search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajinikanth"

    • மஞ்சும்மல் பாய்ஸ் படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.
    • இந்த மைல்கல்லை எட்டிய முதல் மலையாளப் படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது.

    சென்னை:

    கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அன்று வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீநாத் பாஸி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்தப் படம் வெளியாகி தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் மஞ்சும்மல் பாய்ஸ் வெற்றி பெற்றது. மஞ்சும்மல் பாய்ஸ் படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, அந்த மைல்கல்லை எட்டிய முதல் மலையாளப் படம் என்ற பெருமையைப் பெற்றது.

    தமிழ் சினிமா பிரபலங்களும் மஞ்சும்மல் பாய்ஸை கொண்டாடத் தவறவில்லை. படத்தைப் பார்த்த நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினர்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வசூல் ரீதியிலும் இந்த படம் லாபகரமாக அமைந்தது.
    • இந்த படம் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

    தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியிலும் இந்த படம் லாபகரமாக அமைந்தது.

    இந்த நிலையில், லியோ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. எனினும், இந்த படம் தொடர்பாக வேறு எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

    அந்த வகையில், ரஜினிகாந்த் 171 படம் தொடர்பான புது அப்டேட்-ஐ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு உள்ளார். அப்டேட் உடன் "தலைவர் 171" படத்திற்கான ரஜினிகாந்த் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்தை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பகிர்ந்து இருக்கிறார்.

    மேலும், தலைவர் 171 படத்தின் தலைப்பு கொண்ட டீசர் வீடியோ ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உள்ளார். யாரும் எதிர்பாராத நேரத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    மேலும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த் தனது மகள்கள் ஐஸ்வர்யா,சௌந்தர்யா,பேரக்குழந்தைகளுடன் வண்ணப்பொடிகளை தூவி 'ஹோலி' கொண்டாடிய புகைப்படங்களை சவுந்தர்யா பகிர்ந்துள்ளார்.
    • சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மகன்கள் வேத் மற்றும் வீர் ஆகியோருடன் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உற்சாக 'போஸ்' கொடுத்த புகைப்படம் மற்றும் "ஹேப்பி ஹோலி " என்று பதிவிட்டு உள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஹோலி- 2024 கொண்டாடினார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    ரஜினிகாந்த் தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் உற்சாகமாக வண்ணப்பொடிகளை தூவி 'ஹோலி' கொண்டாடிய புகைப்படங்களை அவரது மகள் சவுந்தர்யா இணைய தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    1975- ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' படம் மூலம் சினிமா நடிகராக அறிமுகமான 'சிவாஜி ராவ் சினிமாவுக்காக 'ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டப்பட்டது இதே நாள் என்பதால் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு 'ஹோலி' பண்டிகை தினம் சிறப்பு வாய்ந்ததாகும்.




    'ஹோலி' கொண்டாட்ட புகைப்படங்களை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் 'பழம்பெரும் இயக்குனர்பாலசந்தர் 'தாத்தா' அவர்களை இந்த நேரத்தில் நாம் தவறவிட்டு உள்ளோம்"என குறிப்பிட்டு உள்ளார்.

    மேலும் சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் அவர்களது மகன்கள் வேத் மற்றும் வீர் ஆகியோருடன் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உற்சாக 'போஸ்' கொடுத்த புகைப்படம் மற்றும் "ஹேப்பி ஹோலி " என்று இதயம் மற்றும் எமோஜிகளை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரில் பிறந்தார்.அவருக்கு 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்று பெற்றோர் பெயர் சூட்டினர். பெங்களூருவில் முதலில் 'கண்டக்டர்' பணி செய்தார்.அதன்பின் நடிப்பு ஆர்வத்தில் அவர் சென்னைக்கு வந்தார். 

    1975- ம் ஆண்டு பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார். 




    ரஜினி பல ஆண்டுகளாக சினிமாவில் ஒரு வலிமையான அசைக்க முடியாத சக்தியாக உள்ளார். ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் 'ஜெயிலர்' படத்தில் நடித்தார்.

    இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மிர்னா மேனன்.
    • மிர்னாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது

    நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2023-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர். இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ரஜினி முற்றிலும் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மிர்னா மேனன்.

    இவர், 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த 'பட்டதாரி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், மிர்னாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

    பின் 2020 ஆம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் வெளிவந்த 'பிக் பிரதர்'படத்தில் நடித்தார். 2023 ஆம் ஆண்டு க்ரேசி ஃபெல்லோ' மற்றும் உக்ரம் போன்ற படத்திலும் நடித்தார் மிர்னா மேனன்.

    இந்நிலையில் இன்று மிர்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பார்கோர் ஸ்டண்ட் பயிற்சி செய்வதுப் போன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஓடுவதும், குதிப்பதும், தலை கீழாக சுழலுவதும் பிரமிக்க வைக்கின்றது.

    தற்போது இப்பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் தென் தமிழக பகுதிகளான நெல்லை, குமரியில் நடந்தது
    • ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது

    ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கடந்த சில மாதங்களாக 'வேட்டையன்'  படத்தின் படப்பிடிப்புகள் தென் தமிழக பகுதிகளான நெல்லை, குமரியில் நடந்தது. அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பாவில் இதன் படப்பிடிப்புகள் நடந்தது.

    இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் முடிவடையும் என தெரிகிறது.

    இந்நிலையில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தை ரித்திகா சிங் பகிர்ந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

    இப்பதிவில், லெஜெண்ட்ரி தலைவர் ரஜினிகாந்த் அவருடைய அருளும், அவரது ஆத்மாவும், அவரது இருப்பும் நிஜமாகவே நிகரற்றது. இப்போது அவருடன் இணைந்து பணிபுரிந்து வருகிறேன். இந்த வாய்ப்புக்காக அவருக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • எர்லிங் ஹாலண்ட் குறித்த வீடியோ ஒன்றை மான்செஸ்டர் சிட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
    • அதில் நடிகர் ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் கார்டை வைத்து, தனது அணியின் நட்சத்திர வீரரான ஹாலண்டுக்கு வீடியோ தயார் செய்துள்ளது.

    இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து கிளப் மான்செஸ்டர் சிட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எர்லிங் ஹாலண்ட் குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தது. அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்தது.

    அதில் நடிகர் ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் கார்டை வைத்து, தனது அணியின் நட்சத்திர வீரரான ஹாலண்டுக்கு வீடியோ தயார் செய்துள்ளது. ஹாலண்ட் விளையாடி போட்டியின் ஹைலைட்ஸ் வீடியோவை எடிட் செய்து ஜெயிலர் படத்தின், 'Hukum' பாடலை வைத்து ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டிருந்தது. இது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த ரீல் மான்செஸ்டர் சிட்டியின் பரம எதிரியான மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களை ஈர்த்தது. மேலும் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள சர்வதேச வீரருக்கு ரஜினிகாந்த் படத்தில் இடம் பெற்ற பாடல் பயன்படுத்தப் பட்டிருப்பது அவரது ரசிகர்களையும் கால்பந்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    • ரஜினிகாந்த் சமீபத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.
    • ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் சமீபத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.

    வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

     


    இந்த நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலா ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில், "ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்ற இருப்பது உண்மையில் பெருமைக்குரிய விஷயம். இந்த மறக்க முடியாத பயணத்தை ஒன்றாக தொடங்குவதற்கு தயாராகும் போது எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது," என தெரிவித்துள்ளார்.



    • கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
    • லால் சலாம் படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளார்.

    தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இத்திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறாததால் சினிமாவிலிருந்து சிறுது காலம் அவர் விலகியிருந்தார்.

    இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து அவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

    லால் சலாம் படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளதாகவும், அந்த கதையை நடிகர் சித்தார்த்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது, கூடிய விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
    • ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் முடிவடையும் என தெரிகிறது.

