நடிகை மிர்னாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ வைரல்

அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மிர்னா மேனன். மிர்னாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது
நடிகை மிர்னாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ வைரல்
Published on

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2023-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர். இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ரஜினி முற்றிலும் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மிர்னா மேனன்.

இவர், 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த 'பட்டதாரி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், மிர்னாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

பின் 2020 ஆம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் வெளிவந்த 'பிக் பிரதர்'படத்தில் நடித்தார். 2023 ஆம் ஆண்டு க்ரேசி ஃபெல்லோ' மற்றும் உக்ரம் போன்ற படத்திலும் நடித்தார் மிர்னா மேனன்.

இந்நிலையில் இன்று மிர்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பார்கோர் ஸ்டண்ட் பயிற்சி செய்வதுப் போன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஓடுவதும், குதிப்பதும், தலை கீழாக சுழலுவதும் பிரமிக்க வைக்கின்றது.

தற்போது இப்பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com