search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajagopuram"

    • திருவாடானை பெரிய கோவில் ராஜ கோபுரத்தில் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது.
    • அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    திருவாடானை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் சிநேகவள்ளி தாயார் -ஆதி ரெத்தினேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 14 தலங்களில் 8-வது தலமாக விளங்குகிறது.

    இந்த கோவிலின் ராஜகோபுரம் 9 நிலைகளை கொண்டுள்ளது. இதில் ஆங்காங்கே ஆலமரம், அரசமரம். வேப்பமரம் போன்ற மரக்கன்றுகள் முளைத்திருப்பதால் கோபுரங்களில் உள்ள சுதை சிற்பங்கள் கீழே விழுந்து வருகின்றன. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கோவில் ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சுயம்புலிங்கசுவாமி கோவில் முன்பு 108 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது
    • ராஜகோபுர பணி 32 அடி நிறைவடைந்த நிலையில் நேற்று காலை உத்திரம் அமைக்கும் பணி நடந்தது.

    திசையன்விளை:

    தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் பிரசித்தி பெற்றது திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் இங்கு சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.

    இக்கோவில் முன்பு 108 அடி உயரத்தில் 9 நிலைகொண்ட முழுவதும் கருங்கற்களால் ஆன ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    கோபுர நிலையில் 108 சிவதாண்டவத்தை நினைவுகூறும் வகையில், கோபுர நிலைகளில் 108 சிவதாண்டவ சிற்பங்கள் அழகிய கலை வேலைப் பாடுகளுடன் அமைக் கப்பட்டுள்ளது.

    ராஜகோபுர பணி 32 அடி நிறைவடைந்த நிலையில் நேற்று காலை உத்திரம் அமைக்கும் பணி நடந்தது. முன்னதாக கோ பூஜை நடந்தது.

    பின்பு கோபுர உத்தி ரத்திற்கு மாலை அணி வித்து மலர்தூவி பால், பன்னீர், தேன் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்பு 12 டன் எடை கொண்ட 10 கருங்கல் உத்திரங்களை கிரேன் மூலம் நிறுவும் பணி வானவேடிக்கை முழங்க நடந்தது.

    விழாவில் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன், பேராசிரியை நிர்மலா ராதாகிருஷ்ணன், ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், துணைத்தலைவர் ்கனக லிங்கம், செயலாளர் வெள்ளையா நாடார், பொருளாளர் சுடலை மூர்த்தி, ராஜ கோபுரகமிட்டி உறுப்பினர் ராஜாமணி, தேர் திருப்பணி குழு செயலாளர் தர்மலிங்க உடையார், ஆடிட்டர் ஜீவரத்தினம், ஸ்தபதி சந்தானகிருஷ்ணன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • சுகப்பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல்.
    • பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஆயிரம் லிங்கா கோணா கோவிலில் புதிய ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தலைமை தாங்கினார். முக்கிய விருந்தினராக ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி பங்கேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை வருமாறு:-

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான தர்மராஜா கோவில் அருகில் காலியாக உள்ள பகுதி தனி நபர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் இருக்க 2 திருமண மண்டபங்களை கட்டுவது.

    வெயிலிங்கால கோணா (ஆயிரம் லிங்கா கோணா) கோவிலில் புதிய கோபுரம் கட்டி மகா கும்பாபிஷேகம் நடத்துவது.

    சுகப் பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல், பக்தர்களின் வசதிக்காக ஞானப்பிரசுனாம்பிகா சதன் முதல் பரத்வாஜ் சதன் வரை சாலை அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்துதல்.

    சொர்ணமுகி ஆற்றில் ராம-சேது பாலத்துக்கும் புதிய பாலத்துக்கும் இடையே உள்ள பகுதியில் கிழக்கு நோக்கிய சூரியநாராயணமூர்த்தி உருவச்சிலை, மேற்கு நோக்கிய கால பைரவர் சிலை ஏற்பாடு செய்தல்.

    ஜல விநாயகர் கோவிலின் முன் தெற்கு நோக்கிய குரு தட்சிணாமூர்த்தி சிலையை அமைத்தல். பக்த கண்ணப்பர் மலையில் கட்டப்பட்டுள்ள சிவன்-பார்வதி சிலைகளை சுற்றி மலர் செடிகளை நடுதல்.

    சாமியின் நெப்பல மண்டபத்தையொட்டி உள்ள நகராட்சி வணிக வளாகத்துக்கு நஷ்டஈடு வழங்குவதன் மூலம், அதைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

    பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் சன்னதியில் வரலட்சுமி விரதம், கோதா தேவி கல்யாணம், சீதா-ராம கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தென்மேற்கு பகுதியில் மண்டபம் அமைத்தல்.

    பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் ஸ்ரீகிருஷ்ணா மந்திரம் புதிதாக கட்டுவது.

    பெத்தக்கன்னலியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவில் என்பதை பக்தர்கள் அறியும் வகையில் பிரதான சாலையில் வளைவு அமைத்தல்.