    ரஜினி நடிக்கும் 'வேட்டையன்' படத்தை டைரக்டர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கடந்த சில மாதங்களாக 'வேட்டையன்'படத்தின் படப்பிடிப்புகள் தென் தமிழக பகுதிகளான நெல்லை, குமரியில் நடந்தது. அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பாவில் இதன் படப்பிடிப்புகள் நடந்தது. கடந்த 6 -ந்தேதி படப்பிடிப்பிற்காக ரஜினி ஐதராபாத் சென்றார்.

    இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் ரஜினி இன்று காலை ஐதராபாத்துக்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவரது ஸ்டைலான நடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மிகுந்த உற்சாக புன்சிரிப்புடன் ரஜினி ஐதராபாத்திற்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

    'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் முடிவடையும் என தெரிகிறது.

    • சசிகலா புதிய வீட்டில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினார்.
    • அங்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடைபெற்றது.

    இந்நிலையில், நேற்று அந்த வீட்டில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சசிகலா கொண்டாடினார். கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியாததால் நேற்று சசிகலா வீட்டிற்குச் சென்ற ரஜினிகாந்த் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், புதிய வீடு கோவில் மாதிரி உள்ளது. இந்த வீடு அவருக்கு பெயர், புகழ், மகிழ்ச்சி, நிம்மதி என அனைத்தையும் கொடுக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அரசியல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.

    • பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே கமல்ஹாசன் தோல்வியை தழுவினார்.
    • கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தீவிர தேர்தல் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தாங்கள் போட்டியிட உள்ள தொகுதிகளை கேட்டு பெறுவதில் தீவிரமாக உள்ளன. தி.மு.க. தொகுதி பங்கிட்டு குழுவினருடன் கூட்டணி கட்சிகள் நடத்திய முதல் கட்ட பேச்சு வார்த்தையில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கி உள்ளன.

    அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருப்பதாக கருதப்படும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இதுவரை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் அனுப்பப்படாமலேயே உள்ளது. இருப்பினும் கோவை தொகுதியை குறிவைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் காய் நகர்த்தி வருகிறார்கள். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் கோவை தொகுதியில் கணிசமான வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. இதையடுத்து கோவை தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று கமல்ஹாசன் நம்புகிறார். இதற்காகவே மக்கள் நீதி மய்யம் கட்சி கோவை தொகுதியை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது இன்னும் உறுதியாகாத நிலையில் கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தீவிர தேர்தல் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.

    இப்படி கோவை தொகுதியில் கமல் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தி.மு.க. சார்பில் அங்கு நடிகர் ரஜினிகாந்தின் மருமகனை வேட்பாளராக களம் இறக்கலாமா? என்பது பற்றி கட்சி தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பல்லடம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடியின் குடும்ப வாரிசு தான் ரஜினியின் மருமகனான விசாகன் ஆவார். பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன்தான் விசாகன். இவர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவை திருமணம் செய்து உள்ளார்.



    தி.மு.க. குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ற முறையிலும் ரஜினியின் மருமகன் என்கிற முறையிலும் பாராளுமன்றத் தேர்தலில் அவரை களம் இறக்கினால் நிச்சயம் வெற்றி உறுதி என்று தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். அதுபோன்று விசாகனை பாராளுமன்ற தேர்தல் களத்தில் நிறுத்தினால் ரஜினி ரசிகர்களும் அவரது வெற்றிக்காக உழைப்பார்கள். அனைத்து தரப்பு மக்களின் ஓட்டுகளும் கிடைக்கும் என்பது தி.மு.க.வினர் போடும் திட்டமாகவும் உள்ளது. கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க.வே செல்வாக்கு மிகுந்ததாக காணப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். இது போன்ற சூழலில் கோவை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று நிச்சயம் தங்களது செல்வாக்கையும் காட்ட தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதற்கு பரிச்சயமான ஒருவரை நிறுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று அந்த கட்சி கணக்கு போட்டுள்ளது. இதன் காரணமாகவே ரஜினியின் மருமகன் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்கிற தகவல் கோவை தொகுதியில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×