என் மலர்
நீங்கள் தேடியது "mirna"
- பதினெட்டு மைல்களுக்கு அப்பாலும் வானம் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை வெவ்வேறானது.
- '18 மைல்ஸ்' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.
பதினெட்டு மைல்களுக்கு அப்பாலும் வானம் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை வெவ்வேறானது. முடிவில்லாத கடல், அமைதி, தொலைவு, சொல்லப்படாத காதல் எனப் பல விஷயங்கள் இதில் இருக்கிறது. இவற்றை எல்லாம் பேசும் கடலோர காதல் கதை '18 மைல்ஸ்' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவான இந்த உணர்வு உங்கள் மனங்களை ஊடுருவி ஆன்மாவைத் தொடும். சித்து குமார் இசையமைப்பில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளார்.
கே எழில் அரசுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கவிதையாக விரியும். நாஷின் படத்தொகுப்பும் எம். தேவேந்திரனின் கலை வடிவமைப்பும் நம் உணர்வுகளை தாலாட்டும்.
இவற்றை எல்லாம் தாண்டி நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னாவுக்கு இடையிலான காதல் காலம் தாண்டியது. அவர்களின் பார்வையும் மெளனமும் கவிதையாக பார்க்கலாம். இசையின் கடைசி ரிதம் வரையிலும் பாடலை நம் மனதால் உணரலாம். இப்படத்தின் ஒரு முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இப்படம் ஒரு கடற்படை அதிகாரிக்கும் இலங்கை அகதிக்கும் இடையே உள்ள காதலை அடிப்படையாக உருவான திரைப்படமாகும்.
+2
- பதினெட்டு மைல்களுக்கு அப்பாலும் வானம் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை வெவ்வேறானது.
- அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவான இந்த உணர்வு உங்கள் மனங்களை ஊடுருவி ஆன்மாவைத் தொடும்
பதினெட்டு மைல்களுக்கு அப்பாலும் வானம் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை வெவ்வேறானது. முடிவில்லாத கடல், அமைதி, தொலைவு, சொல்லப்படாத காதல் எனப் பல விஷயங்கள் இதில் இருக்கிறது. இவற்றை எல்லாம் பேசும் கடலோர காதல் கதை '18 மைல்ஸ்' என்கிறது குழு.
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவான இந்த உணர்வு உங்கள் மனங்களை ஊடுருவி ஆன்மாவைத் தொடும். சித்து குமார் இசையமைப்பில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளார்.
கே எழில் அரசுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கவிதையாக விரியும். நாஷின் படத்தொகுப்பும் எம். தேவேந்திரனின் கலை வடிவமைப்பும் நம் உணர்வுகளை தாலாட்டும்.
இவற்றை எல்லாம் தாண்டி நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னாவுக்கு இடையிலான காதல் காலம் தாண்டியது. அவர்களின் பார்வையும் மெளனமும் கவிதையாக பார்க்கலாம். இசையின் கடைசி ரிதம் வரையிலும் பாடலை நம் மனதால் உணரலாம்.
இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறியதாவது "காதல் உலகமொழி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லைகளும் சர்வதேச நீர்நிலைகளும் காதலுக்கு இன்னும் ஒரு தடையாகவே இருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நிகழ்வு ஒன்றை காட்சி படுத்த விரும்பினேன். தற்காலிகமாக தங்குவதற்கு இடம் தேடும் ஒரு அகதி கடலின் சட்டத்தை இயற்றுபவரின் இதயத்தில் இடம் பிடிக்கிறார். மனிதர்களின் உணர்வுகளுக்கு கடலும் அதன் அலையும் மெளன சாட்சியாக எப்போதும் இருக்கும். கடலை போலவே காதல் அழகானது. அதே சமயத்தில் கடலின் ஆழத்தை போல ஆபத்தானதும் கூட! நிலம்தான் இங்கு அரசியல். உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் நிச்சயம் இந்த கதையுடன் இணைவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
- அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மிர்னா மேனன்.
- மிர்னாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2023-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர். இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ரஜினி முற்றிலும் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மிர்னா மேனன்.
இவர், 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த 'பட்டதாரி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், மிர்னாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.
பின் 2020 ஆம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் வெளிவந்த 'பிக் பிரதர்'படத்தில் நடித்தார். 2023 ஆம் ஆண்டு க்ரேசி ஃபெல்லோ' மற்றும் உக்ரம் போன்ற படத்திலும் நடித்தார் மிர்னா மேனன்.
இந்நிலையில் இன்று மிர்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பார்கோர் ஸ்டண்ட் பயிற்சி செய்வதுப் போன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஓடுவதும், குதிப்பதும், தலை கீழாக சுழலுவதும் பிரமிக்க வைக்கின்றது.
தற்போது இப்பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






