மிரட்டல் லுக்கில் ரஜினிகாந்த் - தலைவர் 171 அப்டேட் கொடுத்த லோகேஷ்

வசூல் ரீதியிலும் இந்த படம் லாபகரமாக அமைந்தது. இந்த படம் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
மிரட்டல் லுக்கில் ரஜினிகாந்த் - தலைவர் 171 அப்டேட் கொடுத்த லோகேஷ்
Published on

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியிலும் இந்த படம் லாபகரமாக அமைந்தது.

இந்த நிலையில், லியோ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. எனினும், இந்த படம் தொடர்பாக வேறு எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

அந்த வகையில், ரஜினிகாந்த் 171 படம் தொடர்பான புது அப்டேட்-ஐ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு உள்ளார். அப்டேட் உடன் "தலைவர் 171" படத்திற்கான ரஜினிகாந்த் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்தை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பகிர்ந்து இருக்கிறார்.

மேலும், தலைவர் 171 படத்தின் தலைப்பு கொண்ட டீசர் வீடியோ ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உள்ளார். யாரும் எதிர்பாராத நேரத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com