search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டும்"

    • ரா ஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.
    • ரா ஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலில் ராஜ கோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்து வந்தது. அஸ்திவாரத்தோடு நின்று போன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டதில் கும்பாபிஷேகம் நடத்தி விட்டு பணியை தொடங்க வேண்டும் என்று அருள்வாக்கு கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ரா ஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. சமீபத்தில் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை கட்டிய ஸ்தபதியின் மகன் ஆனந்த் ஸ்தபதி மற்றும் தொல்லியல் துறையினர், இந்து சமய அறநிலையத்துறை வடி வமைப்பு பொறியாளர் முத்துசாமி தலைமையிலான வல்லுனர் குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடக்க வேண்டி கணபதி ஹோமமும் மிரு திஞ்சய ஹோமமும் நடத்தப்பட்டது. ராஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது. இந்த நிலையில் இறுதி கட்ட ஆய்வாக இந்து சமய அற நிலையத் துறையின் தலைமை ஸ்தபதியும் மகா பலிபுரம் அரசு சிறப்பு கலைக் கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூர்த்தி தலைமை யிலான வல்லுனர் குழுவினர் இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபாராம கிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், மண்டல ஸ்தபதி செந்தில், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.
    • உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.

    அஸ்திவாரத்தோடு நின்று போன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த 17-ந்தேதி கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நடந்தது. திருவனந்தபுரத்தை சேர்ந்த 4 நம்பூதிரிகள் தேவபிரசன்னம் பார்த்தனர். அப்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்ட உத்தரவு கிடைத்தது. அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள 24-வது சக்தி பீடமான பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி விட்டு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும் சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கும் என்பதும் தேவ பிரசன்னத்தில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடப்பதற்காக வேண்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து மிருதிஞ்சய ஹோமமும் நடந்தது. இந்த ஹோமத்தை மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித்சங்கர நாராயணரூ நடத்தினார். அதன்பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் கன்னி மூலையான வெளி சுற்று பிரகாரத்தில் உள்ள தென்மேற்கு பகுதியில் கோவிலின் தலவிருச்சமான சந்தன மரம் நடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், மண்டல ஸ்தபதி செந்தில், கோவில் மேல் சாந்திகள் விட்டல் போற்றி, பத்மநாபன் போற்றி, நிதின்சங்கர் போற்றி, சீனிவா சன் போற்றி, கண்ணன் போற்றி, முன்னாள் கோவில் களின் கண் காணிப்பாளர் ஜீவா னந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.
    • இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழைய பாளையத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர்.

    இக்கோவிலை புதுப்பித்து, திருப்பணிகள் செய்து, ராஜகோபுரம் அமைத்து கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதை ஏற்று, தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின், திருப்பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர், கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    • ஒன்றிய மற்றும் மாநில அரசு தலா, 2.40 லட்சம் நிதி வழங்கி, 74 வீடுகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
    • ஆனால், குடியிருப்பு கட்டிட பணி துவங்கப்படாமல் இருந்து வந்தது.

    சங்ககிரி:

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 22 ஊராட்சி மன்றங்களில், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், 2021–22 நிதியாண்டில், ஒன்றிய மற்றும் மாநில அரசு தலா, 2.40 லட்சம் நிதி வழங்கி, 74 வீடுகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், குடியிருப்பு கட்டிட பணி துவங்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலரும், உட்கட்டமைப்பு மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல அலுவலருமான நக்கீரன் தலைமையில் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், பி.டி.ஓ .முத்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா ,பணி மேற்பார்வையாளர் குமார் ஆகியோர் நேரில் சென்றனர். அங்கு பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி முதல் கட்டமாக கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சியில், 10 வீடுகள் கட்ட அளவீடுகள் செய்து பணிகளை தொடங்கினர்.

    • காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 2006 -ம் ஆண்டு நீர்மின்நிலையம் மற்றும் பெரிய வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
    • இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி, ஈரோடு மாவட்டம் பாசூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 2006 -ம் ஆண்டு நீர்மின்நிலையம் மற்றும் பெரிய வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அப்போது காவிரி ஆற்றுக்குள் இருந்த பாறை களை உடைத்து காவிரி ஆற்றுக்குள் மழை போல் குவியல் குவியலாக போட்டனர்.

    இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் காவிரி ஆற்றுக்குள் மலை போல் குவிந்து கிடக்கும் கற்களை அகற்றாமல் அப்படியே வைத்துள்ளனர்.

    இந்த கருங்கற்கள் மலை போல் குவிந்து கிடப்பதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து வரும்போது தண்ணீர் காவிரி ஆற்றில் வேகமாக செல்ல முடியாமல் சோழசிராமணி காவிரி கரையோரம் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.

    எனவே பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காவிரி ஆற்றுக்குள் மலை போல் குவிந்து கிடக்கும் கருங்கற்களை ஏலம் விட்டு அகற்ற வேண்டும் என சோழசிராமணி பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×