search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "For women"

    • சேலம் கோட்டத்தில் சேலம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 2000 மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • இந்த நிலையில் சேலம் கோட்டத்தில் 8 பெண் கண்டக்டர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் கோட்டத்தில் சேலம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 2000 மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 32 பணிமனைகள் உள்ளன .

    அரசு பஸ்களில் பொதுவாக டிரைவர், கண்டக்டர்கள் 100 சதவீதம் ஆண்களே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் கோட்டத்தில் 8 பெண் கண்டக்டர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சேலம், நாமக்கல், மாவட்டத்தில் 4 பேரும், தர்மபுரியில் 4 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பணி மனையில் லதா என்பவர் கண்டக்டராக பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தாரமங்கலம், மேட்டூர் அரசு டவுன் பஸ்சிலும், ராசிபுரம் பணிமனையில் இளையராணி என்பவர் ராசிபுரம், சேலம் வழித்தடத்திலும் இயங்கும் அரசு பஸ்சிலும் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்கள்.

    இதே போல் அனுசியா என்பவர் பெங்களூரு, சேலம் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றுகிறார். தருமபுரியில் 2 பெண்கள் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகின்றனர். வாரிசு வேலையின் அடிப்படையில் இந்த பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

    ×