என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devajit Saikia"

    • பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரான ஏசிசி தலைவரிடமிருந்து நாங்கள் கோப்பையை வாங்கமுடியாது.
    • கோப்பை அவரது கைகளிலிருந்து வரக்கூடாது, ஆனால் வர வேண்டும் என கூறினார்.

    சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது.

    இதையடுத்து, அந்தக் கோப்பையை மோசின் நக்வி கொண்டு சென்றார். இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர். இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐயும் வலியுறுத்தியது.

    அதற்குப் பதிலளித்த நக்வி, கோப்பையை தாம்தான் வழங்குவேன் எனவும் வரும் நவம்பர் 10-ம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்துகொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஆசிய கோப்பையை அவரது கைகளிலிருந்து வாங்க மாட்டோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சில்-ஐ அணுகி 10 நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் எந்தவித நல்ல பதிலும் வரவில்லை. நாங்கள் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம். அதனால் நவம்பர் மாதம் 4-ந் தேதி நடக்கும் ஐசிசி ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து பிரச்சனைகளை எழுப்ப உள்ளோம்.

    ஆசிய கோப்பை எங்களிடம் வரும். அது நிச்சயம். ஏனென்றால் அதனை இந்தியா வென்றுள்ளது. நாங்கள் அதை அவரிடமிருந்து (மொஹ்சின் நக்வி) வாங்க வேண்டியிருந்தால், இறுதிப் போட்டியின் போதே வாங்கிருப்போம்.

    எங்கள் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளது. நாங்கள் அவரிடமிருந்து அதை வாங்க விரும்பவில்லை. எனவே, பிசிசிஐயின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரான ஏசிசி தலைவரிடமிருந்து நாங்கள் கோப்பையை வாங்கமுடியாது. எனவே, கோப்பை அவரது கைகளிலிருந்து வரக்கூடாது, ஆனால் வர வேண்டும்.

    என பிசிசிஐ செயலாளர் கூறினார்.

    • ரோகித் சர்மா ஒருநாள் போட்டிக்கு மட்டுமே தற்போது கேப்டனாக இருக்கிறார்.
    • ரோகித் சர்மாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐய்யரை கேப்டனாக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    மும்பை:

    இந்திய கிரிகெட் அணியின் 3 நிலைக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றி வந்தார்.

    கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்றதோடு அவர் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். இதனால் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிக்கு மட்டுமே தற்போது கேப்டனாக இருக்கிறார்.

    இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐய்யரை கேப்டனாக நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்த செய்தி பொய்யானது என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மறுத்துள்ளார். இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கோலி, ரோகித் டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர்.
    • இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறார்கள்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் முன்னணி வீரர்கள் என்பதால் அவர்களுக்கு ஏ+ கிரேடில் ரூ.7 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் அவர்கள் ஓய்வு பெற்று விட்டதால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறார்கள். இதனால் அவர்களின் ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ. மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், இதன் காரணமாக இருவரும் ரூ. 5 கோடி சம்பளம் உள்ள ஏ அல்லது ரூ.3 கோடி சம்பளம் உள்ள பி கிரேடுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்நிலையில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர்களின் A+ கிரேடு ஒப்பந்தம் தொடரும் என பிசிசிஐ-யின் செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர்களின் A+ கிரேடு ஒப்பந்தம் தொடரும். அவர்கள் இன்னும் இந்திய கிரிக்கெட்டின் ஒரு பகுதியாகவே உள்ளனர், அவர்களுக்கு A+ கிரேடு வசதிகள் அனைத்தும் கிடைக்கும்.

    இவ்வாறு பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார்.

    • ஐசிசி முன்னாள் தலைவர் கிரேக் பார்க்லே பதவிக்காலம் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவந்தது.
    • இதையடுத்து, ஐசிசி புதிய தலைவராக ஜெய் ஷா சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. முன்னாள் தலைவரான கிரேக் பார்க்லேயின் பதவிக் காலம் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவந்தது. இதையடுத்து, புதிய தலைவராக ஜெய் ஷா கடந்த ஒன்றாம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

    ஐ.சி.சி. தலைவரான ஜெய்ஷா தனது முதல் அறிக்கையில், ஐசிசி இயக்குநர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. உலகளவில் கிரிக்கெட்டை மிகவும் பிரபலமாக்குவதையும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதை தயார் செய்வதையும் வலியுறுத்தினார். பெண்கள் விளையாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

    இதைத் தொடர்ந்து, அடுத்த பி.சி.சி.ஐ. செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த 45 நாட்களுக்குள் புதிய செயலாளரை நியமிக்க வேண்டிய காலக்கெடுவில் பிசிசிஐ உள்ளது.

    இந்நிலையில், பி.சி.சி.ஐ.யின் இணை செயலாளரான தேவஜித் சைகியா தற்காலிக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி அறிவித்துள்ளார்.

    • பிசிசிஐ செயலாளராக இருந்த ஐசிசி-யின் புதிய தலைவராக கடந்த 1-ந் தேதி பொறுப்பேற்றார்.
    • சைகியா இதற்கு முன்னர் இணை செயலாளர் பதவியில் இருந்தார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக இருந்த ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக கடந்த 1-ந் தேதி பொறுப்பேற்றார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய செயலாளரை நியமிக்க வேண்டியுள்ளது கிரிக்கெட் வாரிய விதிப்படி இந்த பதவியை 45 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும்.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியாவை தலைவர் ரோஜர் பின்னி நியமித்துள்ளார். சைகியா இதற்கு முன்னர் இணை செயலாளர் பதவியில் இருந்தார். புதிய செயலாளரை தேர்ந்தெடுக்கும் வரையில் இவர் இந்த பதவியில் தொடர உள்ளார்.

    • தேவஜித் சைகியா இடைக்கால செயலாளராக இருந்து வருகிறார்.
    • செயலாளர் பதவிக்கு இவரை தவிர மற்ற யாரும் விண்ணப்பம் செய்யவில்லை.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்தவர் ஜெய் ஷா. இவர் ஐசிசி தலைவராக தேர்வானதால் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். இதனால் தேவஜித் சகியா இடைக்கால செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    அதேபோல் பொருளாளராக இருந்த ஆஷிஷ் ஷெலார் மகாராஷ்டிரா மாநில மந்திரியாகிவிட்டார்.

    இதனால் இந்த இரண்டு பதவிகளும் காலியாக இருந்தன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்று மாலை 4 மணி வரை விண்ணப்பிக்க முடியும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் தேவஜித் சைகியா செயலாளர் பதவிக்கும், பிரப்தேஜ் பாட்டியா பொருளாளர் பதவிக்கும் விண்ணப்பித்திருந்தனர். மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் தேவஜித் சைகியா பொருளாளராகவும், பிரப்தேஜ் பாடியா பொருளாளராகவும் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.

    ×