என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Task"

    • சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை என தயாரிக்கப்படுகிறது.
    • இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இனிப்பு பலகாரம் செய்யும் நிறுவனங்கள், அதிக அளவில் இனிப்புகளை செய்வர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.இவை மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை என தயாரிக்கப்படுகிறது.

    தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல சந்தைக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனை வியாபாரிகள் வாங்கி பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இனிப்பு பலகாரம் செய்யும் நிறுவனங்கள், அதிக அளவில் இனிப்புகளை செய்வர். இதனால் அதிக அளவில் வெல்லம் தேவைப்படுவதால், வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வெல்ல சிப்பங்களை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். எனவே வெல்லம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 200க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தொழிலாளர்கள் இரவு, பகலாக உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் தயார் செய்து அவ்வப்போது வியாபாரிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

    • சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தென் மண்டல ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.
    • இந்த இரட்டை கொலை சம்பவம் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகளான ஜோதி மணி (60), சங்கரபாண்டியன் (65)இருவரும் எம்.டி.ஆர்.நகர் 2-வது தெருவில் வசித்து வந்த நிலையில் கடந்த 18.7.22 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

    இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவின் பேரில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அறிவுறுத்தலின் பேரில் சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாத் தலைமையில் சிறப்பு படை நியமிக்கப்பட்டு இரட்டை கொலை செய்த குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

    சம்பவம் நடந்த வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகள் மூலம் போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த கொலை வழக்கில் ஜோதி புரம் 7-வது தெருவில் வசிக்கும் தனியார் மில் ஊழியர் சங்கர் (42), அவரது மனைவி பொன்மணி (35) ஆகியோரை கைது செய்தனர்.

    ஆசிரியர் தம்பதிகளை சங்கர் பணத்திற்காக கொலை செய்தார். இதற்கு அவரது மனைவி உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. கணவன்-மனைவி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சிறப்பு காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாத், காவல் ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் நாகராஜ பிரபு, தலைமை காவலர் அன்பழகன் மற்றும் காவலர்களை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    • துப்பாக்கி சுடுதல், கலவர தடுப்பு, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது.
    • பயிற்சி நிறைவு பெற்ற, 97 போலீசாரும் கோவையில் உள்ள சிறப்பு காவல் படைக்கு செல்ல உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு தேர்ச்சி பெற்ற 97 இரண்டாம் நிலை போலீசார் கடந்த மார்ச் மாதம் முதல் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இவர்களுக்கு கவாத்து, சட்டப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், கலவர தடுப்பு, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 7மாதமாக அளிக்கப்பட்ட பயிற்சி நிறைவு பெற்றது.

    பயிற்சி நிறைவு விழா மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது. திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமி, திருப்பூர் எஸ்.பி., சஷாங் சாய் ஆகியோர் பங்கேற்றனர். போலீசாரின் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.மேலும், பயிற்சி நிறைவு பெற்ற, 97 போலீசாரும் கோவையில் உள்ள சிறப்பு காவல் படைக்கு செல்ல உள்ளனர்.

    • இரண்டு காவலர்கள் முழு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காரணம் இல்லாமல் வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சீர்காழி :

    தமிழகத்தில் கோவையில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் என ஏழு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியில் வசிக்கும் இந்து முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சரண்ராஜ் மற்றும் தென் பாதி வ.உ.சி தெருவில் வசிக்கும் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், திருவெண்காடு பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோரது இல்லங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    1 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு காவலர் என இரண்டு காவலர்கள் முழு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரம் போலீஸ் ஒன்று பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் தேவை இன்றி உரிய காரணங்கள் இல்லாமல் வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சீர்காழி பகுதியில் பெட்ரோல் பங்குகளில் கேன்கள் மற்றும் பாட்டில்களில் சில்லரை பெட்ரோல் விற்பனை செய்ய காவல்துறை தடை செய்து அறிவித்துள்ளது.

    இதனால் பெட்ரோல் நிலையங்களில் சில்லறை பெட்ரோல் விற்பனை இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    • கரியகோவில் அணைக்கு தினமும் 50 கன அடி நீர் கூடுதலாக கிடைக்கும் கைக்கான்வளவு திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.
    • இதில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பாப்பநாயக்கன்பட்டியில் 188.76 ஏக்கரில் கரியகோவில் அணை கட்டப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பாபநாசம், பெருஞ்சாணி, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, முல்லைப் பெரியாறு, திருமூர்த்தி, வைகை உள்பட 100-க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இந்த அணைகள் தமிழகத்தின் நீர்வளத்தை பாதுகாக்கின்றன.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மேட்டூர், கரியகோவில், ஆனைமடுவு உள்ளிட்ட முக்கிய அணைகள் உள்ளது. இதில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பாப்பநாயக்கன்பட்டியில் 188.76 ஏக்கரில் கரியகோவில் அணை கட்டப்பட்டுள்ளது. அதன்மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    அணைக்கு கூடுதல் தண்ணீர் பெற 2020-ல் கைக்கான்வளவு நீரோடை திட்டம் அமைப்பது குறித்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். ெதாடர்ந்து 7.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணியை 18 மாதங்களில் முடிக்க அரசு அறிவுறுத்தியது.

