search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தின் பணியை பாராட்டிய அரசு முதன்மை செயலாளர்
    X

    தஞ்சை மாநகராட்சி அலுவலக தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி ஆய்வு செய்தார்.

    தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தின் பணியை பாராட்டிய அரசு முதன்மை செயலாளர்

    • கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு தொடர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது.
    • 1,090 கர்ப்பிணிகளில் 600 கர்ப்பிணிகள் அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட கல்லுக்குளம், கரந்தை, மானம்புச்சாவடி மற்றும் சீனிவாசபுரம் ஆகிய 4 இடங்களில் உள்ள நகர்புற சுகாதார நிலையங்களில் தற்போது கர்ப்பகால பரிசோதனைகள் செய்து வரும் 1,090 கர்ப்பிணிகளில் 600 கர்ப்பிணிகள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை, தைராய்டு மற்றும் முந்தைய பிரசவ அறுவை சிகிச்சை போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதம் முதல் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக இயங்கி வரும் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தின் வழியாக கண்காணி க்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் நகர்புற ஆரம்ப சுகாதார செவிலியர்களுக்கு சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு தொடர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிவப்பு நிறத்தை பச்சை நிறமாக மாற்றிய விவரங்கள் மீண்டும் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பி கண்காணிக்கப்படுகிறது.

    இந்தநிலையில் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது இந்த தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகளை பாராட்டினார்.

    ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) திலகம், துணை இயக்குநர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர். மாநகர்நல அலுவலர் சுபாஷ் காந்தி, தாய்சேய் நல கண்காணிப்பு மைய செயல்பாடுகளை விளக்கி கூறினார்.

    முன்னதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி, கல்லுக்கு ளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

    Next Story
    ×