என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித்துக்கு பதில் ஷ்ரேயாஸ்? விளக்கம் அளித்த பிசிசிஐ செயலாளர்
    X

    ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித்துக்கு பதில் ஷ்ரேயாஸ்? விளக்கம் அளித்த பிசிசிஐ செயலாளர்

    • ரோகித் சர்மா ஒருநாள் போட்டிக்கு மட்டுமே தற்போது கேப்டனாக இருக்கிறார்.
    • ரோகித் சர்மாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐய்யரை கேப்டனாக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    மும்பை:

    இந்திய கிரிகெட் அணியின் 3 நிலைக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றி வந்தார்.

    கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்றதோடு அவர் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். இதனால் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிக்கு மட்டுமே தற்போது கேப்டனாக இருக்கிறார்.

    இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐய்யரை கேப்டனாக நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்த செய்தி பொய்யானது என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மறுத்துள்ளார். இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×