    மதகுகள் அமைப்பு

    அதன்படி 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பணி தொடங்கப்பட்டது. செப்டம்பர் பருவ மழைக்கு பின், 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் பணி தொடங்கப்பட்டது. கரியகோவில் அணைக்கு கைக்கான்வளவு நீரோடையில் இருந்து புதிதாக ஓடை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. அங்கு மதகுகள் அமைத்து, அைணக்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் (நீர்வளம்) கூறியதாவது:-

    கைக்கான்வளவு திட்டத்தில் சீரான இடைவெளியில் 8 தொட்டிகள் அமைத்து, அங்கிருந்து நீர் வர, 295 மீட்டர் தூரம் கான்கிரீட் கால்வாய் அமைக்கப்படுகிறது. கால்வாய் கட்டுமானப்பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. குறிப்பாக 90 சதவீத பணி முடிந்துள்ளது.

    நவம்பரில்...

    நவம்பரில் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் கரியகோவில் அணைக்கு பருவ மழையின்போது தினமும் 50 கன அடி நீர் கூடுதலாக கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சேலம் கோட்டத்தில் சேலம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 2000 மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • இந்த நிலையில் சேலம் கோட்டத்தில் 8 பெண் கண்டக்டர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் கோட்டத்தில் சேலம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 2000 மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 32 பணிமனைகள் உள்ளன .

    அரசு பஸ்களில் பொதுவாக டிரைவர், கண்டக்டர்கள் 100 சதவீதம் ஆண்களே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் கோட்டத்தில் 8 பெண் கண்டக்டர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சேலம், நாமக்கல், மாவட்டத்தில் 4 பேரும், தர்மபுரியில் 4 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பணி மனையில் லதா என்பவர் கண்டக்டராக பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தாரமங்கலம், மேட்டூர் அரசு டவுன் பஸ்சிலும், ராசிபுரம் பணிமனையில் இளையராணி என்பவர் ராசிபுரம், சேலம் வழித்தடத்திலும் இயங்கும் அரசு பஸ்சிலும் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்கள்.

    இதே போல் அனுசியா என்பவர் பெங்களூரு, சேலம் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றுகிறார். தருமபுரியில் 2 பெண்கள் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகின்றனர். வாரிசு வேலையின் அடிப்படையில் இந்த பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

    • சேலம்- மேட்டூர் அணை பாதையை இருவழித்தடமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
    • இப்பணியை 3 பகுதிகளாக பிரித்து கட்டுமானப்பிரிவு மேற்கொள்ளப்பட்டது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டூரில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையத்திற்கு சரக்கு ரெயில்களில் நிலக்கரி லோடு மிக அதிக அளவு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த வழித்தடம் ஆரம்பத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்தது. அதனை அகல ரெயில் பாதையாக மாற்றினர். ஆனால் மேட்டூர் அணைக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் போக்குவரத்தை விரிவுபடுத்தும் வகையில் சேலம்- மேட்டூர் அணை பாதையை இருவழித்தடமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

    இதன்படி சேலம்-மேட்டூர் அணை இருவழிப்பாதை திட்டத்திற்கு கடந்த 2012- ஆண்டு மத்திய அரசு ரூ.220 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, பணியை ரெயில்வே நிர்வாகம் ெதாடங்கியது. இப்பணியை 3 பகுதிகளாக பிரித்து கட்டுமானப்பிரிவு மேற்கொள்ளப்பட்டது. அதாவது மேட்டூர் அணை- மேச்சேரி ஒரு பகுதியாகவும், மேச்சேரி- ஓமலூர் ஒரு பகுதியாகவும், ஓமலூர்- சேலம் ஒரு பகுதியாகவும் பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் முதல் இரு கட்ட பணிகள் நிறைவடைந்து, அப்பாதையில் மின்வழித்தடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 3-ம் கட்ட பணியாக சேலம் - ஓமலூர் இடையே சுமார் 15 கிலோ மீட்டருக்கு புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணியை தற்போது ெரயில்வே கட்டுமானப்பிரிவு தீவிரப்படுத்தி உள்ளது. ஏற்கனவே சேலம்- பெங்களூரு மார்க்கத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்த பழைய தண்டவாளங்களை அகற்றிவிட்டு, புதிதாக அகல ரெயில் பாதை தண்டவாளங்களை அமைக்க இடத்தை தயார்படுத்தினர்.

    தொடர்ந்து தற்போது சேலம் ஜங்சன் யார்டு பகுதியில் இருந்து ரெட்டிப்பட்டி, மேக்னசைட் வழியே புதிய தண்டவாளங்களை அமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இப்பணியை இன்னும் 6 மாத காலத்திற்குள் முடிக்க ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது இணை தண்டவாள பாதையாக விளங்கும். இந்த பணியை விரைந்து முடித்து மின்வழித்தடத்தையும் ஏற்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ×