search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாநகராட்சி பள்ளி அக்ரஹாரத்தில் பகுதிசபை கூட்டம்
    X

    பள்ளி அக்ரஹாரத்தில் நடந்த பகுதிசபை கூட்டத்தில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

    தஞ்சை மாநகராட்சி பள்ளி அக்ரஹாரத்தில் பகுதிசபை கூட்டம்

    • அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
    • பள்ளியில் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் உள்ள கிராமங்களில் குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம் ,காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சித் தினத்தன்றும் கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில் கிராம சபை கூட்டம் போல நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் வார்டு தோறும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பங்களிப்புடன் பகுதி சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது.

    அதன்படி உள்ளாட்சி தினமான இன்று தமிழகத்தில் முதல் முறையாக பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

    மேலும் முதல் முறையாக தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் என இரண்டு நகராட்சிகள் மற்றும் வல்லம், சுவாமிமலை உள்பட14 பேரூராட்சிகளிலும் முதல் முறையாக பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

    தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் இந்த பகுதி சபை கூட்டங்கள் நடந்தன. தஞ்சை மாநகராட்சி வார்டு எண் 1 பள்ளியக்ரகாரம் பகுதியில் பகுதி சபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது.

    துரை. சந்திரசேகரன் எம் .எல் .ஏ, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கலந்து கொண்டு வரவேற்றார்.

    கூட்டத்தில் 1 வார்டு 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடந்தன. பொதுமக்கள் சேர்ந்து ராமானுஜம் என்பவரை கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர்.

    கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசிய விவரம் வருமாறு:- சிங்கப்பெருமாள் கோவில் அருகே வேகத்தடையும். பள்ளி அக்ரஹாரம் பகுதியில் உடற்பயிற்சி கூடமும்.

    நவீன கழிப்பிடமும்,சேதமடைந்த ரேஷன் கடையை சீரமைத்தும். அங்கன்வாடிக்கு புதிய கட்டிடமும் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி தர வலியுறுத்தி பேசினர்.

    ஆசிரியர் ஒருவர் பேசும்போது, நகராட்சி பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து உணவருந்தும் கூடத்தின் மேற்கூரையை சீரமைக்க வேண்டும். போதிய அளவில் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

    அப்போது 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் பேசும்போது:-

    நான் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி செய்ய வேண்டும். பள்ளியில் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்று பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.மாணவியின் பேச்சை அனைவரும் ரசித்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கரந்தை பகுதி செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தஞ்சை மாநகராட்சி 25-வது வார்டு உட்பட்ட பகுதியான கீழ ராஜவீதி மணிகர்ணிகேஸ்வரர் கோவிலில் நடந்த பகுதி சபை கூட்டத்துக்கு கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

    இதில் பொதுமக்கள் தங்களது வார்டு சம்பந்த கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    Next Story
    ×