search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிடம்"

    • செல்போன் பேசுவது போன்று ஒரு கட்டிடத்தில் திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
    • இதனை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.

    சாத்தான்குளம்:

    இன்றைய நவீன காலத்தில் மாணவர்கள், வாலிபர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். அந்த வகையில் செல்போன் பேசுவது போன்று ஒரு கட்டிடத்தில் திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் கிராமத்தில் ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் புதிதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் வழக்கமாக திருஷ்டி பொம்மையோ அல்லது தடியங்காயில் திருஷ்டி பொம்மையின் படம் வரைந்து வைப்பது வழக்கம்.

    ஆனால் இங்கு அந்த கட்டிட உரிமையாளர் ஒரு திருஷ்டி பொம்மையை தயார் செய்து, பொம்மை கையில் செல்போனுடன் பேசிக் கொண்டிருப்பது போல வடிவமைத்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.

    • கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது.
    • தரையில் இருந்து சீலிங் வரை 10 அடியில் இருந்து 11.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையானது, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

    உயரம் இல்லாத கட்டிடங்களின் அதிக பட்ச அனுமதிக்கப்பட்ட கட்டிட உயரத்தை 14 மீட்டர் வரை உயர்த்தி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்கு மிகாமல் உள்ள கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. தரைதளம் மற்றும் 3 தளத்துக்கு இதுவரையில் 12 மீட்டர் உயரம் அனுமதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 14 மீட்டர் வரை கட்டிடத்தின் உயரத்தை அதிகரித்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. அதே போல தரை தளம் மற்றும் 2 அடுக்குமாடி வீடுகளுக்கு 9 மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரம் வரை கட்டிக் கொள்ளலாம். 3 அடுக்கு மாடிகளுக்கு கட்டிடத்தின் உயரத்தை 6 அடி வரை உயர்த்தி கொள்வதன் மூலம் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும் என்று கட்டுமானர்கள் தெரிவிக்கின்றனர். ஏர்கண்டிஷன், பால் சீலிங் போன்ற வசதிகள் செய்வதற்கு தரையில் இருந்து கட்டிடத்தின் உயரத்தை உயர்த்த இது போதுமானதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    இது புதிதாக வீடு கட்டுபவர்களுக்கும், சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது என்று கட்டுமான சங்கத்தை சேர்ந்த ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தென்னக கட்டுமான சங்க தலைவர் மோகன் கூறியதாவது:-

    கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது. இதன் மூலம் கார் பார்க்கிங் வசதி நேர்த்தியாக செய்து கொடுக்க முடியும். தரையில் இருந்து சீலிங் வரை 10 அடியில் இருந்து 11.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளது. இது சொந்த வீடு வாங்குவதற்கு உதவியாக இருக்கும் என்றார்.

    மேலும் கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. தற்போது 3 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டரக்கு மிகாமல் உள்ள கட்டி டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒழுங்க முறை ஆணை யத்தின் நிறைவு சான்றி தழ்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் அளவு மாறாமல் இருந்தாலும் குடியிருப்புவீடுகள் 3-ல் இருந்து 8 வரை கட்ட அனுமதிக்கப்படுகிறது. மேலும் வீடு கட்டுபவர்கள் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை நிறைவு சான்றிதழை சமர்பிக்காமல் எளிதாக பெறவும் இந்த திருத்தங்கள் உதவுகிறது.

    • இறந்தவர்கள் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    ஊட்டி:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரிட்ஜோ ஜேக்கப் மேத்யூ. இவர் நீலகிரி மாவட்டம் லவ்டேல் அடுத்த காந்தி நகரில் கடந்த 6 மாதங்களாக புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    தற்போது அங்கு தடுப்பு சுவர் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக அருகே உள்ள நகராட்சி கழிப்பறையையொட்டி 30 அடிக்கு மண்ணை வெட்டி எடுத்தனர். இதனால் கழிப்பறை அந்தரத்தில் தொங்கிய நிலையில் இருந்தது. ஆனால் இதனை யாரும் பொருட்படுத்தவிலை.

    நேற்று இங்கு பெண்கள் உள்பட 17 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். காலையில் பணியாளர்கள் அனைவரும் பணி நடந்த இடத்தின் அருகிலேயே அமர்ந்து டீ குடித்தனர்.

    அப்போது அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த கழிப்பறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அத்துடன் மண்சரிவும் ஏற்பட்டது. இதை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர்.