    கனகதுர்காதேவி நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, பிரசாதம் வழங்க மலையின் உச்சியில் சமையல் அறை அமைப்பது. அஞ்சூரு மண்டபம் முதல் துபான் சென்டர் வரை, சுற்று வட்டாரக் கிராம மக்களின் விருப்பம் மற்றும் கோரிக்கையின் படி சாமி, அம்பாளுக்கு ஆரத்தி எடுக்க நிரந்தரமாக நான்கு ஓய்வு மண்டபங்கள் கட்டுதல்.

    பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல். கோவிலுக்குள் வாகன மண்டபம் மற்றும் ஆச்சார்யா மண்டபம் நவீன மயமாக்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அவினாசியில் கொங்கு லிங்கேஸ்வரர் கோவில். ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது.
    • அவினாசிலிங்கேஸ்வரர் ஏழுநிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் செய்ய உள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்தனர்.

    அவினாசி, ஆக.2-

    அவினாசியில் கொங்கு லிங்கேஸ்வரர் கோவில். ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது. இங்கு ஸ்ரீ கருணாம்பிகை உடனமர்அவினாசி லிங்கேசஸ்வரர் அமைந்து ள்ளார். இக்கோவில் கும்பாபி ஷேகம் நடத்துவதற்காக திருப்பணி நடைபெற்று வருகிறது. அதற்காக கடந்த மாதம் 23-ம் தேதி கோவிலில் உள்ள பரிவார சன்னதி விமானங்களுக்கு ஹோமம் நடத்தி பாலாலயம் செய்யப்பட்டது.

    இதன் அடுத்த கட்டமாக அவினாசிலிங்கேஸ்வரர் ஏழுநிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் செய்ய உள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்தனர். அதன்படி நாளை 4ந்தேதி காலை 9 மணியளவில் சிறப்பு வழிபாடு, ஹோமம் மற்றும் பாலாலயம் நடைபெற உள்ளது.

    • கிழக்கு ராஜகோபுரத்தில் கோபுர கலசம் வைக்கும் பணி தொடங்கியது.
    • நவதானியங்களை கோபுர கலசத்தில் இட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோவில் உள்ளது. திருஞானசம்பந்தர்க்கு, உமையம்மை ஞானபால் வழங்கிய இத்தலத்தில் திருநிலை நாயகி அம்மன் உடனடியாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி கோவிலில் உள்ள நான்கு கோபுரங்கள், பிரகாரங்கள், அனைத்து சுவாமி சன்னதிகள், விமானங்கள் புதுப்பிக்கப்பட்டும் கருங்கல் சன்னதி மற்றும் கருங்கல் பிரகாரம் அமைக்கப்பட்டும் திருப்பணிகள் நிறைவு பெற்று வருகிறது.

    இக்கோவிலில் உள்ள ருணம் தீர்த்த விநாயகர் விமானத்தில் தர்மபுரம் ஆதீனம் 27ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திருகரத்தால் கோபுர கலசம் வைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று கிழக்கு ராஜகோபுரத்தில் கோபுர கலசம் வைக்கும் பணி தொடங்கியது. முன்னதாக கோபுர கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு செய்யப்பட்டு கிழக்கு ராஜகோபுர திருப்பணி உபயதாரர் மார்கோனி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் பக்தர்கள் நவதானியங்க ள்கோபுர கலசத்தில் இட்டு கலசத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    பின்னர் கோபுர கலசங்கள் கிழக்கு ராஜகோபுரத்தில் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.
    • இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழைய பாளையத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர்.

    இக்கோவிலை புதுப்பித்து, திருப்பணிகள் செய்து, ராஜகோபுரம் அமைத்து கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதை ஏற்று, தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின், திருப்பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர், கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    • கோவில் உற்சவா் மண்டபத்தில் உள்ள உற்சவா்கள் பாதுகாப்பு அறையில் வைத்தனா்.
    • இத்திருப்பணி மாா்ச் 24-ந் தேதி தொடங்கப்படவுள்ளது.

    அவினாசி :

    கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரா் பதிகம் பாடி உயிருடன் மீட்டெடுத்த தலமாகவும் கருணாம்பிகை யம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் விளங்குகிறது.

    இக்கோவிலில் திருப்பணிகள் செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, கருணாம்பிகையம்மன் ஐந்து நிலை ராஜகோபுரம் திருப்பணிக்காக பாலாலய சிறப்பு பூஜை நேற்று இரவு நடைபெற்றது.

    இதில் சா்வசாதகா் சிவகுமாா் சிவாச்சாரியாா் தலைமையிலானோா், தெய்வங்களின் சக்திகளை கும்ப கலசங்களில் கலாஹா்ஷணம் செய்து கண்ணாடியில் ஆவாஹணம் செய்து நித்யபடி பூஜைக்காக கோவில் உற்சவா் மண்டபத்தில் உள்ள உற்சவா்கள் பாதுகாப்பு அறையில் வைத்தனா்.இத்திருப்பணி மாா்ச் 24-ந் தேதி தொடங்கப்பட வுள்ளது.பாலாலய சிறப்பு பூஜையில் கோவில் செயல் அலுவலா் பெரியமருதுபா ண்டியன், ஆய்வாளா் செல்வபிரியா, அவிநாசி வாகிசா் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள், பக்தா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

    ×