search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி"

    • ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி வெற்றவர்கள் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு எழுத வேண்டும்.
    • ஒவ்வொருவருக்கும், குடும்ப சுமையும், சமுதாய சுமையும் கூடிக்கொண்டே போகிறது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று கடந்த 10 ஆண்டுகளாக வேலையில்லாமல் தவித்துவரும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பணி வழங்கிட வேண்டும். 2013-ம் ஆண்டு தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள் அரசு பணி வழங்ககோரி இதுவரை பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். தற்பொழுது 2013-ம் ஆண்டு முதல் இதுரை தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி வெற்றவர்கள் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்ற 149-வது அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    கடந்த ஆட்சியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்றோர் நலச்சங்கம் நடத்திய போராட்டத்தில் திமுக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் வாக்களித்து வாக்குகளை பெற்று வெற்றியடைந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிராகரிப்பது எந்தவிதத்தில் நியாயம்.

    தமிழகம் முழுவதும் ஆசிரியர் பணியிடங்களுக்கு பல்லாயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று பணிக்காக காத்திருப்பவர்களுக்கு உடனடியாக தமிழக அரசு பணியினை வழங்க வேண்டும். ஒவ்வொருவருக்கும், குடும்ப சுமையும், சமுதாய சுமையும் கூடிக்கொண்டே போகிறது. தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் தகுதியுள்ள, தகுதிப்பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • சிதிலமடைந்த கட்டிடம் இடிப்பு: தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது
    • பொக்லைன் எந்திரம் மூலம் நிலம் சமன் செய்யும் பணி கள் தொடங்க ப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்க ணக்கான பயணிகளும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் வந்து செல்கி ன்றனர்.

    இந்த பேருந்து நிலைய த்தின் கட்டடங்கள் சிதல மடைந்து மேற்கூரைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இடிந்து விழுந்து வந்ததால் பொதுமக்களும் பயணிகளும் பெரும் அச்ச த்தோடு அந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இதற்கிடையே இந்த புதிய பேருந்து நிலையத்தில் காரைக்குடி பேருந்து நிற்கும் இடத்தில் உள்ள கடையின் முன்பு மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த தஞ்சையை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செ ல்வம் மற்றும் அவரது தாயார் வெள்ளையம்மாள் ஆகியோர் படுகாயமடைந்த னர்.

    இதையடுத்து சிதிலமடை ந்துள்ள பேருந்து நிலைய கட்டங்களை அசம்பாவி தங்கள் ஏற்படுவதற்கு முன்பு இடித்து அப்புற ப்படுத்திவிட்டு புதிய கட்ட டம் கட்ட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த னர்.

    இந்நிலையில் சம்பவ இடத்தை நகராட்சி அதிகாரி கள் மற்றும் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா ஆகி யோர் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக சிதல மடைந்த கட்டடத்தை இடி த்து அப்புறப்படுத்த நட வடிக்கை மேற்கொண்டனர்.

    மேலும் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்ப ட்டுள்ளது. இதையடுத்து தற்போது மேற்கூரை இடிந்த பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட கடைகள் உடனடியாக அங்கிருந்து காலி செய்யப்பட்டு கட்டி டத்தை சுற்றி பாதுகாப்பி ற்காக பச்சைத் துணியால் தடுப்புகள் அமைத்து ஜேசிபி டிரில்லர் உள்ளிட்ட இயந்திரங்கள் கொண்டு இடிக்கும் பணி தொடங்கியு ள்ளது.

    பேருந்து நிலைய கட்டடம் இடித்து அப்புறப்படுத்து வதால் அங்கு கடைகள் வைத்துள்ளவர்கள் வாழ்வாதாரம் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஆகவே அவர்களுக்கு மாற்று வழியை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது.

    அதை தொடர்ந்து எழில் நகரில் 6 ஏக்கர் இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்க ப்பட்டுள்ளது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் நிலம் சமன் செய்யும் பணி கள் தொடங்க ப்பட்டுள்ளது.

    • மண் சாலைகளை கான்கிரீட் சாலைகளாக மாற்றித்தரும்படி ஒன்றிய கவுன்சிலர் அவர்கள் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • தனது ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சி குள்ளம்பாளையம், கழுவேரிபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள மண் சாலைகளை கான்கிரீட் சாலைகளாக மாற்றித்தரும்படி ஒன்றிய கவுன்சிலர் மோகனப்பிரியா குமரேசனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர் .