    இருந்த போதிலும் 12 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் மேல்காந்தி நகரை சேர்ந்த சகீலா (வயது30), பாக்கியலட்சுமி(42), சங்கீதா(35), ராதா(38), மேல் தலையாட்டு மந்துவை சேர்ந்த உமா(35), முத்து லட்சுமி ஆகிய 6 பேர் பிணமாகவே மீட்கப்பட்டனர்.வண்ணாரப்பேட் டையை சேர்ந்த நந்தகுமார்(25), கவுதம்(24), மகேஷ்(23), தாமஸ் (25), ஜெயந்தி (55), சாந்தி (45) ஆகிய 6 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்தவர்கள் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் திரண்டனர். இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பவ இடத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு காரை மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ஊட்டி லவ்டேல் போலீசார் கட்டி உரிமையாளர் பிரிட்ஜோ ஜேக்கப் மேத்யூ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேற்பார்வையாளர்கள் ஜாகீர் அகமது, ஆனந்தராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது அவர்கள் 4 பேரையும் வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவி னர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்ப ட்டது.

    ஆனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து நள்ளிரவு வரை போராட்டம் நீடித்தது.

    இதையடுத்து நள்ளிரவில் ஊட்டி தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. மகராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், தாசில்தார் சரவணன் ஆகியோர் இறந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையின் முடிவில் உறவினர்கள், இறந்த 6 பேரின் உடலை வாங்கி கொள்வதாக தெரிவித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இன்று காலை இறந்த 6 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே இங்கு கட்டப்பட்டு வரும் கட்டிடம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த அளவை மீறி கட்டப்பட்டுள்ளதும், அதிக சதுர அடியில் கட்டப்பட்டுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    • அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் அதில் கட்டிடம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • ஒரு சில இடங்களில் சிலர் தங்களிடம் இடத்திற்கான 300 வருட பத்திரங்கள் மற்றும் பட்டா உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    பரங்கிமலை மற்றும் பல்லாவரம் கண்டோன் மென்ட் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அதில் பல ஆண்டு காலமாக கட்டிடங்கள் இயங்கி வருவதாகவும் செங்கல்பட்டு கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் அதில் கட்டிடம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    கோர்ட்டு உத்தரவுப்படி வருவாய்த் துறையினர் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து பல்லாவரம் தாசில்தார் தலைமையில் போலீசார் உதவியுடன் அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்கத்தொடங்கினர். ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கட்டிடங்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. பின்பு ஆக்கிரமித்த கட்டிடங்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதில் தனியார் வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், விளையாட்டுக் கிளப்புகள், வர்த்தக கட்டிடங்கள், ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடங்கும்.

    பரங்கிமலை மற்றும் கண்டோன்மெண்ட் சுற்றியுள்ள பகுதிகளில் அரசுக்கு சொந்தமான சுமார் ரூ.2,500 கோடி மதிப்புள்ள 15 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    மீட்கப்பட்ட இந்த இடங்களில் அரசு கட்டிடம் மற்றும் மெட்ரோ ரெயில் பணிகளுக்கான இடம், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றலாம் என்று வருவாய்த்துறை மூலமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

    ஆலந்தூரை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ஆலந்தூர் மற்றும் பரங்கிமலை ரெயில் நிலைய பகுதியில் வாகனம் நிறுத்தும் இடங்கள் நாள்முழுவதும் நிரம்பி வழிகிறது. வாகன நிறுத்தும் இடம் அமைப்பதால் இந்த பிரச்சினையை தீர்ப்பதுடன், அரசு போதிய வருவாயும் ஈட்ட முடியும் என்றார்.

    ஆனால் பரங்கிமலை பகுதியில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ள ஒரு சில இடங்களில் சிலர் தங்களிடம் இடத்திற்கான 300 வருட பத்திரங்கள் மற்றும் பட்டா உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர். இது போன்ற ஆவணம் அதிகாரிகளிடம் இல்லை. இதனால் வருவாய் துறை அதிகாரிகள் தவறாக சீல் வைத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பில் அரங்கநாதன் பெயரில் மாதிரி நூலகம் கட்டப்பட்டு வருகிறது.
    • கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.

    சீர்காழி:

    சீர்காழியில் கிளை நூலகம் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மழைக்காலங்களில் வாடகை கட்டிடத்தில் மழைநீர் கசிந்தும், நூலக கட்டடங்கள் இடம் பெயரும் போதும் பல அரிய வகை நூல்கள் கிழிந்தும் சேதம் அடைந்து வந்தன.

