என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
- வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சகோ தர துறைகள் மூலம் செயல்ப டுத்தப்படும் திட்டங்கள் குறித்து தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
- தேக்கு மரக்கன்றுகள் மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசன திட்ட வயல்கள் மற்றும் மக்காச்சோ ளம், தென்னை வயல்களை கள ஆய்வு செய்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சகோ தர துறைகள் மூலம் செயல்ப டுத்தப்படும் திட்டங்கள் குறித்து தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் சமயமூர்த்தி, கள ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, வெண்ணந்தூர் வட்டாரம், தொட்டியவலசு கிராமத்தில் தமிழ்நாடு விவசாய நிலங்க
ளில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்க
திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள மகாகனி, தேக்கு மரக்கன்றுகள் மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசன திட்ட வயல்கள் மற்றும் மக்காச்சோ ளம், தென்னை வயல்களை கள ஆய்வு செய்தார்.
நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி
திட்டத்தின் கீழ், ஊனாந்தாங்கல் கிராம
பஞ்சாயத்தில் உருவாக்கப்பட்டுள்ள தரிசு நில தொகுப்புகளை ஆய்வு செய்தார்.
விளை பொருட்களை தேசிய மின்னணு சந்தை மூலம் சந்தைப்படுத்துதல் குறித்து நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுச்சத்திரம் வட்டாரம் நவணி கிராமத்தில் "இ"-
வாடகை செயலியின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடத்தில் கலந்து ரையாடல் நடைபெற்றது.
ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் முருகேசன், வேளாண்மை துணை இயக்குநர் (மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்) முருகன், தோட்டக்கலை துணை இயக்குநர் கணேசன், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குநர் நாசர், வேளாண்மை துணைஇயக்குநர்கள், உதவி இயக்கு நர்கள், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், வேளாண் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்