search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து தடுப்பு"

    • உடுமலை பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
    • உடுமலை நகரிலுள்ள விபத்து பகுதிகளில், பரிந்துரை மற்றும் கருத்துரு அடிப்படையில், எவ்வித பணிகளும் இதுவரை செய்யப்படவில்லை.

    உடுமலை

    கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை நகரம் அமைந்துள்ளது.மேலும், பல்லடம், தாராபுரம் மாநில நெடுஞ்சாலைகளும், மாவட்ட முக்கிய ரோடுகளும், நகர போக்குவரத்தில், முக்கிய பங்கு வகிக்கின்றன.இந்நிலையில், அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து மேம்படுத்த, வருவாய்த்துறை, போலீஸ், வட்டார போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, சாலை பாதுகாப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது.இக்குழுவினர் உடுமலை பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் பகுதிகளை கண்டறிந்து, 'பிளாக் ஸ்பாட்' என பெயரிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பரிந்துரைக்கின்றனர். இதற்காக மாதம்தோறும் ஆலோசனை கூட்டமும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    உடுமலை பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. அங்கு, வாகன ஓட்டுனர்களை எச்சரிக்க இருபுறமும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும். சிறிய அளவிலான வேகத்தடை (ரம்புள் ஸ்பீட் பிரேக்கர்), ரோட்டில் ஒளியை பிரதிபலிக்கும் ஸ்டட் (கேட் ஐ), நான்கு வரிசையில், ஒளியை பிரதிபளிக்கும் பிரதிபளிப்பான் பொருத்த வேண்டும்.மெதுவாக செல்லவும் என்ற அறிவிப்பு பலகை வைக்க பரிந்துரைக்கப்பட்டது. இப்பணிகள், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக்கழகத்தின் கீழ் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது.

    நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள தளி ரோடு மேம்பாலம் நுழைவாயில் பகுதியில்இரண்டு ஆண்டுகளில், விபத்தினால், 3 உயிரிழப்புகள் ஏற்பட்டது. அங்கு, விபத்தை தவிர்க்க இடது பக்க தடுப்புச்சுவரை, 30 மீட்டருக்கு விரிவுபடுத்த வேண்டும். சுவரில் ஒளி பிரதிபலிப்பான் பொருத்தி, இருபுறமும்,'சோலார் பிளிங்கிரிங் லைட், அணுகுசாலையில், இடது புறமும் திரும்ப தேவையான வெள்ளை குறியீடுகள் அமைக்க வேண்டும்.இதே போல், நகர எல்லையில் தேசிய நெடுஞ்சாலை - கொழுமம் ரோடு சந்திப்பில் வேகத்தடை, தேவையான வெள்ளை குறியீடு அமைத்து அதில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்கப்பட வேண்டும்.விபத்து பகுதி மெதுவாக செல்லவும் என்ற அறிவிப்பு பலகை வைக்கலாம். ரோட்டின் மையத்தில், டிராபிக் ஐ லேண்ட் எனப்படும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

    மேலும், உடுமலை-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில்சி வசக்திகாலனி கோவில் சந்திப்பு பகுதியில் சாலை விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அங்கு தேவையான எச்சரிக்கை குறியீடு அமைத்து, வாகனங்களின் வேகத்தை குறைப்பதால் விபத்து தவிர்க்கப்படும் என கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது.இவ்வாறு நகரில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதி, விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட பகுதிகளை கண்டறிந்து, அவற்றை மேம்படுத்தவே சாலை பாதுகாப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது.இக்குழுவினர் பல முறை ஆய்வு செய்து ஒவ்வொரு துறையினர் பரிந்துரைகளை பெற்று, விபத்து பகுதிகளில் மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள கருத்துருவும் அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

    ஆனால் உடுமலை நகரிலுள்ள விபத்து பகுதிகளில், பரிந்துரை மற்றும் கருத்துரு அடிப்படையில், எவ்வித பணிகளும் இதுவரை செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. எனவே கருத்துரு மற்றும் பரிந்துரைகளை செயல்படுத்தி, விபத்தில்லா நகரம் என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    ×