search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயலாளர்"

    • வளர்ச்சி பணிகளுக்காக பொது நிதி யிலிருந்து சுமார் ரூ. 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இரணியல்:

    நெய்யூர் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்காக பொது நிதி யிலிருந்து சுமார் ரூ. 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா பேரூராட்சிக்குட்பட்ட அந்தந்த பகுதிகளில் நடந்தது. பேரூராட்சி தலைவி பி.வி பிரதீபா தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் ஷீலா, அஜின், ஆசிரியர் மேரி லில்லி புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பென் டேவிட் வரவேற்றார்.

    9-வது வார்டு பிலாபிளை செல்லும் சாலையில் அலங்கார கற்கள் பதிக்கும் பணிக்கு ரூ.2 லட்சமும், 8 மற்றும் 9-வது வார்டு குழிவிளையில் இருந்து எரிவிளாகம் பம்பு ரூம் செல்லும் சாலை வரை சாலை சீரமைப்பு ரூ. 9.75 லட்சத்திலும், 14-வது வார்டு இடையன்விளை கிணறு வடக்குபக்கம் முதல் குளம் வரை வடிகால் அமைப்பதற்கு ரூ.4 லட்சத்திலும், 3-வது வார்டு முரசன்கோடு ஆர்சி சர்ச் குறுக்குசாலையில் சிமெண்ட் தளம் அமைக்க ரூ. 6.50 லட்சத்திலும், 7-வது வார்டுக்குட்பட்ட பாதிரிகோடு முதல் முரசங்கோடு இணைப்பு சாலை சீரமைப்பு ரூ. 9.85 லட்சத்திலும் உள்ள பணிகளை குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற தொகுதி தி.மு.க. மேற்பார்வையாளர் உசிலம்பட்டி அருண், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்டனர்.
    • கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள மறுகால் ஓடை மற்றும் பொதுமக்கள் குளிக்கும் படித்துறை உடைந்து சேதம் அடைந்த நிலையில் பல ஆண்டுகளாக பராமரிக்கப் படாமல் கிடந்தது. இதனால் பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்ட னர். இதைத் தொடர்ந்து குளத்தின் படித்துறை மற்றும் மறுகால் ஓடையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று சமூக ஆர்வலர் வக்கீல் சந்திர சேகரன் ஏற்பாட்டில் மறு கால் சீரமைப்பு பணி தொடங்கியது.

    இந்த பணியை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி துணை தலைவி விமலா, நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மதி, காங்கிரஸ் வட்டார துணை தலைவர் அரி கிருஷ்ண பெருமாள், தி.மு.க. நிர்வா கிகள் முருகன், சாமிநாதன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்
    • மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சமையல் தொழிலாளி அர்ஜூன் (27) மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் அருகே உள்ள கீழகிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63), ஓய்வு பெற்ற கூட்டுறவு கடன் சங்க செயலாளர்.

    இவர், நேற்று மாலை வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மேலகிருஷ்ணன் புதூர் சென்றார். பின்னர் அவர் புத்தளம் சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியே ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.சாலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த ராஜேந்திரன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி விஜயலட்சுமி, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி அர்ஜூன் (27) மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக வி.கே.சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
    • நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகளுக் கான அமைப்பு தேர்தல் நடந்தது. தேர்தல் ஆணை யாளர் மகபூப்ஜான், பார்வையாளர்கள் வக்கீல் ஆசைத் தம்பி, பாஸ்கர சேதுபதி ஆகியோர் தேர்தலை நடத்தினர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக வி.கே.சுரேஷ் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பேட்ரிக், ஆலோசனை குழு உறுப்பினர் குணா, மாநில இளைஞரணி துணை செயலாளர் கராத்தே பழனிச்சாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர் வாகிகள் சால்வை அணி வித்து வாழ்த்து தெரி வித்தனர்.

    ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக தேர்வு செய் யப்பட்டுள்ள வி.கே.சுரேஷ் ம.தி.மு.க. தொடங்கப் பட்ட காலத்தில் இருந்தே அந்த கட்சியில் இணைந்து தீவிர களப்பணியாற்றி வருகிறார். இவர் மாவட்ட இளைஞரணி செய லாளர், மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் பெருவாரியான இளைஞர்கள் ம.தி.மு.க. வில் இணைவதற்கு முக்கிய பங்கு வகித்த வர்களில் இவர் குறிப்பி டத்தக்கவர். இவரது திருமண விழாவில் வைகோ கலந்து கொண்டு தலை மையேற்று நடத்தி வைத்தார்.

