விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டினால் மட்டுமே புதிய கட்டிடங்களுக்கு அனுமதி

ஊரமைப்பு துறை இயக்குனர் உறுதி ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை
மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தபோது எடுத்த படம் 
மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தபோது எடுத்த படம் 
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகரா ட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் சண்முகவேல் ராஜா கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டார்.

இன்று காலையிலும் ஆய்வுப் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரி களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஏற்கனவே கட்ட ப்பட்ட வீடுகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து புதிதாக கட்டப்படும் வீடுகள், வணிக வளாகங்கள் அரசின் விதி முறை களுக்கு உட்பட்டு கட்டினால் மட்டுமே அனுமதி அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com