    நூலக தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்த சீர்காழியில் அவரது பெயரில் மாதிரி நூலகம் அமைக்க வேண்டும் என பல ஆண்டு களாக வாசகர்கள், பொது மக்கள் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் கேள்வி நேத்தின் போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சீர்காழியில் அரங்கநாதன் பெயரில் புதிய நூலக கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார்.

    அதன்படி சீர்காழியின் மையப் பகுதியான மணி கூண்டு அருகே ரூ.1 கோடியே 32 லட்சம் செலவில் எஸ் .ஆர் .அரங்கநாதன் பெயரில் மாதிரி நூலகம் கட்டப்பட்டு வருகிறது.

    மாணவர்களுக்கானவசதி, போட்டித் தேர்வுக்கான வசதி, சிறுவர்கள் நூல்கள், மின் நூலகம், பெண்களுக்கான தனிப்பிரிவு என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த மாதிரி நூலகம் கட்டப்பட்டு வருகிறது .

    இதனிடையே இந்த நூலக கட்டடம் கட்டுமான பணியை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ,காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்ய நாதன் உடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கட்டடத்தில் ஒவ்வொரு பகுதியும் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.

    கட்டடத்தின் அருகில் உள்ள பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை இடமாற்றிவிட்டு அங்கு நூலக தந்தை அரங்கநாதன் சிலை வைத்திட விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து ஒரு மாத காலத்தில் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு திறக்கவும் அப்போது தெரிவித்தார்.

    ஆய்வின் போது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத்,மாவட்ட கலெக்டர் மகாபாரதி இணை இயக்குனர் அமுதவல்லி, கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செ ல்வம், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ,நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன்,துணைத் தலைவர் சுப்பராயன் மாவட்ட பொருளாளர் அலெக்ஸா ண்டர், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒப்பந்ததாரர் அன்பழகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்குரூ.3 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது
    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

     கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வை யிட்டு ஆய்வு செ ய்தார். மருத்துவமனையின் செயல்பாடுகளை பற்றியும் வசதிகளை பற்றியும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோச னைகளை வழங்கி னார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கறம்பக்குடி அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்து 36 படுக்கைகள் கொண்ட தாலுக்கா மருத்து வமனையாக கடந்த 2015 -ம் ஆண்டு மேம்ப டுத்தப்ப ட்டு செயல்ப டுத்த ப்பட்டு வருகிறது. மருத்து வம னையில் படுக்கை வசதிக்கு தான் கூடுதல் கட்டிடம் கட்ட கோரிக்கை வைக்க ப்பட்டது.

    அதன் அடிப்படையில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயும் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2 கோடியும் பெறப்பட்டு 50 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிட வசதிகள் மருத்து வமனைக்கு ஏற்படுத்தி தரநடவடிக்கை மேற்கொள்ளப்படும் மருத்துவர்கள் பணியா ளர்கள் காலிபணியி டங்க ளை நிரப்புவதற்கும் அவர்களு க்கான தங்கும் இடம் கட்டுவதற்கும் நிதிநி லை அறிக்கையில் உரிய நட வடிக்கை மேற்கொ ள்ள ப்படும்.

    மருத்துவமனையில் பிணவறை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய அறிவுறுத்த ப்பட்டுள்ளது. எக்ஸ்ரே வசதி ஸ்கேன் கருவி வழங்குவதற்கு நட வடிக்கை மேற்கொ ள்ளப்படும்.

