மேலகிருஷ்ணன்புதூரில் மோட்டார் சைக்கிள் மோதி கூட்டுறவு சங்க செயலாளர் சாவு

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சமையல் தொழிலாளி அர்ஜூன் (27) மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலகிருஷ்ணன்புதூரில் மோட்டார் சைக்கிள் மோதி கூட்டுறவு சங்க செயலாளர் சாவு
Published on

கன்னியாகுமரி :

நாகர்கோவில் அருகே உள்ள கீழகிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63), ஓய்வு பெற்ற கூட்டுறவு கடன் சங்க செயலாளர்.

இவர், நேற்று மாலை வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மேலகிருஷ்ணன் புதூர் சென்றார். பின்னர் அவர் புத்தளம் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியே ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.சாலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த ராஜேந்திரன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி விஜயலட்சுமி, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி அர்ஜூன் (27) மீது வழக்குப்பதிவு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com