search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் அருகே அங்காளம்மன் கோவிலுக்கு ரூ. 1 1/2 கோடி செலவில் ராஜகோபுரம்
    X

    நாமக்கல் அருகே அங்காளம்மன் கோவிலுக்கு ரூ. 1 1/2 கோடி செலவில் ராஜகோபுரம்

    • தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.
    • இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழைய பாளையத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர்.

    இக்கோவிலை புதுப்பித்து, திருப்பணிகள் செய்து, ராஜகோபுரம் அமைத்து கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதை ஏற்று, தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின், திருப்பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர், கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    Next Story
    ×