என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அசோக் செல்வன் - மிர்னா நடிக்கும் 18  Miles படத்தின் Prologue வெளியீடு!
    X

    அசோக் செல்வன் - மிர்னா நடிக்கும் 18 Miles படத்தின் Prologue வெளியீடு!

    • பதினெட்டு மைல்களுக்கு அப்பாலும் வானம் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை வெவ்வேறானது.
    • '18 மைல்ஸ்' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.

    பதினெட்டு மைல்களுக்கு அப்பாலும் வானம் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை வெவ்வேறானது. முடிவில்லாத கடல், அமைதி, தொலைவு, சொல்லப்படாத காதல் எனப் பல விஷயங்கள் இதில் இருக்கிறது. இவற்றை எல்லாம் பேசும் கடலோர காதல் கதை '18 மைல்ஸ்' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.

    சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவான இந்த உணர்வு உங்கள் மனங்களை ஊடுருவி ஆன்மாவைத் தொடும். சித்து குமார் இசையமைப்பில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளார்.

    கே எழில் அரசுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கவிதையாக விரியும். நாஷின் படத்தொகுப்பும் எம். தேவேந்திரனின் கலை வடிவமைப்பும் நம் உணர்வுகளை தாலாட்டும்.

    இவற்றை எல்லாம் தாண்டி நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னாவுக்கு இடையிலான காதல் காலம் தாண்டியது. அவர்களின் பார்வையும் மெளனமும் கவிதையாக பார்க்கலாம். இசையின் கடைசி ரிதம் வரையிலும் பாடலை நம் மனதால் உணரலாம். இப்படத்தின் ஒரு முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இப்படம் ஒரு கடற்படை அதிகாரிக்கும் இலங்கை அகதிக்கும் இடையே உள்ள காதலை அடிப்படையாக உருவான திரைப்படமாகும்.

    Next Story
    ×