என் மலர்
நீங்கள் தேடியது "class"
- அப்போதிருந்தே இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.
- வெவ்வேறு இடங்களுக்கு சென்றாலும் இன்று வரை இருவரும் தொடர்பிலேயே உள்ளனர்
இந்திய ராணுவத்தின் தளபதியான மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். ராணுவ துணை தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் திவேதி நாட்டின் 30வது ராணுவ தலைமை தளபதியாவார்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பதவியேற்று தற்போது இந்திய கடற்படை தளபதியாக இருந்துவரும் தினேஷ் திரிபாதியும் இந்திய ராணுவத் தலைமைத் உபேந்திரா திவேதியும் ஒரே வகுப்பில் படித்த மாணவர்கள் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வரலாற்றிலேயே ஒரே வகுப்பில் படித்த இருவர் ஒரே நேரத்தில் ராணுவத் தளபதியாகவும் , கடற்படைத் தளபதியாகவும் உள்ளது இதுவே முதல் முறை ஆகும். மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் உள்ள சைனிக் பள்ளியில் இருவரும் 1970களில் ஆண்டு ஐந்தாம் வகுப்பு A பிரிவில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போதிருந்தே இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். ராணுவத் தளபதி உபேந்திராவின் ரோல் நம்பர் 931 ஆகவும், கடற்படைத் தளபதி தினேஷ் திரிபாதியின் ரோல் நம்பர் 938 ஆகவும் இருந்துள்ளது.
அதன்பின்னர் வெவ்வேறு இடங்களுக்கு சென்றாலும் இன்று வரை இருவரும் தொடர்பிலேயே உள்ளனர். தற்போது இருவரும் நாட்டின் முக்கியமான இரண்டு பொறுப்புகளில் உள்ளது ராணுவப்படைக்கும், கப்பற்படைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும். மேலும் இருவரின் முன்னேற்றம் குறித்து ரேவா சைனிக் பள்ளி ஆசிரியர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
- வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
- நிகழ்ச்சியில் 950-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
விழாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜோதிமணி அம்மாள் துவக்கி வைத்தார்.
தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரி - ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை பிரிவின் முதன்மையர் செந்தில்குமார் மற்றும் ஒன் லைப் ஒன் சாய்ஸ் லைஃப் ஸ்கில்ஸ் அகாடமியின் தலைவரும் உளவியல் பயிற்சியாளருமான கார்த்திக் வேலு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அவர்களது எதிர்காலம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நு ட்பங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
கல்வி குழுமத்தின் இணைச் செயலர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தனர். நிர்வாகத் தலைவர் மணிகண்ட குமரன், கல்விசார் இயக்குனர் மோகன், தேர்வு நெறியாளர் சின்னதுரை, மாணவர் சேர்க்கை பிரிவின் தலைவர் ஹரி நாராயணன், முதலா மாண்டு துறை முதன்மையர் தேவராஜன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் வாழ்த்துரை யாற்றினர். நிகழ்ச்சி ஏற்பாடு களை துறைதலைவர் முனைவர் தீபா, கூடுதல் துறை தலைவர்கள் முனைவர் பொன்சடைலட்சுமி, முனைவர் தாரணி, முனைவர் மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்வில் 950 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
- கணினி அறிவியல் துறை பேராசிரியர் நிலவு வரவேற்புரை ஆற்றினார்.
- கணினி அறிவியல் துறை 2-ம் ஆண்டு மாணவர் ஆகாஷ் நன்றி கூறினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் பைத்தான் பற்றிய பயிற்சி நடைபெற்றது .
இதனை கல்லூரி முதல்வர் அங்கம்மாள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் இன்போசிஸ்டம் நிர்வாக இயக்குநர் பழனியப்பன், பயிற்சியாளர்கள் அபிநயா, அகல்யா ஆகியோர் மாணவர்களுக்கு பைத்தான் குறித்து பயிற்சியளித்தனர். கணினி அறிவியல் துறை பேராசிரியர் நிலவு வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ் துறை தலைவர் இராஜா வரதராஜா வாழ்த்துரை வழங்கினார். கணினி அறிவியல் துறை தலைவர் முருகானந்தம் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
கணினி அறிவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ஆகாஷ் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.
இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 29-ந் தேதி காலை 10 மணியளவில் தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.
தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது
- அரசு கலைக்கல்லூரிகளில் அரசு கலைக்கல்லூரிகளில்
புதுக்கோட்டை
தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனை தொடர்ந்து உயர்கல்வி படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடங்கியது. அந்த வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அதன்பின் மதிப்பெண்கள் அடிப்படையில் தர வரிசையில் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மன்னர் கல்லூரி, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி உள்ளிட்ட இடங்களில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்தது.
இந்த நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் என 2 பிரிவுகளில் வகுப்புகள் நடைபெறும்.