    இவர் கட்சி பணியை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருவதால் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பல முறை இவரை பாராட்டி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக வி.கே.சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
    • துரை வைகோவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. புதிய மாவட்ட பொறுப்பாளர்களுக்கான தேர்தல், ஒழுங்கு நடவ டிக்கை குழு உறுப்பினர் மகப்பூப்ஜான் தலைமையில் நடந்தது. நிர்வாகிகளாக தேர்வு பெற்றவர்களை முன்னாள் மாவட்ட செயலாளர் பேட்ரிக் முன்னிலையில் அறிவித்தனர்.

    மாவட்ட அவைத் தலைவராக பிரகாசம், மாவட்ட செயலாளராக வி.கே.சுரேஷ், பொரு ளாளராக ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலா ளர்கள் மங்களேசுவரி, சரவணன், பிச்சை, குகநாதன், பாஸ்கரன், மாவட்ட தலைமை உறுப்பி னர்களான சுபாஷ், செந்தில், நித்தியானந்தம், சத்தியேந்திரன், மனோகரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இவர்களை ஒருமனதாக தேர்வு செய்த தொண்டர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் ம.தி.மு.க. தலைவர் வைகோவுக்கும், தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • 5-வது அமைப்புத்தேர்தல் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

     திருப்பூர் :

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கான 5-வது அமைப்புத்தேர்தல் திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக ம.தி.மு.க.தேர்தல் பணி துணைச்செயலாளர் அ.சேதுபதி, துணை ஆணையாளர்களாக கோவை மாநகர இளைஞரணி துணை செயலாளர் தங்கவேல், கோவை பகுதி செயலாளர் விஸ்வராஜ் ஆகியோர் செயல்பட்டனர்.

    இதில் மாநகர் மாவட்ட செயலாளராக ஆர்.நாகராஜ் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி மாநகர் மாவட்ட அவைத்தலைவராக நேமிநாதன், மாநகர் மாவட்ட செயலாளராக ஆர்.நாகராஜ், பொருளாளராக நல்லூர் மணி என்ற சண்முகசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினராக சக்திவேல், துணை செயலாளர்களாக குமார், தாமோதரன், வழக்கறிஞர் தமயந்தி கந்தசாமி, பூபதி, பொதுக்குழு உறுப்பினர்களாக சதீஷ்குமார், ராமசாமி, கவுரிசங்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமையில் புதிய நிர்வாகிகள் உள்பட கட்சி நிர்வாகிகள் அனைவரும் ரெயில்நிலையம் அருகே உள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கு சென்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள். இதில் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.மணி, பல்லடம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், மாநில மகளிரணி துணை செயலாளர் சாந்தாமணி உள்பட மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • தறி ஒன்றுக்கு 1.35 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
    • தறி ஒன்றுக்கு 50 சதவீதம் என 67,500 ரூபாய் மானியம் வழங்க உத்தேசித்துள்ளது.

    மங்கலம் :

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறிகள் பல ஆண்டுகளாக நவீனப்படுத்தப்படாமல் உள்ளன.

    இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:- பாரம்பரியமாக விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளோர், போதிய வருவாய் இன்றி தறிகளை நவீனப்படுத்த முடியாமல் உள்ளனர். சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்த தறி ஒன்றுக்கு 1.35 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதன் மூலம் உற்பத்தி திறன் நான்கு மடங்கு அதிகரிக்கும். தமிழக அரசு சார்பில் விசைத்தறிகளை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு தறி ஒன்றுக்கு 50 சதவீதம் என 67,500 ரூபாய் மானியம் வழங்க உத்தேசித்துள்ளது.

    முதல் கட்டமாக இத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் விசைத்தறிகளுக்கு 67.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக சட்டசபை மானிய கோரிக்கையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்குவது போல் மத்திய அரசும் விசைத்தறிகளை நவீனப்படுத்த மானியம் வழங்கினால் உற்பத்தி அதிகரித்து விசைத்தறி தொழில் வளர்ச்சி பெறும். விசைத்தறியாளர் வாழ்வாதாரம் மேம்ப மத்திய அரசு தறிகளை நவீனப்படுத்த மானியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சகோ தர துறைகள் மூலம் செயல்ப டுத்தப்படும் திட்டங்கள் குறித்து தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தேக்கு மரக்கன்றுகள் மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசன திட்ட வயல்கள் மற்றும் மக்காச்சோ ளம், தென்னை வயல்களை கள ஆய்வு செய்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சகோ தர துறைகள் மூலம் செயல்ப டுத்தப்படும் திட்டங்கள் குறித்து தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் சமயமூர்த்தி, கள ஆய்வு மேற்கொண்டார்.