    இதையடுத்து அவர் தனது ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அந்தப் பகுதிகளில் உள்ள மண் சாலைகளை கான்கிரீட் சாலைகளாக அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதைத்தொடர்ந்து குள்ளம்பாளையம், கழுவேரிபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள மண் சாலைகளை கான்கிரீட் சாலைகளாக அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

    • அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணி செய்வதின் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழி வாசிக்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் சேவைப்பணி ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை காவலர்களுடன் இணைந்து தூய்மைப்பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட தூய்மை காவலர்கள், ஊரகப்பகுதிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் நேரு யுவகேந்திராவில் உள்ள தன்னார்வ இளைஞர்கள் இணைந்து கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர். மேலும், அந்தந்த அரசு அலுவலகங்களில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணி செய்வதின் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழியை கலெக்டர் வாசித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் கலெக்டர் கூறுகையில், உறுதிமொழி எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் நமது சுற்றுப்புற பகுதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமை. கிராமப்புறங்களில் நீர் நிலைகள், பொது இடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என முறையாக பிரித்தெடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ராமர், மகளிர் திட்ட இயக்குனர் அருணாச்சலம், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா, தூய்மை இந்தியா இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை அண்டனூரில் தூய்மை பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்
    • துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணி மேற்கொண்டனர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கம் சார்பில்"குப்பை இல்லா இந்தியா" பிரச்சார இயக்கம் மூலம் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அண்டனூர் ஊராட்சி வேலாடிப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் தலைமையில் கிராம இளைஞர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் இணைந்து தூய்மை பணி மேற்கொண்டனர் இதில் ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி எழுத்தர் இளவரசன் , வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமியும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.

    • இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.
    • உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.

    அஸ்திவாரத்தோடு நின்று போன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த 17-ந்தேதி கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நடந்தது. திருவனந்தபுரத்தை சேர்ந்த 4 நம்பூதிரிகள் தேவபிரசன்னம் பார்த்தனர். அப்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்ட உத்தரவு கிடைத்தது. அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள 24-வது சக்தி பீடமான பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி விட்டு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும் சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கும் என்பதும் தேவ பிரசன்னத்தில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடப்பதற்காக வேண்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து மிருதிஞ்சய ஹோமமும் நடந்தது. இந்த ஹோமத்தை மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித்சங்கர நாராயணரூ நடத்தினார். அதன்பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் கன்னி மூலையான வெளி சுற்று பிரகாரத்தில் உள்ள தென்மேற்கு பகுதியில் கோவிலின் தலவிருச்சமான சந்தன மரம் நடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், மண்டல ஸ்தபதி செந்தில், கோவில் மேல் சாந்திகள் விட்டல் போற்றி, பத்மநாபன் போற்றி, நிதின்சங்கர் போற்றி, சீனிவா சன் போற்றி, கண்ணன் போற்றி, முன்னாள் கோவில் களின் கண் காணிப்பாளர் ஜீவா னந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 297 பேருக்கு பணி நியமன சான்றிதழ் வழங்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

      அரியலூர், 

    மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றா ண்டு விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவ ட்டம், செந்துறை அரசு பெண்கள் மே ல்நிலைப் பள்ளியில், மாவ ட்ட நிர்வாகம் ,மாவட்ட வே லைவாய்ப்பு மற்றும் தொ ழில்நெறி வழிகாட்டல் மை யம் சார்பில் நடைபெற்ற தனியார் துறை வே லைவாய்ப்பு முகாமில் 297 பேருக்கு பணி நியமனச் சா ன்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.முகாமுக்கு கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். அரி யலூர் எம்.எல்.ஏ கு.சின்ன ப்பா முன்னிலை வகித்தார். இந்த வேலைவாய்ப்பு முகா மை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடக்கி வைத்தார். பின்னர் பணி நியமனச் சான்றிதழ்களை வழங்கி பேசுகையில்,இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு 102 நிறுவனங்கள் வந்திரு க்கின்றன. முகா முக்கு வந்த 2,063 பேர் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து ள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வே லைவாய்ப்பு வழங்க முடியா து. முகாமில் கலந்து கொ ண்டவர்களில் 297 நபர்க ளுக்கு வேலை வாய்ப்பு க்கான ஆணை வழங்கப்ப டுகிறது. மேலும் 512 நபர்கள் 2-ம் கட்ட நேர்முக தேர்வு க்குகு தேர்வாகி யுள்ளனர். மீதம் இருப்பவர்கள் வேலை கிடைக்கவில்லை என்று வருத்தப்பட தேவையில்லை. அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெறுகின்ற இதே போன்ற வேலைவாய்ப்பு முகாம்க ளில் நாம் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள நம்மை தயார் செய்ய வே ண்டும. இந்த அனுபவத்தின் மூ லமாக அடுத்த நேர்கா ணலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளி க்கும் வகையில் நாம் நம்மை தயார் கொள்ள வேண்டும். வரும் ஜனவரி மாதத்தில் மாபெரும் தொழில் முத லீட்டு மாநாடு நடைபெற இரு க்கின்றது. பல நாட்டைச் சேர்ந்த தொழில் நிறு வனங்களை பங்கேற்க செய்து தமிழகத்தில் வேலை வா ய்ப்பு பெறுகின்ற வகை யில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். குன்னம் தொகுதியில் சிப்காட்டில் தைவான் நாட்டைச் சேர்ந்த கா லனி தயாரிக்கும் தொ ழிற்சாலை வரவுள்ளது. அ தனையொட்டி 5,000 முதல் 10,000 வேலை வாய்ப்பு பணிகள் கிடைக்க உள்ளது என்றார். இம்முகாமில் ஊ ரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், மா வட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.க லைச்செ ல்வன், செந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் செல்லம் கடம்பன், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மூ.வினோ த்குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்டனர்.
    • கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள மறுகால் ஓடை மற்றும் பொதுமக்கள் குளிக்கும் படித்துறை உடைந்து சேதம் அடைந்த நிலையில் பல ஆண்டுகளாக பராமரிக்கப் படாமல் கிடந்தது. இதனால் பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்ட னர். இதைத் தொடர்ந்து குளத்தின் படித்துறை மற்றும் மறுகால் ஓடையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று சமூக ஆர்வலர் வக்கீல் சந்திர சேகரன் ஏற்பாட்டில் மறு கால் சீரமைப்பு பணி தொடங்கியது.

