search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி பகவதி"

    • நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 5-ம் திருவிழாவான நேற்று மாலை ஆன்மீக உரையும், இரவு திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் நாட்டிய குழுவினரின் பரதநாட்டியமும் நடந்தது.

    அதன் பிறகு பல வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகா ரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் தலைமையில் இலங்கை பக்தர்கள் கூடை, கூடையாக தாமரை, மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர்களை தூவி வழிபட்ட நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும் போது கோவில் ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடல் பாடியபடி அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிர கார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராத னையும் நடந்தது.

    6-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பிலும் காலை 10 மணிக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சார்பிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபர ணங்கள் மற்றும் சந்த னக்காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும், அதைத் தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் நடந்தது.

    மாலையில் சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிர காரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.
    • உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.

    அஸ்திவாரத்தோடு நின்று போன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த 17-ந்தேதி கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நடந்தது. திருவனந்தபுரத்தை சேர்ந்த 4 நம்பூதிரிகள் தேவபிரசன்னம் பார்த்தனர். அப்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்ட உத்தரவு கிடைத்தது. அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள 24-வது சக்தி பீடமான பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி விட்டு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும் சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கும் என்பதும் தேவ பிரசன்னத்தில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடப்பதற்காக வேண்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து மிருதிஞ்சய ஹோமமும் நடந்தது. இந்த ஹோமத்தை மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித்சங்கர நாராயணரூ நடத்தினார். அதன்பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் கன்னி மூலையான வெளி சுற்று பிரகாரத்தில் உள்ள தென்மேற்கு பகுதியில் கோவிலின் தலவிருச்சமான சந்தன மரம் நடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், மண்டல ஸ்தபதி செந்தில், கோவில் மேல் சாந்திகள் விட்டல் போற்றி, பத்மநாபன் போற்றி, நிதின்சங்கர் போற்றி, சீனிவா சன் போற்றி, கண்ணன் போற்றி, முன்னாள் கோவில் களின் கண் காணிப்பாளர் ஜீவா னந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×