என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய கிரிக்கெட் கவுன்சில்"

    • பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரான ஏசிசி தலைவரிடமிருந்து நாங்கள் கோப்பையை வாங்கமுடியாது.
    • கோப்பை அவரது கைகளிலிருந்து வரக்கூடாது, ஆனால் வர வேண்டும் என கூறினார்.

    சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது.

    இதையடுத்து, அந்தக் கோப்பையை மோசின் நக்வி கொண்டு சென்றார். இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர். இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐயும் வலியுறுத்தியது.

    அதற்குப் பதிலளித்த நக்வி, கோப்பையை தாம்தான் வழங்குவேன் எனவும் வரும் நவம்பர் 10-ம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்துகொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஆசிய கோப்பையை அவரது கைகளிலிருந்து வாங்க மாட்டோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சில்-ஐ அணுகி 10 நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் எந்தவித நல்ல பதிலும் வரவில்லை. நாங்கள் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம். அதனால் நவம்பர் மாதம் 4-ந் தேதி நடக்கும் ஐசிசி ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து பிரச்சனைகளை எழுப்ப உள்ளோம்.

    ஆசிய கோப்பை எங்களிடம் வரும். அது நிச்சயம். ஏனென்றால் அதனை இந்தியா வென்றுள்ளது. நாங்கள் அதை அவரிடமிருந்து (மொஹ்சின் நக்வி) வாங்க வேண்டியிருந்தால், இறுதிப் போட்டியின் போதே வாங்கிருப்போம்.

    எங்கள் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளது. நாங்கள் அவரிடமிருந்து அதை வாங்க விரும்பவில்லை. எனவே, பிசிசிஐயின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரான ஏசிசி தலைவரிடமிருந்து நாங்கள் கோப்பையை வாங்கமுடியாது. எனவே, கோப்பை அவரது கைகளிலிருந்து வரக்கூடாது, ஆனால் வர வேண்டும்.

    என பிசிசிஐ செயலாளர் கூறினார்.

    • ஆசிய கோப்பை போட்டியின் மொத்தம் 13 போட்டிகளில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடந்துவிட்டது.
    • 9 போட்டிகள் இலங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 30-ந் தேதி பாகிஸ்தானில் உள்ள முதல்தான் நகரில் தொடங்கியது.

    இந்திய போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்றன. பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால் இந்தியா விளையாடும் போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டது.

    6 லீக் ஆட்டத்தில் 3 ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் நடைபெற்றது. 3 போட்டிகள் இலங்கையில் நடந்தது. சூப்பர்-4 சுற்றின் 6 போட்டிகளில் முதல் ஆட்டம் பாகிஸ்தானில் நேற்று நடந்தது. சூப்பர்-4 சுற்றின் எஞ்சிய 5 ஆட்டங்களும், இறுதிப்போட்டியும் இலங்கையில் உள்ள கொழும்பில் நடக்கிறது.

    ஆசிய கோப்பை போட்டியின் மொத்தம் 13 போட்டிகளில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடந்துவிட்டது. 9 போட்டிகள் இலங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    ஆசிய கோப்பை போட்டியை இலங்கையில் நடத்தியதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி.) தெரிவித்துள்ளது.

    இதற்கு இழப்பீடு கேட்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையிட்டுள்ளது.

    இதுகுறித்து பி.சி.பி. அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஸ்ரப் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி) தலைவர் ஜெய்ஷாவுக்கு இழப்பீடு கோரிக்கையை கோடிட்டு முறைப்படி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏ.சி.சி.யின் மற்ற நிர்வாக குழு உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இடங்களை மாற்றுவதற்கான கடைசி நிமிட முடிவுகளை எடுத்ததற்கு யார் பொறுப்பு என்று அவர் தனது கடிததத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    போட்டிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்த முக்கிய முடிவுகளில் பாகிஸ்தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.

    பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எவ்வாறு பதில் அளிக்க போகிறது மற்றும் இழப்பீடு ஏதேனும் வழங்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

    ×