என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கோலி- ரோகித் A+ கிரேடு ஒப்பந்தத்தில் தொடர்வார்கள்- பிசிசிஐ செயலாளர்
- கோலி, ரோகித் டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர்.
- இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறார்கள்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் முன்னணி வீரர்கள் என்பதால் அவர்களுக்கு ஏ+ கிரேடில் ரூ.7 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் அவர்கள் ஓய்வு பெற்று விட்டதால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறார்கள். இதனால் அவர்களின் ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ. மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், இதன் காரணமாக இருவரும் ரூ. 5 கோடி சம்பளம் உள்ள ஏ அல்லது ரூ.3 கோடி சம்பளம் உள்ள பி கிரேடுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர்களின் A+ கிரேடு ஒப்பந்தம் தொடரும் என பிசிசிஐ-யின் செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர்களின் A+ கிரேடு ஒப்பந்தம் தொடரும். அவர்கள் இன்னும் இந்திய கிரிக்கெட்டின் ஒரு பகுதியாகவே உள்ளனர், அவர்களுக்கு A+ கிரேடு வசதிகள் அனைத்தும் கிடைக்கும்.
இவ்வாறு பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார்.