பள்ளிப்படிப்பை முடித்த பின் கல்லூரி படிப்பில் காலடி எடுத்து வைக்க மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வருகை தருவார்கள். சீருடை அணிந்து பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் பல வண்ணங்களில் ஆடை அணிந்து கல்லூரிக்கு மகிழ்ச்சியுடன் வருவார்கள். கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு முன்கூட்டியே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் யோசனை
- 2 வருடங்களுக்கு தலை சிறந்த பயிற்சியாளர்களால் கொடுக்கப்பட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு பள்ளிக் கல்வியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இதற்காக இந்த ஆண்டு ரூ.924.68 கோடி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. இருப்பினும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரம் உயர்வ தற்கான முயற்சிகளில் பின்தங்கியே உள்ளோம்.
எந்த பாடத்திட்ட மாக இருந்தாலும் மாணவர்களின் கற்கும் ஆற்றல் உயர்ந்தால்தான் கல்வியின் தரம் உயரும். அரசு பள்ளி மாணவர்களிடையே, படித்தல் திறன், எழுதுதல் திறன், கணிதத் திறன், கல்வி கற்கும் அறிவு, சிந்திக்கும் திறன் ஆகிய வற்றில் குறைபாடுகள் அதிகம் உள்ளதாக மத்திய அரசின் ஆய்வுகள் கூறுகின்றன.
புதுவை அரசு பள்ளிகளின் தரத்தை தேசிய தேர்வுகளில் மாணவர்கள் பெறும் தேர்ச்சி எண்ணிக்கை பொறுத்து தெரிந்து கொள்ளலாம். அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிப்பில் சேர அரசு சில சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மாணவர்கள் 11 -ம் வகுப்பு வந்தவுடன் ஒவ்வொரு நாளும் மாலை யில் 2 மணி நேர பயிற்சியை அரசு செலவில் 2 வருடங்களுக்கு தலை சிறந்த பயிற்சியாளர்களால் கொடுக்கப்பட வேண்டும்.
நீட் தேர்வில் தகுதி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 10 சதவீதம் இடங்களை ஒதுக்க வேண்டும். 500
மதிப்பெண்களுக்கு மேல் பெறும் இப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு உதவித்தொகை வழங்க வேண்டும். 11 மற்றும் 12-ம் வகுப்பு களுக்கு அனுபவம் வாய்ந்த அற்பணிப்புள்ள ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் நீட் தேர்வில் அதிக தேர்ச்சியை கொடுக்கும் இந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, ஊக்கத்தொகை, போன்றவற்றை வழங்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தைஅரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. இதில் 36 ஆயிரத்து 143 பேர் எழுதினர்.
- தேர்வு துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. இதில் 36 ஆயிரத்து 143 பேர் எழுதினர்.
தேர்வு துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் இன்று காலை பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. 155 மையங்களில் 16 ஆயிரத்து 706 மாணவர்கள் 19,437 மாணவிகள் என மொத்தம் 36 ஆயிரத்து 143 பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர்.
இதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்தை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சேலம் கோட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை முதலே மாணவிகள் ஆர்வத்துடன் வந்து தேர்வில் பங்கேற்றனர்.
முன்னதாக தேர்வு துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர். தேர்வின்போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுரை வழங்கினர்.
- ஏழை எளிய, நடுத்தர பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
- அழகுக்கலை, வெள்ளாடு வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் 50 மகளிருக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
ஊராட்சியில் உள்ள திருக்கண்ணபுரம், ராமநந்தீஸ்வரம், காக்கமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய நடுத்தர பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த தையல் பயிற்சி வகுப்பு ஒரு மணி நேரத்துக்கு 5 - பேர் வீதம் தினமும் 50- பேருக்கு தையல் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இதில் சாம்பிராணி தயாரித்தல், அழகுக்கலை, வெள்ளாடு வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில் பயிற்சியாளர் ஜெயந்தி, வார்டு உறுப்பினர் ஆல்பர்ட் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் (வயது 48) வாழதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
- இரு பள்ளிகளை சேர்ந்த 405 மாணவ- மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெற்றோர்களும் பங்கேற்றனர்.
ேசலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி மல்லிகுந்தம் அருகே வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் (வயது 48) வாழதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். இேதபோல் அங்கிருந்த தலைமை ஆசிரியை ெஜயசித்ரா, வன்னியனூர் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி, கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி முதல் வாழதாசம்பட்டி மற்றும் வன்னியனூர் ஆகிய இரு பள்ளிகளை சேர்ந்த 405 மாணவ- மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெற்றோர்களும் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. தொடர்ந்து போராட்டம் 9 நாட்களாக நீடித்தது. இைதயடுத்து சேலம் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மேட்டூர் சப்-கலெக்டர் வீர்பிரதாப்சிங் தலைமையில் வன்னியனூரில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 4 மாதங்களுக்கு வன்னியனூர் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சசி தலைமையில் பள்ளி செயல்படும், அதன்பிறகு சிவகுமாரை பணி அமர்த்த முயற்சி எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது. இதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 9 நாட்களாக நடைபெற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.