    குறிப்பாக மருத்துவ மனையில் நிரந்தர பணியி டங்களை மூன்று மாதத்தி ற்குள் ஏற்படுத்தித் தந்து அரசாணை வெளியி டப்படும். இதன் மூலம் கரம்பக்குடி பகுதி மக்களின் நீண்ட நாள் மருத்துவ வசதி கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று அவர் கூறினார். இந்த ஆய்வி ன்போது மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கந்தர்வ கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்து ரை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே கே செல்ல பாண்டியன் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் அறந்தாங்கி மருத்துவத் துறை துணை இயக்குனர் நமச்சிவாயன் புதுக்கோட்டை மருத்துவத் துறை துணை இயக்குனர் ராம் கணேஷ் கரம்பக்குடி வட்டார மருத்துவ அலுவலர் பஜ்ருல் அகமது கரம்பக்குடி பேரூராட்சி தலைவரும் திமுக நகர செயலாளருமான முருகேசன் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாஞ்சாலன் ஒன்றிய குழு தலைவர் மாலா ராஜேந்திர துரை ஆத்மா சேர்மன் முத்துகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை மருத்துவத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • புதிய 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • கட்டுமான பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல், கட்டு மாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கட்டுமான பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதை தொடர்ந்து மேலப்போலகம், வவ்வாலடி பகுதிகளிலும் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் 2 வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பால முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஆதிதிராவிடர் விடுதி தேர்வு நிலை குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • திருமருகலில் தேசிய மையமாக மாற்ற வங்கி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கோபுரஜபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஒன்றியத்தில் செயல்படுத்த ப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் கோபுரஜபுரம் ஊராட்சியில் மகளிர் குழு கட்டிடம்,சமுதாய கூடம், அங்கன்வாடி கட்டிடம், கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டித் தர வேண்டும், தரம் உயர்த்தப்பட்ட திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும்.

    54 வருவாய் கிராமங்களை கொண்ட திருமருகலில் தனி சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.

    திருமருகலில் தேசிய மையமாக மாற்ற வங்கி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பெற்றுக் கொண்ட முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், இளஞ்செழியன், ஆரூர் மணிவண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் நன்றி கூறினார்.

    • ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.,வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
    • பொதுக்குழு உறுப்பினர் ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கீழ்பாடியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., கழக செயலாளரும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.,வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் பெரு மாள், துரைமுருகன், பாரதி தாசன், அசோக் குமார், ரிஷிவந்தியம் ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், ஒன்றிய துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணா துரை, கே.அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், அமிர்தம் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருலோகி நெடுந்திடலில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.
    • ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் கட்டி திறக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அடுத்த வீராக்கன் ஊராட்சி, திருவாய்பாடியில் வானவில் பாலின வள மையம் மற்றும் மற்றும் திருலோகி நெடுந்திடலில் 2 வகுப்பறை கட்டிடங்கள், கூத்தனூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம், இருமூளை ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் உள்பட 9 இடங்களில் ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், சண்முகம், அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், ஒன்றியக்குழு தலைவர் தேவி ரவிசந்திரன், துணை தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் மிசா மனோகரன், ரவி. உதயசந்திரன், பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், துணை தலைவர் கலைவாணி சப்பாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், நந்தினி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இளவரசி, ஊராட்சி தலைவர் பிரதாப் சிங் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருவாரூர் மாவட்டம் கூரை வீடுகள் அதிகமாக உள்ள மாவட்டம்.
    • மக்கள் உடல் நோயை தீர்த்து கொள்ளும் இடமாக விளங்கக்கூடியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு மருத்துவ மனையில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் 'கோவிட் சிறப்பு வார்டு' கட்டிடம் கட்டப்ப ட்டது.

    இந்த கட்டிடத்தை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசும்போது, திருவாரூர் மாவட்டம் கூரை வீடுகள் அதிகமாக உள்ள மாவட்டம். ஏழை எளியவர்கள் அதிகமா கவும், குடிசைகள் வீடுகள் நிறைந்த மாவட்ட மாகும். எனவே இந்த தொகுதியின் வளர்ச்சிதான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    இந்த மருத்து வமனையை பொருத்தவரை ஏழை எளிய மக்கள் உடல் நோயை தீர்த்து கொள்ளும் இடமாக விளங்க கூடியது. எது தேவை என்று கேட்கும் பட்சத்தில் நிதி ஒதுக்கி தருவேன் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான கோபால், இணை இயக்குநர் மருத்துவர் சிவக்குமார், தலைமை மருத்துவர் ரேணுகா, மருத்துவர்கள் வினோத் குமார், சக்ரவர்த்தி மற்றும் நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.குணசேகரன், ஒன்றிய துணை பெருந்தலைவர் சி.பி.ஜி. அன்பு, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சம்பத், நன்னிலம் நகர அ.தி.மு.க செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மணலூர் ஊராட்சியில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.
    • நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் அடுத்த வலங்கைமான் அருகே இனாம் கிளியூர் கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடமும், மணலூர் ஊராட்சியில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கமும் கட்டப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    விழாவில் வலங்கைமான் அ.தி.மு.க. கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சங்கர், இளவரசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தி தேவராஜன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் ராஜராஜசோழன், இனாம்கிளியூர் ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அருண், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×