என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி
- கறம்பக்குடி பேரூராட்சி வார்டுகளில் ரூ.1.7 கோடியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது
- பச்ச நாயகம் குளக்கரை அருகே நடந்த பூமி பூஜையில் பேரூராட்சி தலைவர் முருகேசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பல்வேறு வார்டுகளில் பிளாக் சாலை அமைப்பது உள்ளிட்ட ரூ.1.7 கோடி திட்டபணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.கறம்பக்குடி பேரூராட்சி 9வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பச்சநாயகம் குளக்கரை அருகே நடைபெற்ற பூமி பூஜையில் கறம்பக்குடி தேர்வுநிலை பேரூராட்சி திமுக தலைவர் உ.முருகேசன் கலந்து கொண்டார். விழாவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் 9வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் ராஜா மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களான வளர்மதி கருப்பையா, செண்பகவள்ளி, முருகேஸ்வரி ராஜசேகர், பேரூராட்சி அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் பேரூராட்சி பொறியாளர் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






