திருப்பூர் மாநகரில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரம்

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சியினரை படத்தில் காணலாம்.
தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சியினரை படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்தநிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை 8மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

திருப்பூர் வடக்கு-20,அவினாசி-38.40, பல்லடம் -45, ஊத்துக்குளி-4, காங்கயம்-1.40, தாராபுரம்-20, மூலனூர்-40, குண்டடம்-27, அமராவதி அணை-2, உடுமலை-2, மடத்துக்குளம்-4, திருப்பூர் கலெக்டரேட்- 16, வெள்ள கோவில்-6, திருப்பூர் தெற்கு-5, கலெக்டர் முகாம் அலுவலகம்-45.50. மொத்தம் 276.30 மி.மீ. மழை பெய்துள்ளது.

இதனிடையே திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றும் பணியில் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன. 

X

Maalai Malar
www.maalaimalar.com