அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு பைத்தான் பற்றிய பயிற்சி

கணினி அறிவியல் துறை பேராசிரியர் நிலவு வரவேற்புரை ஆற்றினார். கணினி அறிவியல் துறை 2-ம் ஆண்டு மாணவர் ஆகாஷ் நன்றி கூறினார்.
பைத்தான் பற்றிய பயிற்சி வகுப்பு நடந்தது.
பைத்தான் பற்றிய பயிற்சி வகுப்பு நடந்தது.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் பைத்தான் பற்றிய பயிற்சி நடைபெற்றது .

இதனை கல்லூரி முதல்வர் அங்கம்மாள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் இன்போசிஸ்டம் நிர்வாக இயக்குநர் பழனியப்பன், பயிற்சியாளர்கள் அபிநயா, அகல்யா ஆகியோர் மாணவர்களுக்கு பைத்தான் குறித்து பயிற்சியளித்தனர். கணினி அறிவியல் துறை பேராசிரியர் நிலவு வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ் துறை தலைவர் இராஜா வரதராஜா வாழ்த்துரை வழங்கினார். கணினி அறிவியல் துறை தலைவர் முருகானந்தம் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

கணினி அறிவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ஆகாஷ் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com