    அதன்படி, வெண்ணந்தூர் வட்டாரம், தொட்டியவலசு கிராமத்தில் தமிழ்நாடு விவசாய நிலங்க

    ளில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்க

    திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள மகாகனி, தேக்கு மரக்கன்றுகள் மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசன திட்ட வயல்கள் மற்றும் மக்காச்சோ ளம், தென்னை வயல்களை கள ஆய்வு செய்தார்.

    நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி

    திட்டத்தின் கீழ், ஊனாந்தாங்கல் கிராம

    பஞ்சாயத்தில் உருவாக்கப்பட்டுள்ள தரிசு நில தொகுப்புகளை ஆய்வு செய்தார்.

    விளை பொருட்களை தேசிய மின்னணு சந்தை மூலம் சந்தைப்படுத்துதல் குறித்து நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுச்சத்திரம் வட்டாரம் நவணி கிராமத்தில் "இ"-

    வாடகை செயலியின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடத்தில் கலந்து ரையாடல் நடைபெற்றது.

    ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் முருகேசன், வேளாண்மை துணை இயக்குநர் (மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்) முருகன், தோட்டக்கலை துணை இயக்குநர் கணேசன், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குநர் நாசர், வேளாண்மை துணைஇயக்குநர்கள், உதவி இயக்கு நர்கள், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், வேளாண் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • தி.மு.க. மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
    • பத்மநாபனை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் தி.மு.க. மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

    இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவரும், ஏற்கனவே திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்த இல.பத்மநாபன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபனை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச. சார்பில் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில், மாவட்ட தலைவர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபனை நேரில் சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் டாஸ்மாக் தொ.மு.ச. மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    • ஆண்டிபாளையம்- பி. முருகசாமி, வீரபாண்டி- அ. கோவிந்தராஜ், முத்தணம்பாளையம்- எஸ். என். குமார்.
    • 15 வேலம்பாளையம்- கொ. ராமதாஸ், அண்ணா காலனி- அ. நாகராஜன், பாண்டியன்நகர்- வெ. ஜோதி.

    சென்னை:

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்விவரம் வருமாறு:-

    அவைத்தலைவர்- க. நடராசன், செயலாளர்- க. செல்வராஜ், துணைச்செயலாளர்கள் (பொது) குமார், (ஆதிதிராவிடர்) சொ. சேகர், (மகளிர்) ஜி.கே. நந்தினி, பொருளாளர்- க. சாமிநாதன்.

    தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்

    க. சரவணன், சி. கோவிந்தசாமி, ப.கு. கனகராஜ், பா. குணராஜ்.

    பொதுக்குழு உறுப்பினர்கள்

    ஆர். தங்கவேல், ப. சண்முகசுந்தரம், எம். எம். மஸ்ஊது, அ. அப்துல்ரகுமான், மு. முகமதுரபி, மு. நாச்சிமுத்து, செ. உமாமகேஸ்வரி.

    ஒன்றிய செயலாளர்கள்

    திருப்பூர் வடக்கு-என். விஸ்வநாதன், திருப்பூர் தெற்கு- பி. விஸ்வலிங்கசாமி, பொங்கலூர் கிழக்கு-சா. பாலுசாமி, பொங்கலூர் மேற்கு- பி. அசோகன்,

    நகரச்செயலாளர்கள்

    பல்லடம்- என். ராஜேந்திரகுமார்.

    பகுதி செயலாளர்கள்

    15 வேலம்பாளையம்- கொ. ராமதாஸ், அண்ணா காலனி- அ. நாகராஜன், பாண்டியன்நகர்- வெ. ஜோதி, கொங்குநகர்- ஆர். சம்பத்குமார், வாலிபாளையம்- மு.க. உசேன், நல்லூர்- மேங்கோ. அ. பழனிசாமி, கருவம்பாளையம்- வி. எ. அய்யப்பன், ஆண்டிபாளையம்- பி. முருகசாமி, வீரபாண்டி- அ. கோவிந்தராஜ், முத்தணம்பாளையம்- எஸ். என். குமார்.

    ×