விருதுநகர்:
விருதுநகர் கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ள குரூப்-மிமி எஸ்.எஸ்.சி. (சி.ஜி.எல்.) ஆகிய தேர்வுகளுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு வருகிற 7-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
பணியாளர் தேர்வு வாரியத்தால் எஸ்.எஸ்.சி. (சி.ஜி.எல்.)உதவி தணிக்கை அலுவலர், உதவிக் கணக்காயர், வருமான வரி ஆய்வாளர் மற்றும் பல பதவிகளை உள்ளடக்கிய தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் வருகிற 4-ந் தேதி ஆகும்.
வயது வரம்பு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தில் இக்காலியிட அறிவிப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
தேர்விற்குரிய இலவசப் பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக வருகிற 9-ந் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (குரூப்-மிமி) சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், உதவி ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளர் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய 1,547 பணிக்காலியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். இத்தேர்விற்குரிய இலவசப் பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக வருகிற 7-ந் தேதி முதல் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
இவ்விரண்டு இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கும் வாரம் ஒரு மாதிரி தேர்வு நடைபெறும். மேற்காணும் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அல்லது விண்ணப்பிக்கவுள்ள விருதுநகர் மாவட்ட பதிவு தாரர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தின் நகல் ஆகியவற்றுடன் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து தங்களது பெயரைப் பதிவு செய்து பயனடையலாம்.
மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்கள் வீடியோ மற்றும் ஆடியோ வசதியுடன் பாடப்புத்தகங்களை விரும்பி படிக்கும் வகையில் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் த.உதயச்சந்திரன் கூறினார்.
பல வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் 1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு 2018-2019-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சென்னையில் பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் த.உதயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிக்கூட அளவில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக இந்தியாவில் சிறப்பான பாடப்புத்தகங்களை கொண்டுள்ள முக்கிய மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர் உள்பட பல வெளிநாடுகளில் பாடப்புத்தகங்கள் எவ்வாறு உள்ளன என்று முதலில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் உள்ள நல்ல கருத்துகள் மட்டும் எடுக்கப்பட்டு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும், ஒவ்வொரு பாடத்திலும் அதை விரிவாக மாணவர்கள் படிக்க விரும்பினால் அதற்க ான புத்தகங்களின் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பாடப்புத்தகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் படிக்கலாம். அதன் காரணமாக ஒவ்வொரு புத்தகத்திலும், ஒவ்வொரு பாடத்திலும் வார்த்தைகள் அகராதி போல இடம் பெற்றுள்ளன. அதாவது தமிழ்மொழியில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்ட அர்த்தங்கள் இடம் பெற்றுள்ளன. அவை பாடத்தின் பின்புறத்திலும் மட்டுமல்ல, புத்தகத்தின் பின்பக்கத்திலும் இடம் பெற்று இருக்கிறது.
11-வது வகுப்பு, 12-வது வகுப்பு மாணவ-மாணவிகள் ‘நீட்’ உள்ளிட்ட போட்டித் தேர்வை எதிர்கொள்ள பாடப்புத்தகங்களில் கடந்த சில ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களுடன் இடம் பெற்றுள்ளன.
பாடங்கள் அனைத்தும் மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில் பல வண்ணங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அடுத்து என்ன படித்தால் நல்லது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த படிப்புகளின் முழு விவரமும் கொடுக்கப்பட்டுள்ளன.
மருத்துவம், என்ஜினீயரிங் மற்றும் நிறைய படிப்புகள் உள்ளன. என்ன படிப்பை எங்கே படிக்கலாம் என்ற விவரமும் தொகுத்து தரப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் மாணவ- மாணவிகள் மேல்படிப்பை மேற்கொள்வது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
பாடங்களில் விரைவு கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை இணையதளம் கொண்ட செல்போனில் படம் எடுத்து அதை செயல்படுத்தினால் அதற்குரிய வீடியோ மற்றும் ஆடியோவை காணலாம். அவை அனைத்தும் பாடத்துடன் இணைந்ததுதான். அந்த விரைவு கோட்டை பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
அதாவது வீடியோ மற்றும் ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம் அமைந்திருக்கிறது. பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை வீடியோ மற்றும் ஆடியோ வாயிலாக வழங்கினால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து படிப்பார்கள்.
தொழிற்கல்வி மாணவ- மாணவிகளுக்கு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு 20 வருடங்கள் ஆகி விட்டது. எனவே அந்த பாடத்திட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதிகம் கம்ப்யூட்டர் படிக்கும்படி பாடத்திட்டம் உள்ளது.
அடிப்படை எந்திரவியல், அடிப்படை பொறியியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்அணு பொறியியல், அடிப்படை கட்டிட பொறியியல், ஊர்தி பொறியியல், நெசவியல், செவிலியம், வேளாண் அறிவியல் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளில் நிறைய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த பாடத்திட்டம் மாணவர்களின் அறிவு சிந்தனையை தூண்டி வேலை வாய்ப்பை முன்நிறுத்தியும் போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
முதலில் மாநில அளவில் ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு மாவட்டத்தின் முன்னணி ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும். அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பணி பாதிக்காத வகையில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும். பயிற்சி அளிக்க அட்டவணை வெளியிடப்படும்.
இவ்வாறு இவ்வாறு தெரிவித்தார்.