    இந்த பணியை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி துணை தலைவி விமலா, நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மதி, காங்கிரஸ் வட்டார துணை தலைவர் அரி கிருஷ்ண பெருமாள், தி.மு.க. நிர்வா கிகள் முருகன், சாமிநாதன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
    • பசுமை போலீஸ் நிலையங்களாக மாற்றும் வகையில்

    அரியலூர்:

    அரியலூர் தாமரைக்குளம்: சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், தூய்மையான காற்று கிடைக்கவும் அரியலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பசுமையை உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களை பசுமை போலீஸ் நிலையங்களாக மாற்றும் வகையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணியை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார். குறிப்பாக பறவைகளுக்கு உணவு அளிக்கும் வகையில் சப்போட்டா, மாதுளை, கொய்யா, மா உள்ளிட்ட மரக்கன்றுகள் மற்றும் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன.

    • 15 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றப்பட்டனர்.
    • சூப்பிரண்டு வந்திதா பாண்டே அதிரடி

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்- இன்ஸ்பெக்டர்களில் 15 பேரை பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதில் பொது மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிட மாற்றம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் நகரை பொறுத்த வரை கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்கங்களில் மழைநீர் தேங்கியது.

    கொசுப்புழு ஒழித்தல்

    இதையடுத்து நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    மேலும் வீடு, வீடாக சென்று கொசு மருந்து அடித்தல், கொசுப்புழு ஒழித்தல் உள்ளிட்ட பணிகளில் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணி வாரம் தோறும் வார்டு வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தினமும் 45 பணியாளர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட 12 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் உத்தரவின்படி நகராட்சி பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் தண்ணீரில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், வீடுகளின் முன்புறம் உள்ள தொட்டிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.

    டெங்கு

    இதுகுறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் திருமூர்த்தி கூறுகையில் மழைக் காலங்களில் கொசுவால் ஏற்படும் நோய்களை தடுக்க நகராட்சி பகுதியில் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொசு உற்பத்தியை தடுக்க மருந்து தெளிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் டெங்கு பரவலை தடுக்க முடியும் என்றார்.

    • நம் உடல் உறுதியாக இருந்தால் தான் பணியை சிறப்பாக செய்ய முடியும்.
    • காவல்துறை பணி கடுமையான சவாலான பணி.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த சிறப்பு சப்-இன்ஸ்பெ்கடர் ரமேஷ்குமார், எடையூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து விருப்ப ஒய்வு பெற்று உயிரிழந்த நம்பிராஜன் குடும்பத்தினருக்கு தலா 7 லட்சம் வீதம் 14 லட்சம் வழங்கினர்.

    இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் பேசும்போது காவல்துறையில் தங்களது பேட்ஜ் நண்பர்கள் குடும்பத்தினருக்கு தாங்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என காட்டுவதாக இந்த நிகழ்வு உள்ளது. காவல்துறை பணி கடுமையான சவாலான பணி. மன அழுத்ததை தங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டு இனி மாதம் ஒரு முறை குடும்பத்தினருடன் அதிகாரிகளுடன் தங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படும். சுவர் இருந்தால் தான் சித்திரம் என்ற பழமொழிக்கு எடுத்துகாட்டாக நம் உடல் உறுதியாக இருந்தால் தான் பணியை சிறப்பாக செய்ய முடியும். அதனால் மது. புகையிலை பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை அறவே நிறுத்த வேண்டும் என்றார். இந்நிகழ்வில் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி.சோமசுந்தரம். இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உடனிருந்தனர்.

    ×