேலை பார்த்த பெண்களை கடித்த கதண்டு வண்டு9 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

   அறந்தாங்கி, 

  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியைச் சேர்ந்த புதுப்பட்டி ஊராட்சி போசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அணிக்கனி பகுதியில் 100 நாள் வேலை பார்த்து வந்தனர்.

  அப்போது அங்கே இருந்த மரங்களிலிருந்து கதண்டு வண்டு கிளம்பி அங்கே வேலை பார்த்த பெண்களை கொத்தியுள்ளது. இதனால் பெண்கள் அலறியடித்துக் கொண்டு தப்பித்து ஓடியுள்ளனர். இதில் கதண்டு கொட்டிய இந்திரா,சகுந்தலா, மீனா,உமா,ராணி, உள்ளிட்ட 9 பெண்களை அருகே இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×